…
…
…
சிலருக்கு
கூட்டம் சேர்க்கவும்,
மேலும் மேலும் பணம் சம்பாதிக்கவும்,
புதிது புதிதாக எவ்வளவு யோசனைகள்
உதிக்கின்றன பாருங்கள் …!!!
ஆன்மிகத்தை வியாபாரமாக்குவது
ஒரு மிகச்சிறந்த கலையாகி விட்டது.
இன்றைய தினம் ஆசிரமங்கள் எல்லாம்
கேளிக்கை ஸ்தலங்கள் ஆகி விட்டன.
கார்பரேட் சாமியார்கள் சிறந்த
டூரிஸம் ப்ரமோட்டர்களாகவும்
ஆகி விட்டார்கள்.
கூடிய சீக்கிரம் விளம்பரங்கள் வரக்கூடும்…
சொர்கத்தை தரிசிக்க வேண்டுமா –
நேரடியாக மோட்சம் பெற வேண்டுமா –
இங்கே வாருங்கள் என்று…!!!
இது எந்த இடமென்று நான் வேறு
சொல்ல வேண்டுமா என்ன…?
…
…
.
——————————————————————————————————————————————
//கூடிய சீக்கிரம் விளம்பரங்கள் வரக்கூடும்… சொர்கத்தை தரிசிக்க வேண்டுமா –// – என்ன கா.மை. சார்… இன்னும் அப்டேட் ஆகாம இருக்கீங்க.
நம்ம நித்யானந்தா ஸ்வாமி, சூரியனையே அரை மணி நேரம் கழித்து உதிக்கணும்னு ஆர்டர் போட்டு அன்று சூரியன் அதை நிறைவேற்றினான் என்று காணொளி வெளியிட்டிருந்தார். அதைக்கேட்டு அங்கிருந்த ஆயிரம் பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அவரே சொர்க்கம் பற்றியெல்லாம் நிறைய காணொளி வெளியிட்டிருக்கிறாரே.
பழைய கன்னடப் பாடல் ஒன்று உண்டு.
‘நகுவுதோஅழுவுதோ நீவே ஹேளி… இருவுதோ பிடுவுதோ ஈ ஊரினல்லி
ஈ ஜனரா நடுவே நானு ஏஹ பாளலி.. அழுவுதோ நகுவுதோ ஈக ஏனு மாடலி’
சிரிப்பதா அழுவதா, … இந்த ஜனங்கள் மத்தில நான் எப்படி வாழமுடியும்…
“வேடமிடுபவர்களுக்கான கால்ம் இது. இங்க ஆச்சர்யம் என்னன்னா, அதை மிகவும் கல்வி அறிவு பெற்றவர்கள் (தவறு.. நிறைய படித்தவர்கள்) நம்பி மயங்கி ஆதரிக்கிறாங்களே… நாம எங்க போயிட்டிருக்கோம்?”