கூக்குரலி’ன் அடுத்த பிசினஸ் – 15% Discount-உடன் அறிமுகம்….!!!


நாம் பிசினஸ் என்று சொன்னபோது
சிலர் “சேவை”யைப் போய் “பிசினஸ்” என்று
சொல்கிறீர்களே என்று கேட்டார்கள்….

இப்போது சம்பந்தப்பட்டவர்களே expose
செய்துகொண்டு விட்டார்கள்.

சேவையுமில்லை; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை;
எங்களுடையதெல்லாம் – “ப்யூர் பிசினஸ்” தான் என்று.

பொதுவாக யார் Discount கொடுப்பார்கள்…?
வியாபாரிகள் தானே…?

15 % டிஸ்கவுண்ட் for EARLY BIRDS- என்றால் –
இது சேவையா அல்லது வியாபாரமா…?

இங்கே எத்தனை கோடி வியாபாரம் நடக்கிறது…?
இதற்கெல்லாம் கணக்கு, வழக்கு,
வரி வகைகள் எதாவது உண்டா…?

“ஆசி” பெற்றவர்களை யாராவது கேள்வி கேட்க
முடியுமா என்ன…? (அதற்குத் தானே
தலைவர்களை வைத்து திறப்பு விழா நடத்துகிறார்கள்…!!! )

……

…..

…………………………………………………………………………………………………………………………………………………………..

..
இது தனி…..

—————————————————————————————————————————————————————

இன்று பதியப்பட்டிருக்கும்
விமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி- 05 கீழே –
(ஆதிசங்கரர் – பாகம்-2)

-தாடி, மீசை வளர்த்துக் கொண்டு சாமியார் வேடம்
போடுவர்கள் எல்லாம் உண்மையில் சந்நியாசிகளா என்ன….?
சங்கரரே கேள்வி கேட்கிறார்….

.
———————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to கூக்குரலி’ன் அடுத்த பிசினஸ் – 15% Discount-உடன் அறிமுகம்….!!!

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ///“ஆசி” பெற்றவர்களை யாராவது கேள்வி கேட்க
  முடியுமா என்ன…?///

  கல்கி பகவானையே விரட்டினவங்களுக்கு இவர் எந்த மூலை?

  மேலே உள்ளவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான். வெகு விரைவில் குப்பைகளை சுத்தப்படுத்திவிடுவான்

 2. புதியவன் சொல்கிறார்:

  //15 % டிஸ்கவுண்ட் for EARLY BIRDS- என்றால் – இது சேவையா அல்லது வியாபாரமா…?//

  பெரிய சாம்ராஜ்யத்தை பிஸினெஸ் மூலம் கட்டி எழுப்பிவிட்டு, அதனை மற்றவர்கள் கையில் கொடுத்துவிட்டு மறையவேண்டியதுதான். கடைசியில், பணத்தைச் சேர்த்தோம் என்ற பாவம்தான் மிஞ்சும். கல்விக்கு மாணவர்கள் தாமாக முன்வந்து தட்சணை (வெற்றிலை, பாக்கு, பழம் மட்டும்கூட தட்சிணையில் சேரும்) கொடுத்து கற்றுக்கொள்வார்கள். ஆசிரியர் கேட்கமாட்டார். அதுபோல பல்வேறு கலைகளைக் கற்றுத் தருபவர்களும் அப்படித்தான். அப்படி இருக்கும்போது மாணவன் அங்கே தன் உழைப்புப் பங்களிப்பையும் கொடுப்பான். அது அவனை உருவாக்குவதற்கான முறை. இப்படி இருந்த பாரத தேசத்தின் கல்வி எப்படி எப்படி மாறிவிட்டது என்பது நமக்குத் தெரிகிறது.

  எங்கு ‘காசு வாங்கி அதற்குப் பதிலாக நாம் ஒன்றைப் பெற்றுக்கொள்கிறோமோ’ அது பிஸினெஸ் என்பதை குழந்தைகள் அறியும். அவ்வளவுதான் சொல்ல முடியும்.

