பாஜக+காங்கிரஸ் கூட்டணி அரசு …!!! மும்பை சட்டா பஜார்…ஒன்றுக்கு பத்து கொடுக்கிறதாம்…!!!


மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்கள் முடிந்து கடந்த
24-ந்தேதியே முடிவுகள் வெளிவந்து விட்டன.

பாஜக+சிவசேனா கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு
மொத்தம் -161 சீட்டுகள் பெற்றன.
( இதில் பாஜக -105; சிவசேனா -56)

பவாரின் தேசியவாத காங்கிரஸும்+காங்கிரஸ் கட்சியும்
கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு மொத்தமாக -98 சீட்டுகள்
பெற்றன.
( இதில் பவார் காங்கிரஸ் -54; காங்கிரஸ் -44)

முடிவுகள் வெளிவந்த பிறகு, பாஜகவுக்கும், சிவசேனாவிற்கும்
அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதில் மோதல் வந்து விட்டதால்
இன்று வரை யாராலும் ஆட்சியமைக்க முடியவில்லை.

தங்களுக்கு 50 % ஆட்சியில் பங்கும், இரண்டரை வருடத்திற்கு
முதலமைச்சர் பதவியும் கொடுக்கவில்லையென்றால் –
கூட்டணியை முறித்துக் கொள்வதாக சிவசேனா
அறிவித்திருக்கிறது..

இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் – இறுதியாக
யாரும் யாரும் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கப்போகிறார்கள்
என்பது குறித்து (சட்டவிரோத) சூதாட்டமான சட்டா பஜாரில்
பெட்டிங் வாங்குகிறார்களாம்.

இருக்கக்கூடிய வாய்ப்புகள் –

1) பாஜக+சிவசேனா …
2) பாஜக+சிவசேனாவை உடைத்து ஒரு பகுதியுடன் சேர்ந்து…!!!
3) சிவசேனா+பவார் காங்கிரஸ்+ காங்கிரஸ்….

( இதற்கு சிவசேனா தயாராக இருந்தாலும்,
பவார் காங்கிரசும், காங்கிரசும் – தயாரில்லை என்று
வெளியே சொல்கின்றன… – உள்ளுக்குள்ளே என்ன
தீர்மானமோ தெரியாது…)

எது எப்படி இருந்தாலும், 7-ந்தேதிக்குள்ளாக இந்த விஷயம்
முடிவுக்கு வந்தாக வேண்டும்…

இந்த 3 விதமான வாய்ப்புகளே இருக்கும் என்கிற நிலையில்
இப்போது சட்டா பஜாரில் ஒரு புதிய சாய்ஸ் வந்திருக்கிறதாம்…
நம்பவே முடியாத பாஜக+காங்கிரஸ் கூட்டணி…!!!!!!!!!!!!!!!!!

இந்த அரசியல் கட்சிகளின் நம்பகத்தன்மை இன்மையையே
முதலீட்டாக்கி, ஒரு புதிய பிழைப்பை உருவாக்கி இருக்கின்றன
சட்டா பஜார் சூதாட்ட கம்பெனிகள்…!!!

இந்த கூட்டணி ஆட்சி அமையும் என்று பெட் கட்டுபவர்கள்
ஜெயித்தால், ஒன்றுக்கு பத்து என்கிற கணக்கில் பரிசுப்பணம்
(அதாவது 100 ரூபாய் கட்டினால், 1000 ரூபாய்…!!!)
தருவதாக மும்பை சட்டா பஜார் கூறுகிறதாம்…

இப்படி ஒரு கூட்டணி ஆட்சி உருவாகும் என்பதை
மஹாராஷ்டிரா அரசியலில் யாருமே நம்பவும் இல்லை;
எதிர்பார்க்கவும் இல்லை.

இருந்தாலும், ஒன்றுக்கு பத்து என்கிற பெரும்
தூண்டிலை வீசி –
சூதாடிகளின் நப்பாசையை தூண்டி விட்டு,
ஒரு அலையை உருவாக்கி இருக்கிறதாம்
மும்பை சட்டா பஜார்….!!!

