தலையில் அழுத்தமான ஒரு குட்டு….


பல மாநிலங்களில் செய்த வினை – இன்று
செய்தவர்களை நோக்கியே திரும்பி இருக்கிறது.

இனி – யாரோடு யார் கூட்டணி வைத்தாலும் சரி,
இனி – யார் ஆட்சி அமைத்தாலும் சரி,
யாருமே அமைக்காமல் ஜனாதிபதி ஆட்சி
வந்தாலும் சரி –

பாஜக-வுக்கும், சிவசேனாவிற்கும் இருந்த
நட்பும், உறவும் – முறிந்தது
இன்றைய – மத்திய அமைச்சரின் ராஜினாமா மூலம்
இறுதியாக உறுதியாகி விட்டது.

இது ஏன் நிகழ்ந்தது…?
25 ஆண்டுக்கால உறவு உடைந்தது ஏன்…?
இந்தக் கூட்டணி ஒன்று சேர்ந்து
தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட –
ஆட்சி அமைக்க முடியாமல் போனது ஏன்…?

இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில்
ஒன்று பாஜகவின் கையை விட்டுப் போகிறது – ஏன்..?

பட்டினத்தாரின் பாடல் தான் நினைவிற்கு வருகிறது;
” தன் வினை தன்னைச் சுடும் ”

கையில் இருந்த அதிகாரங்களின் மூலம் –
தேர்தல் முடிவுகளை திசை திருப்பி,
கூட்டணிகளை மிரட்டி, உடைத்து, கவிழ்த்து –
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை பிரித்து வந்து –
ஆட்சியமைத்த மாநிலங்களின் பெயர்கள் –
அத்தனையும் நினைவில் இல்லா விட்டாலும்,
ஒருசிலவாவது வரிசையாக நினைவிற்கு வருகின்றன…
கோவா, அஸ்ஸாம், குஜராத் …

அரசியல் தர்மங்கள் மீறப்பட்டால்
யார், எந்த நீதிமன்றத்தில் போய்க் கேட்க முடியும் ..?

ஆனால், விதி என்று ஒன்று இருக்கிறது அல்லவா…?
தான் ஏவும் சில வகை ஆயுதங்கள் – பின்னால்
தன்னையே நோக்கி திரும்ப வருவதும்
உண்டல்லவா…?

பூமராங்


அது தான் நடக்கிறது இப்போது…
அவமானம்… தேசிய அவமானம்.
வெற்றிவிழா கொண்டாடிய பிறகும்
ஆட்சியமைக்க முடியாத அவமானம்…

அதிகாரத்தின் தலையில் அழுந்த ஒரு குட்டு
வைக்கப்பட்டிருக்கிறது …
இது – திருந்துவதற்கான துவக்கமாக அமையுமா…?
அல்லது ……………. ?

.
—————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

24 Responses to தலையில் அழுத்தமான ஒரு குட்டு….

 1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  இது – திருந்துவதற்கான துவக்கமாக அமையுமா…?

  இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .
  கடந்த ஐந்து ஆண்டுகளாவே பா ஜ க – சிவசேனா
  உறவு சரியாகவில்லை .

  2914ல் கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்தார்கள்
  ஆனால் சிவசேனாவிற்கு மந்திரி பதவி எதுவும் தரவில்லை ,

  ஐந்து வருடங்களாக சிவசேனா பொருமுவதை தவிர
  வேறு எதுவும் செய்ய முடியவில்லை .

  வாய்ப்பு கிடைத்ததும் சிவசேனா “தைரியம் இருந்தால் சி பி ஐ /ஐ டி
  ரெய்டு விடு பார்ப்போம்” என்று போர்க்குரல் விடுத்தது .

  மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் கட்சி ஆட்களை மிரட்ட
  இதுவே செய்யப்பட்டது .

  அப்புறம் எல்லோரும் அ தி மு க போல
  “மோடி எங்கள் டாடி ” என்று இருப்பார்களா ?

