…
…
…
…
…
ஒரு தேங்காயை வைத்துக்கொண்டு என்னவெல்லாம்
செய்ய முடியும் என்பதை பார்க்கையில் ஆச்சரியமாக
இருக்கிறது.
ஒரு விதத்திலும், இவை அனைத்தும்
நமக்கு தெரிந்தது தான்.
ஆனால், மிகச்சிறப்பான முறையில்,
ஒரு தொழிற்சாலையில் அது கையாளப்படுவது,
பார்ப்பதற்கே மகிழ்ச்சியளிக்கிறது அல்லவா…?
————————————————————-
இது தாய்லாந்தில் …
பெரிய அளவில் –
அழகாகச் செய்கிறார்கள்…
………..
………..
இது நம்ம நாட்டில் ….
இங்கு இன்னும் பயன்பாடுகள் அதிகம்…
இன்னும் அதிக products…
…..
Coconut Development Board- India
…..
.
—————————————————————————————————————————————-
காணொளி கண்டேன். ஒவ்வொரு இண்டஸ்டிரியும், ஆட்டமேஷனோடு இயங்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். மாஸ் ப்ரொடக்ஷனுக்கும் நல்ல குவாலிட்டி கண்ட்ரோலுக்கும் ஆட்டமேஷன் மட்டும்தான் சரிப்படும்.
Factory Food பற்றி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது எனக்கு பிரமிப்பாக இருக்கும். கேரட் பறிக்க, அதை சுத்தம் செய்ய (இதுபோல உருளை, கீரை)..
கேரளாவிலிருந்து ஃப்ரீஸ் செய்யப்பட்ட, அதிரசம், மசால்வடை, மசால்தோசை, வித வித பராத்தாக்கள் போன்றவை துபாயில் டிஸ்டிரிபியூட் செய்யப்பட்டதைப் பார்த்திருக்கிறேன். (மசால் தோசை… பாக்கெட் வாங்கிக்கிட்டு, அவனில் ஓரிரு நிமிடங்கள் வைத்து எடுத்தால் மசால் தோசை). இந்த மாதிரி உணவில் உள்ள ஒரு பிரச்சனை, அவற்றில் சேர்க்கப்படும் உப்பின் அளவு.
ஒரு காலத்துல நிச்சயம் உணவு ஆட்டமேஷன் நம் கிச்சன் வரை வந்துவிடும் என்று நம்புகிறேன் (குறைந்தபட்சம் மேல்தட்டு மக்களுக்கானதாவது). ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய இடத்தில் நிரப்பிவிட்டால், இன்று ‘வெந்தயக் குழம்பு’ என்று பட்டன் தட்டிவிட்டால், 1/2 மணி நேரத்தில் வெந்தயக் குழம்பு நாம் கேட்கும் அளவில் வந்துவிடும். இதை ப்ரோக்ராம் பண்ணுவது ரொம்ப கஷ்டமில்லை என்பது என் நம்பிக்கை. ஏற்கனவே தோசா மேக்கர், சரியா ஃபங்ஷன் ஆகாத இடியாப்பம் (சேவை) மேக்கர்லாம் பார்த்திருப்பீங்க.
ஒரு சம்பந்தமில்லாத செய்தி. என்னிடம் 90களில் ஒரு சாஃப்ட்வேர் இருந்தது. அதில், உதாரணமா, பிறந்தநாள் செய்தி என்று செலக்ட் செய்து, யாருக்கு, ஆணா பெண்ணா, நாம என்ன சொல்ல விரும்பறோம் (அவங்களோட கேரக்டரஸ்டிக்ஸ்) என்று க்ளூ செலக்ட் பண்ணியாச்சுன்னா, அதுவே ஆங்கிலத்தில் கவிதையை கம்போஸ் செய்யும். இதுபோல திருமண வாழ்த்து மற்றும் பல நிகழ்வுகளுக்கு. ஆட்டமேஷன் நுழையும்போது வெளிவரும் பொருட்களின் தரமும் அதிகமாகும், கன்சிஸ்டன்ஸியும் நல்லா இருக்கும்.