காரணம் – இது நடக்கவில்லை என்றால் –
பெட் கட்டுபவர்களின் பணம் அனைத்தும்
சொளையாக சூதாட்ட அமைப்பிற்கு போய் விடும்….

10 ரூபாயை கட்டி வைப்போம்…
போனால் 10 ரூபாய் தான்; ஆனால்,
வந்தால் 100 ரூபாய் ஆயிற்றே என்று எண்ணும்
சூதாடிகளும் இருக்கிறார்களே…!

இப்படி ஒரு கண்ராவி ஒரு அரசியல் –
-இதையும் வைத்து பணம் பண்ணும் ஒரு கூட்டம்…!
நல்ல ஜனநாயகம்…!!!

.
———————————————————————————————————–

– 01/11/2019 அன்று வெளியான(latest )
விமரிசனம்-காவிரிமைந்தன் பேசும் தளம் கீழே –

….

.
——————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to பாஜக+காங்கிரஸ் கூட்டணி அரசு …!!! மும்பை சட்டா பஜார்…ஒன்றுக்கு பத்து கொடுக்கிறதாம்…!!!

 1. Prabhu Ram சொல்கிறார்:

  பாஜக + காங்கிரஸ் கூட்டணி அரசு – ஹா ஹா ஹா
  பிரமாதமான கற்பனை.

 2. Subramanian சொல்கிறார்:

  எனக்கு உனக்கு என்று முதலமைச்சர் பதவிக்கு
  போட்டியிடுகிறார்கள் பாஜகவும், சிவசேனாவும்.
  கடைசியில் எங்களுக்கில்லாதது வேறு யாருக்கும்
  கிடைக்கக்கூடாதென்று, பாஜக ஜனாதிபதி ஆட்சியை
  கொண்டு வந்து விடப்போகிறது.
  பாவம் சிவசேனா.

 3. புதியவன் சொல்கிறார்:

  /இப்படி ஒரு கண்ராவி ஒரு அரசியல் – -இதையும் வைத்து பணம் பண்ணும் ஒரு கூட்டம்…! நல்ல ஜனநாயகம்…// – இது எல்லாவற்றிர்க்கும் (கண்ராவி அரசியல்) ஆதி மூலம் கருணாநிதிதான். அவர்தான் மைனாரிட்டி அரசை, அதுவும் தார்மீக நெறி முறையை மீறி அமைத்தவர்.

  அது இருக்கட்டும். பேசாம, பாஜகவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பார். அதன் பிறகு வேறு வழியில்லாமல் சிவசேனா பணியும் அல்லது அவர்கள் கட்சியிலிருந்து ஒரு குழு வந்து பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும். இது நடக்கவில்லை என்றால் ஜனாதிபதி ஆட்சிதான் அமையும்.

  என் கருத்து… எந்தக் காரணம் கொண்டும் சிவசேனைக்கு முக்கியத்துவம் பாஜக கொடுக்கக்கூடாது.

 4. புவியரசு சொல்கிறார்:

  என் கருத்து – பாஜக, சிவசேனா இரண்டுமே மக்களை முட்டாளாக்க
  பார்க்கிறது. எனவே, இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த
  ஒரு பயலுக்கும் ஆட்சியமைக்க சான்ஸ் கொடுக்கக் கூடாது.

  இவர்களில் ஒரு கட்சியின் துணை இல்லாமல், வேறு யாரும்
  ஆட்சி அமைக்க முடியாது.

  மக்களை பைத்தியமாக்கிய இவர்களை பைத்தியமாக்க வேண்டும்.,
  சட்டமன்றத்தை 6 மாதங்களுக்கு suspend செய்ய வேண்டும்.
  இந்த பயல்களுக்கு சம்பளம் கூட கிடைக்ககூடாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.