  15% Early birds discountக்கே நீங்க ஆச்சர்யமாப் பார்த்தா எப்படி? இதன் அடுத்த நிலை, சமஷ்டி யோகா கோர்ஸில் சேர்ந்தால், சுலப தியானமுறை Free, எங்களிடம் 2 லட்ச ரூபாய் ஆசிரம நிதியாக நன்கொடை வழங்குபவர்கள், எங்கள் ஆசிரமக் கிளையில் முன்னரே புக் செய்துகொண்டு வருடத்துக்கு 3 நாட்கள் இலவசமாக அறைகளில் தங்கலாம், சத்குருவை/குருவை சந்தித்து படம் எடுத்துக்கொள்ள 50,000 நன்கொடை என்று எத்தனையோ இருக்கின்றன. (இதன் இன்னொரு வடிவம், இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை, கட்சி நிதி etc. என்று ஏகப்பட்ட ஆலயக் கட்டிடங்களை, 40,000 கோடிகளைத் தங்கள் சொந்தச் சொத்தாக வைத்துக்கொண்டுள்ள கருணாநிதியின் குடும்பம், படம் எடுத்துக்கொள்ள 1 ரூபாய் 2 ரூபாய் என்று நல்ல நோக்கத்திற்காக வாழ்நாள் முழுதும் உழைத்த பெரியாரின் சொத்துக்களை யாரோ குடும்பச் சொத்தாக ஆக்கிக்கொண்டு அனுபவிப்பது).

  • Jolly Payyan சொல்கிறார்:

   அதெப்படி புதியவன் சார், எந்த போஸ்ட்க்கு கமெண்ட் போட்டாலும் அதுல இலவச இணைப்பு மாதிரி கருணாநிதிய பத்தி ஒரு கருத்து திணிச்சிரிங்க…

  • புதியவன் சொல்கிறார்:

   பாருங்க… தமிழகத்துல, இந்தியாவுல எந்த அனர்த்தத்துக்கும் ஆரம்பம் என்று பாத்தீங்கன்னா, திமுக, கருணாநிதிதான் இருக்கும். நான் சொல்வதில் அர்த்தம் இருக்கான்னு மட்டும் பாருங்க ப்ளீஸ்…

   நித்தி, ஜக்கி, பெரியார் இவங்க எல்லாம் சேர்த்துவச்சதை (இவங்களைப்போல் உள்ள மத்தவங்களும்தான்), எவனோ அனுபவிப்பான், அனுபவிக்கிறான். ஆனால் கருணாநிதி மட்டும், தான் சேர்த்துவைத்ததை தன் குடும்பம் மட்டும் அனுபவிக்குமாறு வைத்திருக்கிறார். அதுல கருணாநிதி தனிப்பட்டுத்தான் தெரியுறார். “அழக் கொண்ட எல்லாம் அழப்போம்” என்பது அவர்கிட்ட மட்டும்தான் தோத்திருக்கான்னு காலம்தான் பதில் சொல்லும்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    ஒரு விதத்தில் புதியவன் சொல்வது
    சரி தான்…

    கலைஞர் குடும்பம் இந்தியாவுக்கே
    ஒரு உதாரணம்.
    (லாலு குடும்பமும் இருக்கிறது…
    ஆனால் கடைசியில் லாலு
    ஜெயிலுக்குப் போய்விட்டாரே…!)

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

   • Jolly Payyan சொல்கிறார்:

    சார் நீங்க சொல்றது எல்லாமே மிகவும் சரி தான்… கருணாநிதி இந்தியாவுக்கு மட்டுமில்லை இந்த உலகத்துக்கே ஒரு எடுத்துக்காட்டு, எப்படி சாதாரண மனுஷன் டிக்கட் எடுக்காம ரயில் ஏறி வந்து பத்து, பதினைஞ்சு தலைமுறைக்கு சொத்து சேர்த்துக்கொடுத்து அதை காப்பாத்தவும் வழி பண்ணிட்டு போயிருக்காருன்துக்கு… ஆனா ஜக்கி பத்தி பேசும்போதும் கருணாநிதியை இடையில கோர்த்து விடறது திசை மாறுற அல்லது மாற்றுற (மன்னிக்கவும்) மாதிரி தோணுது.. அதுக்கு தான் நான் சொன்னேன்…

 3. PrabhuRam சொல்கிறார்:

  Jolly Payyan – அவர் மறுமொழி போடுவதே
  கருணாநிதி/ஸ்டாலினை அட்டாக் பண்ண ஒரு சான்ஸ்
  கிடைக்குமென்று தானே 🙂 நீங்க அடிமடிலயே கைய
  வெச்சா எப்படி ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.