 2. புதியவன் சொல்கிறார்:

  இதில் பாஜகவுக்கு எதுவும் அவமானமோ சவுக்கடியோ இருப்பதாகத் தெரியவில்லை. சிவசேனாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டதே தவறு. (ஒருவேளை பொருளாதாரப் பிரச்சனைகள்-பாஜக தவறினால் வந்தவை, வாக்காளர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத காரணம் இவற்றால் மகாராஷ்டிராவில் பலத்த இழப்பு ஏற்படும் என்பதால் சிவசேனையுடன் கூட்டு வைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், மனதளவில் யார் ஆட்சிஅதிகாரத்தை அதிகமாகப் பிடிப்பது என்ற நினைப்பால் 1980 திமுக-காங்கிரஸ் கூட்டணி போல உள்ளடி வேலைகளால் அவர்களது திட்டம் பணால் ஆகிவிட்டது (சிவசேனா). ஆதித்ய தாக்கரே தான் முதலமைச்சராக அப்பாவிடம் பிடிவாதம் பிடிக்கிறார் என்று தோன்றுகிறது.

  பாஜக, தன்னால் ஆட்சி அமைக்க முடியாது என்று சொல்லிவிட்டது. சிவசேனை எம்.எல்.ஏக்களை இழுக்கவில்லை. அதனால் பாஜகவுக்கு குட்டு என்று நான் நினைக்கவில்லை.

  இது நல்லதாக முடியவேண்டுமென்றால், திரும்ப தேர்தல் வந்து, பாஜக, சிவசேனை தனித்தனியாக நிற்கவேண்டும்.

  நீங்கள் குறிப்பிட்டதுபோல, பாஜக மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியது, நேர்மையற்ற வழியில் இறங்கியது என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் பெரிய விஷயமல்ல. அப்படி இறங்காத கட்சிகள் ‘நாம் தமிழர்’ கட்சி போன்ற எம்.எல்.ஏக்கள் இல்லாத கட்சிகள் மட்டும்தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // பாஜகவுக்கு எதுவும் அவமானமோ
   சவுக்கடியோ இருப்பதாகத் தெரியவில்லை.//

   ரிசல்ட் வெளிவந்த மாலையே
   அவசர அவசரமாக டெல்லியில்
   இரண்டு “தலை”களும் வெற்றி விழா
   கொண்டாடி விட்டு, இப்போது ஆட்சி
   அமைக்க வழியில்லாமல் திண்டாடுவது
   அவமானம் இல்லை தான்.

   ரிசல்ட் வெளிவந்த பிறகு,
   அடுத்த 5 வருடம் “நான்” தான்
   முதலமைச்சர் என்று வீராப்பாக
   பேட்டியளித்த பட்னாவிஸ் முகத்தையே
   எங்கும், எவ்வளவு தேடினாலும் காணோம்.
   இதுவும் அவமானம் இல்லை தான்.

   ————–

   // பாஜக, தன்னால் ஆட்சி அமைக்க
   முடியாது என்று சொல்லிவிட்டது.
   சிவசேனை எம்.எல்.ஏக்களை இழுக்கவில்லை //

   நிஜம் சொல்ல வேண்டுமானால்,
   இதை கொஞ்சம் மாற்றிக்
   கொள்ள வேண்டும்.

   பாஜக”வால்” சிவசேனை எம்.எல்.ஏக்களை
   இழுக்க “முடியவில்லை.”
   அதனால் தன்னால் ஆட்சியமைக்க
   முடியாது என்று சொல்லி விட்டது.

   -45 சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன்
   தொடர்பில் இருக்கிறார்கள் என்று
   முதலில் பாஜக தலைவர் சொன்னது
   வசதியாக மறக்கப்பட்டு விட்டதோ…?

   ——————-

   // திரும்ப தேர்தல் வந்து, பாஜக,
   சிவசேனை தனித்தனியாக நிற்கவேண்டும்.//

   இந்த தேர்தலிலேயே பாஜக முயற்சி
   செய்திருக்கலாமே..? ஏன் செய்யவில்லை…?
   பாஜக தலை ஏன் தாக்கரேயை அவர்
   வீட்டிலேயே போய் கூட்டணிக்கு
   வேண்டுகோள் விடுத்தது …?

