சாரு நிவேதிதா இங்கே எழுதியிருப்பதில் – எது உண்மை, எவ்வளவு உண்மை …?


தமிழில் எழுதும் எழுத்தாளர்களில் நிறையவே
வித்தியாசமானவர் திரு.சாரு நிவேதிதா…
ஒருவேளை தான் வித்தியாசமாகத் தெரியவேண்டும்
என்பதற்காகவே அப்படி எழுதுகிறாரோ …???

கதைகளிலும், நாவல்களிலும் அவர் எதை எழுதினாலும்,
அவை புனையப்பட்டவை தான் என்பது எல்லாருக்கும்
தெரியும் என்பதால், அவர் சொல்வது
நிஜமா… பொய்யா என்கிற கேள்வி எழாது.

ஆனால், அவர் நிறைய கட்டுரைகள் எழுதுகிறார்.
நிஜவாழ்க்கை சம்பவங்களைப்பற்றி கருத்துகள்
தெரிவிக்கிறார்…. பயணக்கட்டுரைகள் எழுதுகிறார்…

இந்த மாதிரி சமயங்களில் அவர் எழுதும்போது,
உண்மையையும், கற்பனைகளையும் தன் இஷ்டத்திற்கு
சேர்ந்து கலந்து தந்து விடுகிறார். எது உண்மை –
எந்த அளவு உண்மை – எது கற்பனை என்பது புரியாமல்
படிப்பவர்கள் குழம்பும் அளவிற்கும் அது போகிறது.

அண்மையில் இவர் பயணம் போனது தென் அமெரிக்க
நாடுகளுக்கு… அதைப்பற்றிய ஒரு பயணத் தொடர் கட்டுரை
எழுதுகையில் – சீனாவைப்பற்றி, சீன மக்களைப்பற்றி,
சீன அரசைப்பற்றி – நிறைய எழுதி இருக்கிறார்….
நம்பத்தகாத சில விஷயங்களையும் செய்தி போலவே
தந்திருக்கிறார்….

கீழே தந்திருக்கும் அந்த கட்டுரைப் பகுதிகளை
படித்துப் பாருங்களேன்…

………………………………

இப்போதெல்லாம் லட்சக்கணக்கான சீனர்கள் வர்த்தகம்
நிமித்தம், பணி நிமித்தம் – பல வெளிநாடுகளில் பயணம்
செய்கிறார்கள்; நிறைய பேர் வெளிநாடுகளில்
வேலை செய்கிறார்கள்; வசிக்கிறார்கள்;

ஆண்டுக்கு ஆண்டு, பிற நாடுகளிலிருந்து
சீனாவிற்கு செல்லும் டூரிஸ்டுகளின் எண்ணிக்கை
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
டூரிஸ்டுகளுக்கு தடையின்றி விசா வழங்கப்படுகிறது.

பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்திருக்கின்றன; பெரிய அளவில் முதலீடுகள்
செய்கின்றன.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அதிக அளவில்,
சீன மாணவர்கள் படிக்கிறார்கள். 2017-18 -ஆம் ஆண்டில்
மட்டுமே 3,60,000 சீன மாணவர்கள் புதிதாகச்
சேர்ந்திருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் தாய்நாட்டுடன் தொடர்பு இன்றியேவா
இருப்பார்கள்.. ? இவர்கள் சீனாவிற்கு போகவே மாட்டார்களா..?
வெளியுலக விவகாரங்களைப் பற்றி பேசவே மாட்டார்களா…?

படுக்கை அறையில் கணவன் பேசுவதை, மனைவி அரசுக்கு
உளவு சொல்ல வேண்டும் – என்றெல்லாம் கதைப்பது
அதீதமாக இல்லை…? சாரு இந்த கட்டுரையில் நிறையவே
தனது கற்பனைகளை உலவ விட்டிருக்கிறார் என்று
தோன்றுகிறது ; சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக,
உண்மையோடு-பொய்யை கலந்து எழுதலாமா…? இது அவரைப்
பற்றிய நம்பகத்தன்மையை வெகுவாக பாதிக்கும்.

லட்சக்கணக்கில் மக்கள் படிக்கும்,
ஒரு வெகுஜன வார இதழில் இவர் இப்படி பொய்களை
உண்மை போல் எழுதுவது, இவரது பின்னணியை அறியாமல்
புதிதாகப் படிக்கும் வாசகர்களிடையே தவறான கருத்துகளை
விதைக்காதா…?

சாருவின் பொறுப்பற்ற எழுத்துகளை அந்த வார இதழ்
கண்டுகொள்ளாமலே பிரசுரிக்கலாமா…?

விமரிசனம் தள வாசக நண்பர்களில் பலர் சீனாவிற்கு
சென்றிருக்கக்கூடும்; பலருக்கு சீன அனுபவங்கள்
இருக்கக்கூடும்.

