ட்ரஸ்ட் சொத்துக்கள், நமக்கு சொந்தமா…?


பொதுவாக, வேதங்கள், மந்திரங்கள்,
உபநிஷதங்கள் என்றாலே
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள்
ஓடிப்போய் விடுவோம்…

அது உயர்ந்த ஞானிகளுக்கும், வேதாந்திகளுக்கும், மந்திரங்கள்
ஓதுபவர்களுக்கும் உரிய விஷயம்; நமக்கும் அதற்கும் எந்தவித
சம்பந்தமும் இல்லை; அது நமக்கு புரியவும் புரியாது என்று
ஒதுங்கி விடுவோம்.

அது ஓரளவுக்கு உண்மை தான்.
ஏனென்றால், வேதங்களும்,
அவற்றின் விளக்கங்களான உபநிஷதங்களும் –
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக,
குரு-சிஷ்ய பரம்பரை முறையில்,
வாய் வழியாகவும், செவி வழியாகவும்,
ஓதப்பட்டும், மனப்பாடம் செய்யப்பட்டும் தான்
தொடர்ந்து வந்தது…

இதே முறையில் ஆயிரக்கணக்கான வருடங்ககள் –
மந்திரங்கள் சாதாரண மனிதர்களுக்கு சம்பந்தம்
இல்லாதவையாகவே தான் இருந்தன.

ஆனால், ஆதிசங்கரர், சாதாரண மனிதர்களுக்கும்
உபநிஷதங்களை புரிய வைக்க வேண்டும் என்று நினைத்து,
முக்கியமான 10 உபநிஷதங்களுக்கு மட்டும்
விளக்கம் எழுதினார்.
உபநிஷதங்களின் மொத்த எண்ணிக்கை 108.

உண்மையில் உபநிஷதம் என்றால் –
highest form of knowledge –
என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

உப-நி-சத் என்றால்,
பக்கத்தில் உட்கார வைத்து
சொல்லிக் கொடுப்பது என்று அர்த்தம்.

உபநிஷத்துகளிலேயே மிகவும் சிறியது –
ஈசாவாஸ்ய உபநிஷதம்.

அந்த உபநிஷத்திலிருந்து –
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு,
அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படுகிற,
மிகவும் அவசியமான சில கருத்துகளை மட்டும்
எனக்குத் தெரிந்த விதத்தில் இங்கே சொல்கிறேன்…

காவிரிமைந்தன் காணொளி – 06
Vimarisanam-kavirimainthan Videos – 06

.
——————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ட்ரஸ்ட் சொத்துக்கள், நமக்கு சொந்தமா…?

 1. Ramnath சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  உங்கள் பேச்சை 3 முறை
  திரும்ப திரும்ப கேட்டேன்.

  “நம்மால் முடியாது என்று தான்
  நானும் உணர்கிறேன்.
  ஆனால், இத்தகைய சிந்தனைகளை
  மனதில் வளர்த்துக் கொண்டால் …
  இதே மாதிரி கொஞ்சமாவது
  யோசிக்க ஆரம்பித்தால்…

  கொஞ்சம் கொஞ்சம் ஒரு பத்து சதவீதம்,
  பதினந்து சதவீதமாவது
  நம்முடைய எண்ணங்களிலும் – செயல்களிலும் ….
  முன்னேற்றம் ஏற்படும் அல்லவா…?”

  என்று கேட்கிறீர்கள்.

  நீங்கள் சொல்வது மிகவும் நிஜம்.
  எண்ணங்கள் தான் மனிதனை
  உயர்த்தவோ, தாழ்த்தவோ செய்கின்றன.

  நல்ல எண்ணங்களை,
  பிராக்டிகலான தத்துவங்களை
  நீங்கள் இப்படி நிறைய சொல்ல வேண்டும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.