   தன்னம்பிக்கை இல்லை.
   தனியாக நின்றால் தோற்று விடுவோம்
   என்பது தெரிந்ததால் தானே ?
   ————-

   //பாஜக மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை
   விலைக்கு வாங்கியது, நேர்மையற்ற
   வழியில் இறங்கியது என்பதெல்லாம்
   என்னைப் பொறுத்தவரையில்
   பெரிய விஷயமல்ல.//

   -இதை உங்களிடமிருந்து கேட்பது
   எனக்கே அவமானமாக இருக்கிறது.
   ஏன் இவ்வளவு கீழ்நிலைக்கு
   இறங்கி விட்டீர்கள்…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    கா.மை. சார்… இந்த பாஜக வித்தியாசமான கட்சியாக இருக்கும் என்று நான் ஸ்டிராங்க் ஆக 2014ல் நரேந்திரமோடி பிரதமர் கோதாவில் இறங்கும்போதும் வெற்றிபெற்றபோதும் நினைத்தேன். நாம் பார்த்ததெல்லாம் அரசியல் அசிங்க சித்துவிளையாட்டுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சுயநலத்துக்காக கலைக்கும் காங்கிரஸ், ஊழலில் இறங்கி எந்த லெவலுக்கும் இந்தியாவைக் காட்டிக்கொடுக்கத் தயங்காத காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள்.

    அவரது டிமானிடைசேஷன் சமயம் சிக்கியவர்களை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டதும், அதற்குப் பிறகு பாஜகவின் அரசியல் சித்து விளையாட்டுகளையும் கண்டு (தேர்தலுக்குப் பின் ஆட்களை இழுப்பது, கட்சியை வளைத்துப்போடுவது போன்று) இவங்களும் காங்கிரஸ் மாதிரிதான் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதனால் எம்பிக்களை இழுப்பது போன்றவற்றில் எனக்குப் பெரிய அதிர்ச்சி கிடையாது. ‘அரசியல் சாக்கடையில் இந்தக் கட்சியும் ஒன்று’

    நீங்க சொன்னதைக் குறிப்பிட்டிருக்கிறேன். பாஜக தான் பொருளாதாரச் சிக்கல்களாலும், மஹாராஷ்டிரா அரசு டெலிவர் செய்யாததாலும் தனியாக வெற்றி பெறாது என்று எண்ணி சிவசேனையை மடியில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

 3. Prabhu Ram சொல்கிறார்:

  உண்மை.
  இது திருந்துவதற்கான அறிகுறி இல்லை.
  ஈகோவும், ஆத்திரமும் – அவ்வளவு எளிதில்
  போய் விடாது. மோதல் இன்னும் அதிகம் ஆகும்.
  பாஜக தலை வாங்க வேண்டிய குட்டுகள் இன்னும்
  நிறைய இருக்குது. அடுத்த தேர்தலில், பாஜகவுக்கு
  ஆதரவு குறைந்து,
  சிவசேனாவுக்கு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

 4. Prabhu Ram சொல்கிறார்:

  புதியவன் – // நீங்கள் குறிப்பிட்டதுபோல, பாஜக மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியது, நேர்மையற்ற வழியில் இறங்கியது என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் பெரிய விஷயமல்ல. //

  உங்களைப் பொருத்த வரையில் பாஜக
  எத்தனை அயோக்கியத்தனம் பண்ணினாலும்
  பெரிய விஷயம் இல்லை என்பது எல்லாருக்கும்
  தெரிந்தது தானே ?

  • புதியவன் சொல்கிறார்:

   Prabhu – எழுதுவதைப் போல சுலபமானது உலகில் எதுவுமில்லை.
   1. கருணாநிதி மைனாரிட்டி ஆட்சியில் எப்படி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கினார்.
   2. இப்போ ஆட்சியைப் பிடிக்கணும்னு ஸ்டாலின் எவ்வளவு கஜகர்ணம் செய்து அதிமுக எம்.எல்.ஏக்கள் தமிமுன்/கருணாஸ் போன்ற பலரை வளைத்தார்.
   3. காங்கிரஸ் எவ்வளவு மாநிலங்களில் இந்த அயோக்கியத்தனத்தைச் செய்திருக்கிறது
   4. ஆனானப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆளே சபாநாயகர் சீட்டில் இருக்க கட்சியை விட்டு விலகினதெல்லாம் நினைவிலில்லையா?
   என்றெல்லாம் நீங்கள் கொஞ்சமாவது யோசித்திருக்கலாம். அரசியலில் மக்கள் கிளியர் மேண்டேட் கொடுக்காதபோது, தேர்தலில் செலவழித்த பணத்துக்காக இந்த மாதிரி வேலைகளில் இறங்காத கட்சிகளை நீங்கள் அண்டார்டிக்காவில்தான் போய்த் தேடவேண்டும்.