அவர்களில் யாருக்காவது வசதிப்பட்டால் –
சாரு நிவேதிதாவின் கட்டுரையில் சீனா பற்றி
கூறப்பட்டிருப்பது எந்த அளவிற்கு உண்மை என்று
பின்னூட்டம் மூலம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அது, குறைந்த பட்சம் விமரிசனம் தள வாசகர்களாவது
இதுபற்றிய (நிஜ…!!!)உண்மைகளை தெரிந்துகொள்ள
உதவும்.

.
————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to சாரு நிவேதிதா இங்கே எழுதியிருப்பதில் – எது உண்மை, எவ்வளவு உண்மை …?

 1. புதியவன் சொல்கிறார்:

  //படுக்கை அறையில் கணவன் பேசுவதை, மனைவி அரசுக்கு உளவு சொல்ல வேண்டும்-இது கலாச்சாரப் புரட்சியின்போது என்று சொல்லியிருக்கிறார்// – ஒவ்வொரு உயிரும் அரசுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கவேண்டும் என்ற கொள்கையை மக்களின் மனதில் விளைத்து அதை நடைமுறைப்படுத்தியது சோவியத் யூனியன். அரசை அப்பா வீட்டில் குறை சொன்னால் பையன் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரிவித்து விசுவாசமாக இருப்பது, அதுபோலவே மனைவி – இது அங்கு சகஜமாக இருந்தது. அப்படிப்பட்ட பையனை, ஸ்பெஷல் பள்ளியில் சேர்த்து அரசு படிக்கவைக்கும், பிற்காலத்தில் அவனும் கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னேறுவான். இதைப்பற்றி நிறைய நான் படித்திருக்கிறேன் (அனுபவங்கள் புத்தகத்திலும்). ஆனால் சைனாவைப் பற்றி இவ்வாறு நான் கேள்விப்பட்டதில்லை. இதில் உண்மை இருக்க-அவர் கொஞ்சம் அதீதமாக படுக்கை அறை என்றெல்லாம் எழுதியிருக்கிறார், குமுதம் படம் போட வாய்ப்பிற்காக – வாய்ப்பு நிறையவே உண்டு. ‘அரசுக்கு விசுவாசம்’ என்பதைக் காண்பித்து கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராவது, உயர்வது சகஜமே.

  //விபச்சாரம்// – எந்த நாட்டு அரசையும்போல (தாய்லாந்த் போன்றவற்றைத் தவிர, வளர்ந்த நாடுகளான ப்ரான்ஸ், அமெரிக்கா… தவிர.. அவர்கள் இதனை உரிமை என்ற நோக்கில் பார்க்கிறார்கள்) வெளிப்படையான விஷயங்கள் நடக்க அரசு அனுமதிப்பதில்லை. ஆனால் இது இல்லாத நாடு பூவுலகில் இருக்காது.

  எனக்கு தாய்வான் நாட்டின் அனுபவம் உண்டு. Off late நிறைய டூரிஸ்டுகள், தங்கள் உரிமை பேரில் சைனாவிலிருந்து வருகிறார்கள் (நிறைய என்று குறிப்பிட்டிருப்பது வத வத வென). தாய்வான் மக்கள் டீசண்ட் ஆனவர்கள், சைனாவை ஒப்பிடும்போது-பல மடங்கு. தாய்வானில் எப்படி காலைல நம்மூர் கையேந்தி பவன், வளையல் etc கடைகள் போல செயல்படுகிறார்கள் என்றெல்லாம் எனக்கு எழுத எண்ணம்தான். அதற்காக படங்களெல்லாம் எடுத்தேன் அங்கு சென்றிருந்தபோது.

  சைனாவின் தொழிற்சாலைகள், குவாலிட்டி ஆஃப் எஜுகேஷன், பெரிய நகரங்களின் வளர்ச்சி, டூரிஸ்ட் இடங்களை பராமரிக்கும், வளர்க்கும் விதம், இன்ஃப்ராஸ்டிரக்சர் வளர்த்தெடுப்பது, தொழில் துறையை ஊக்குவிப்பது இதிலெல்லாம் நிறைய உண்மை இருக்கு. இந்தியாவுக்கு 10 மார்க் என்றால் சைனாவுக்கு 80 மார்க் கொடுக்கலாம். என்ன வித்தியாசம் என்றால் நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் (துஷ்பிரயோகம் செய்கிறோம்). அங்கு சுதந்திரக் காற்று நஹி.

  மற்றபடி சாரு எழுதியிருக்கும் 6 மணிக்கே இரவுச் சாப்பாடு ஓவர், புல்வெளியில் 3 மணி நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்பதெல்லாம், இந்தியாவைப் பற்றி ஏதாவது யாத்திரிகர், ‘இந்தியர்கள் தினமும் கோவிலுக்குச் செல்கிறார்கள், பெரியவர்களைப் பார்த்தால் வணங்குகிறார்கள் என்று பரந்த ஆயிரக்கணக்கான இடங்களில் ஒரு சிலவற்றைப் பார்த்துவிட்டு ஜெனெரலாக எழுதுவது’ போன்றது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.