இந்த அறிவுக்கொழுந்து-க்கு கொடுக்கலாமே அவார்டு…!!!


மாட்டின் திமிலில் சூரிய ஒளி படும்போது –
தங்கம் உற்பத்தியாகிறது…!!!

இது தினமலர் செய்தி –

——————————————-
கோல்கட்டா :

”நாட்டு பசுக்களின் பாலில் தங்கம் உள்ளது.
அதனால் தான், பசுவின் பால், மஞ்சம் நிறம் கலந்து
ஜொலிக்கிறது,” என, மேற்கு வங்க மாநில, பா.ஜ.,
தலைவர் திலீப் கோஷ் கூறி இருக்கிறார்.

மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவரான திலீப் கோஷ்,
பேசியதாவது:

நாட்டு பசுக்களின் பின்புறத்தில் ஒரு திமில் இருப்பது,
அனைவருக்கும் தெரியும். இந்த திமிலில் சூரிய ஒளி
படும்போது, தங்கம் உற்பத்தியாகிறது.

அதனால் தான், பசுவின் பால், மஞ்சள் கலந்த,
தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. நாட்டு பசுக்களுக்கு
மட்டுமே, பின்புறத்தில் திமில் இருக்கும். வெளிநாட்டு
கலப்பின பசுக்களுக்கு இது இருக்காது. அந்த பசுக்களின்
பாலில் தங்கமும் இருக்காது.

நாட்டு பசு மாடுகளின் பாலை மட்டும் ஒருவர் குடித்தால்
போதும்; அவர், வேறு எதையும் சாப்பிட வேண்டிய
அவசியம் இல்லை….

—————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இந்த அறிவுக்கொழுந்து-க்கு கொடுக்கலாமே அவார்டு…!!!

 1. Ramnath சொல்கிறார்:

  அவசியம், அவசியம் கொடுக்க வேண்டும்.
  இந்த மாதிரி நிறைய அறிவுக்கொழுந்துகள்
  அரசியலில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரையும்
  வரிசைப்படுத்தி கவுரவிக்க வேண்டும்.

 2. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  வர வர விஞ்ஞானிகள் அரசியலில் அதிகம் வர ஆரம்பித்து விட்டார்கள் இனி அறிவியல் சார்ந்து இயங்கும் விஞ்ஞானிகளுக்கு மிக பெரிய சவாலகத்தான் இனி வரும் காலம் இருக்க போகிறது.

 3. புதியவன் சொல்கிறார்:

  //மேற்கு வங்க மாநில, பா.ஜ., தலைவர் திலீப் கோஷ் கூறி இருக்கிறார்.// – அரசியலில் உள்ளவர்கள், வேறு எந்தத் தொழிலுக்கும் லாயக்கற்றவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள், மெத்தப் படித்திருந்தால் அதை வைத்து பணத்தைச் சுருட்டி/புதிய வியாபாரம் செய்து மாட்டிக்கொள்ளாமல் சொத்து சேர்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள், சொந்தப் பாதுகாப்புக்காக அரசியலில் இருக்கும் ரவுடிகள்.
  இதைத் தவிர ‘சேவை’க்கு யார் இருக்கா என்பதை பூதக் கண்ணாடி கொண்டு தேடத்தான் வேணும், 15, 10 கோடி லஞ்சம் வாங்கிய கட்சிகள் உட்பட.

  இவங்க பேசறதையெல்லாம் ‘உ ள ற ல்’ என்று ஒதுக்கித் தள்ளுவதை விட்டுவிட்டு அதுக்கு ஒரு இடுகை போட்டிருக்கீங்களே. இன்னும் எத்தனை உளறல்கள் எத்தனைபேர் சொல்கிறார்கள் (பாஜக, இந்த மாதிரி இந்துத்வா கண்டுபிடிப்புகளை). அதுக்கெல்லாம் இடுகை போட்டு உங்களுக்குக் கட்டுப்படி ஆகுமா?

  //நாட்டு பசு மாடுகளின் பாலை மட்டும் ஒருவர் குடித்தால் போதும்; அவர், வேறு எதையும் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை….// – இந்த வரியில் கொஞ்சம் அர்த்தம் இருக்கு. ஆனால் கால மாறுதல்கள் ஆகிவிட்டதால் தற்போதைய காலத்தில் இதில் அர்த்தம் குறைவு. நாட்டு மாடுகளும் கண்டதைத் தின்கின்றன, இரசாயன உரங்களால் பாழ்பட்ட புற்களைத் தின்கின்றன. ஆனால் இவை, கலப்பின பசுக்களை விட உயர்ந்தவைதான்.

 4. Prabhu Ram சொல்கிறார்:

  இந்த திலீப் கோஷ் கழுதைப்பால் குடித்து வளர்ந்திருப்பார்
  என்று தோன்றுகிறது. அதான் அறிவு இத்தனை பிரகாசம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.