   இதில் பாஜக ஆதரவு கிடையாது. இதுதான் நிதர்சனம். அரசியலில் எல்லோரும் இந்த அயோக்கியத்தனத்தைச் செய்கிறார்கள், மக்களைப் போலவே

 5. Prabhu Ram சொல்கிறார்:

  புதியவன் – // Prabhu – எழுதுவதைப் போல
  சுலபமானது உலகில் எதுவுமில்லை.
  1. கருணாநிதி மைனாரிட்டி ஆட்சியில்
  எப்படி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கினார்.//

  So – You are admitting that bjp is in no way better
  than karunanithi and his party.
  Thanks for your Admission of a BIG Fact.

  • புதியவன் சொல்கிறார்:

   Prabhu – You can write whatever you think. BJP head has not amazed 50,000 crores like Karunanithi & his family. Dont forget this fact.

   இந்திய அரசியல் சாக்கடையானது இந்திராவின் காங்கிரஸ் மற்றும் கருணாநிதியின் திமுகவினால்தான் என்று அரசியல் அரிச்சுவடி தெரிந்தவர்கள் சொல்லுவார்கள். ‘அரசு அமைப்பதில், அரசியல் செய்வதில்’ பாஜக இவர்களைவிட பெட்டர் என்று சொல்ல இயலவில்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

 6. Giri Alathur சொல்கிறார்:

  ஆணவ அதிகாரத்தின் தலையில் ஓங்கி ஒரு குட்டு
  வைக்கப்பட்டிருக்கிறது திருந்துமா…திருந்தாது என்றே நினைக்கிறேன்.
  நன்றி, கா.மை…

 7. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  பா ஜ க , மகாராஷ்டிரா அரசியலில் – கருணாநிதி எங்கிருந்து வந்தார் ?

  கருணாநிதியை பிடிக்காமல் இருக்கலாம் அது ஒவ்வொருவர் தனிக் கருத்து .

  இப்போது கருணாநிதி உயிருடன் இல்லை .
  சம்பந்தமில்லாமல் ஏன் அவரை தூற்ற வேண்டும் ? ஏன் இந்த வன்மம் ?

  • Ramnath சொல்கிறார்:

   ஜாக்கி சான் பற்றியும்,
   ஜேம்ஸ் பாண்டு பற்றியும்
   எழுதினால் கூட பின்னூட்டத்தில்,
   கருணாநிதியை கொண்டு வந்து
   விடுவார் மிஸ்டர் புதியவன்.
   அவர் இங்கே பின்னூட்டம் போடுவதே
   பாஜகவுக்கு வக்காலத்து வாங்கவும்,
   திமுகவை திட்டவும் தானே ?

  • புதியவன் சொல்கிறார்:

   மெய்ப்பொருள் – You have a point. உயிருடன் இல்லாததால் பின் லேடன் உத்தமராகிவிடுவாரா, இல்லை இந்திராவோ கருணாநிதியோ உத்தமர்களாக ஆகிவிடுவார்களா? இந்திய அரசியலின் அத்தனை சாக்கடை வேலைகளுக்கும் (மாநில அளவில்) முழுமுதல் காரணம் கருணாநிதி. (மதியழகன், சபாநாயகர் சீட், போட்டி சட்டமன்றம், 50:50 சீட் பிரிப்பு, ஆட்சி தாங்க எம்ஜிஆர் வந்தவுடன் அவர் கைல ஆட்சியை ஒப்படைப்பேன், நான் முதல்வராக இருந்தபோது புறங்கையை நக்கியிருக்கலாம் மன்னியுங்கள் என்று முடிவில்லாத சாதனைகள் கருணாநிதியுடையது). மத்திய அரசின் சாக்கடை வேலைகளுக்கு ஆரம்ப காரணம் இந்திரா. இதை எப்படி மறக்க முடியும்?

   அதனால பஞ்சப் பராரிகளைப் பார்த்த அனுபவமுள்ளதால், லோயர் மிடில் கிளாஸின் கஷ்டம் பெரிதாகத் தெரியலை. அதாவது பாஜக செய்யும் தகிடு தத்தம், நம் தமிழக அரசியலைப் பார்த்ததினால் இதுவரை, ‘ஓகே..இன்னும் இந்த லோயஸ்ட் பாயிண்டுக்கு வரலையே’ என்று நினைத்துக்கொள்கிறேன். அவ்ளோதான்.

 8. Ezhil சொல்கிறார்:

  புதியவன் சார் – இங்க பாஜக பத்தி சொல்லும்போது மத்த யாருமே இப்படி இல்லையா.. அவங்க இப்படித்தான் இவங்க இப்படித்தான்னு திசை மாத்துறீங்க… நான் இந்த தளத்தை பல நாட்களாக படித்துக்கொண்டிருக்கிறேன்… நீங்கள் கண்டிப்பாக ஒரு பக்தாள் இல்லை .. ஆனால் பாஜக பற்றிய எந்த ஒரு எதிர்மறை கருத்தையும் நீங்கள் அதை ஒத்துக்கொள்வதேயில்லை.. மாறாக மற்றவர்களும் இப்படித்தான் என்று கூறிவிடுகிறீர்கள் … ஏன் பாஜகவின் எந்த ஒரு செயலையும் கண்டிப்பதே இல்லை? கண்டிக்காவிட்டாலும் அது சரி என்ற போக்கிலேயே பதிவிடுகிறீர்கள் …

  நான் தான் “Jolly Payyan ” என்ற பெயரில் எழுதினேன்.. இனிமேல் என் பெயரான “Ezhil” என்ற பெயரிலேயே தொடருவேன் …

  • புதியவன் சொல்கிறார்:

   இல்லை எழில். பாஜகவின் பல செயல்களைக் கண்டித்திருக்கிறேன். இப்போ மஹாராஷ்டிராவில் அந்தக் கட்சி, சிவசேனை எம்.எல்.ஏக்களை இழுக்கலை (ஒருவேளை முடியலையாகவும் இருக்கும்). ஆனா மஹாராஷ்டிராவைப் பொருத்தவரையில் சிவசேனையின் ஆட்டிடியூடை நான் வெறுக்கிறேன். தற்போதைய அரசியலில் (மஹாராஷ்டிராவில்) மிக சரியாக (இன்று மதியம் வரை) ப்ளே பண்ணுவது சரத்பவார் மட்டும்தான். ஒரு தார்மீக நெறி இருப்பதுபோல அவர் காட்டிக்கொள்கிறார். மஹாராஷ்டிரா கவர்னர் செய்வதும் தவறு. ஏன் 2 நாட்கள் அதிகமாக சிவசேனைக்குக் கொடுத்தால் என்ன நடந்துவிடும்? ஏன் 8 மணி நேரம்தான் ஒவ்வொரு கட்சிக்கும் கொடுக்கவேண்டும்?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    //ஆனா மஹாராஷ்டிராவைப்
    பொருத்தவரையில் சிவசேனையின்
    ஆட்டிடியூடை நான் வெறுக்கிறேன். //

    ஒரு சின்ன சந்தேகம்.
    ரிசல்ட் வெளிவந்த அன்று மாலை,
    வெற்றி விழா கொண்டாட்டத்தில்
    கலந்துகொண்டதோடு சரி…

    அதற்கப்புறம், மஹாராஷ்டிராவில்
    இத்தனை allegations and counter allegations
    எல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறதே…
    கட்சியின் “தலை” ஏன் இதுவரை
    வாயே திறக்கவில்லை… ?

    தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கும்
    நேரத்தில் “தலை” தனக்கு என்னென்ன
    வாக்குறுதிகள் தந்தது என்று தாக்கரே
    மீண்டும் மீண்டும் சொன்னார். ஆளுக்கு
    இரண்டரை வருடம் சி.எம். என்று
    பேசப்பட்டது என்று திரும்பத் திரும்ப
    கூறுகிறார்….

    இன்று வரை “தலை” இதைப்பற்றி
    ஏன் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை…?

    அப்படி வாக்குறுதி எதுவும் கொடுக்கவில்லை
    யென்றால், வெளிப்படையாக அதைச்
    சொல்ல வேண்டியது தானே…?
    அப்படியானால், சீட்டு பிரிப்பதற்காக
    வாக்கு கொடுத்தது உண்மை தானா…?

    இப்போது மாட்டேன் என்றால் –
    இங்கே யார் வாக்கு தவறுகிறார்கள்…?
    முதல் தவறு யார் மீது…?

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     ///வெளிப்படையாக அதைச் சொல்ல வேண்டியது தானே…? அப்படியானால்// – எனக்கும் அந்தச் சந்தேகம் முதலில் இருந்தது. அப்புறம், எப்படியாவது சமாதானப்படுத்தலாம் , எதுக்கு பகையை வளர்ப்பானேன் என்ற எண்ணமும் காரணமாயிருக்கலாம்னு தோன்றியது. நேற்றுகூட அமித்ஷா, தேர்தல் பரப்புரையின்போது பட்னாவிஸ்தான் முதல்வர் என்றும் எல்லா சந்தர்ப்பத்திலும் அப்படித்தான் சொன்னோம் என்றும் சொல்லியிருக்கிறார்.

     எனக்கு மனதில், உத்தவ் தாக்ரே பையன் வற்புறுத்தி, எத்தனை காலம்தான் பல்லக்கு சுமப்பது என்று முதல்வர் பதவிக்கு அடிபோட்டிருப்பார் என்று தோன்றுகிறது. இப்போது வேறு வழியில்லாமல், காங், சரத்பவார் ஆதரவு கேட்டிருப்பதால் அனேகமாக உத்தவ் தாக்ரே முதல்வராக ஆகலாம் (பையனுக்குப் பதிலாக)

     இப்படித்தான் நான் நினைக்கிறேன். இரண்டு பேர்களுக்கிடையில் இருந்த கூட்டணியில், யார் பொய் சொல்கிறார்கள், யார் உண்மை பேசுகிறார்கள் என்று எப்படி ஒரு சைடு எடுப்பது?

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      இப்போது நீங்கள் எழுதுகிறீர்கள் –

      “இரண்டு பேர்களுக்கிடையில் இருந்த
      கூட்டணியில், யார் பொய் சொல்கிறார்கள்,
      யார் உண்மை பேசுகிறார்கள் என்று
      எப்படி ஒரு சைடு எடுப்பது?”

      actually, உண்மை நிலை தெரியாமலே
      நீங்கள் ஒரு பக்கமாக சைடு எடுத்து,
      சிவசேனாவை குறை சொன்னதால்
      தான் நான் அந்த மறுமொழியை
      எழுதும் அவசியமே நேர்ந்தது.
      முதலில் நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள்
      என்று பாருங்கள்…

      //ஆனா மஹாராஷ்டிராவைப்
      பொருத்தவரையில் சிவசேனையின்
      ஆட்டிடியூடை நான் வெறுக்கிறேன். //

      முதலில், உண்மை தெரியாமலே
      சிவசேனாவை வெறுத்தீர்கள்.
      இப்போதும், உண்மை தெரியாமலே
      பாஜகவை சப்போர்ட் பண்ணுகிறீர்கள்…

      ஆக மொத்தம், பாஜக மேல் எந்த
      தவறும் இல்லை என்று நியாயப்படுத்த
      வேண்டும் -அவ்வளவு தான்.. ?
      Nice….. Be Happy… 🙂 🙂

      ——————
      உங்களை மெய்ப்பொருள் நன்றாகவே… ( 🙂 🙂 )
      கவனித்துக் கொண்டிருக்கிறார்…!!!
      (அடுத்த இடுகையின் பின்னூட்டத்தில்…)

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

   • Ezhil சொல்கிறார்:

    சார், நீங்க மத்திய அரசின் சில செயல்களை கண்டிச்சுருக்கீங்க.. ஆனால் கூடவே அவங்களும் இப்படி பண்ணினாங்கனு யாரையாவது கோர்த்துவிட்டுறீங்க … அதனால ரெண்டு பேரும் தான் தப்பு பண்றங்க இதுக்கு அது சரியா போச்சுன்னு சொல்லுற மாதிரி அமைஞ்சுடுது …

 9. Prabhu ram சொல்கிறார்:

  புதியவன் சார் – உங்கள் பாஜக ஆதரவு என்கிற
  சாயம் கொஞ்சம் அதிகமாகவே இங்கே
  வெளுக்கப்பட்டவுடன், வெற்றிகரமாக பல்ட்டி
  அடித்து கதையையே மாற்றப் பார்க்கிறீர்கள்.
  மேல் பகுதிகளில் முதலில் நீங்கள் கொடுத்த
  ஸ்டேட்மெண்ட்களுக்கு நேர் மாறாக இப்போது
  எழுதுகிறீர்கள். இது சும்மா ஜொஜுபி; இந்த
  இடத்தில் தப்பிக்க வேண்டும் அவ்வளவு தான்;
  பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

  • புதியவன் சொல்கிறார்:

   ஒரு பிரச்சனையில் யார் பக்கம் நிற்கிறோம் என்பது ‘சாயம்’ என்று சொல்லலாமென்றால் எத்தனையோ எளிதாகச் சொல்லிவிட முடியும். இப்போது இருக்கும் நாலு கட்சிகளில், என் ஆதரவு (இந்த மகாராஷ்டிரா விஷயத்தில் எப்படி கண்டக்ட் பண்ணினாங்க என்பதை வைத்து) பாஜக, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்+சிவசேனை என்பதாகத்தான் இருக்கிறது. நியாயமா தேசியவாத காங்கிரஸ் முதலிலும் பாஜக இரண்டாவதிலும் இருக்கிறது என்றும் சொல்லலாம்.

 10. tamilmani சொல்கிறார்:

  தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்து ஹிந்துத்வ கொள்கைகளில் நம்பிக்கை
  உள்ள natural alliance என்று கருதப்டும் சிவசேனையும் , பிஜேபியும் ஆட்சி அமைத்திருக்க வேண்டும்.
  மக்களும் அப்படியே வாக்களித்து இருந்தார்கள். 50:50 பார்முலா ஒப்பந்தம் இருந்தது
  என்று தாக்கரே கூறுகிறார்,இல்லை என்று பாட்னவிஸ் கூறுகிறார். இவர்களில் ஒருவர்
  நிச்சயம் பொய் சொல்கிறார்கள். இதே 50:50 பார்முலா கர்நாடகத்தில் வந்தபோது
  குமாரசாமி இரண்டரை ஆண்டு முதல்வராக இருந்துவிட்டு பாஜக முறை வந்தபோது
  எடியூரப்பாவுக்கு நாமம் போட்டார் , இதிலிருந்து 50:50 என்பது பாஜவுக்கு அல்ர்ஜி என்று தெரிகிறது. சிவசேனை அரசனை விட்டு புருஷனை பிடித்தது போல் ncp ,cong
  இடம் மண்டியிடுகிறது, குரங்கு அப்பம் பங்கிட்ட கதை நினைவுக்கு வருகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   தமிழ்மணி,

   இங்கே இரண்டு கட்சிகளுமாக சேர்ந்து யாரிடமும்
   மத்தியஸ்தம் கோரி போகவில்லையே…

   எனவே, அந்த உதாரணம் இங்கு பொருந்தாது.

   மேலும், ஒருவேளை புதிய கூட்டணி அரசு அமைந்தால்,
   அதில் சிவசேனைக்கு இரண்டரை வருடமுதலமைச்சர்
   பாக்கியமும் கிட்ட வாய்ப்பிருக்கிறது. எனவே,
   இங்கே சிவசேனா ஏமாந்த குரங்கல்ல.
   காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் குரங்கு… 🙂 🙂

   இல்லையா….?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 11. Prabhu Ram சொல்கிறார்:

  இங்கு குரங்கு யாரோ 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.