நகைச்சுவை – திருமதி ராதிகாவின் கருத்து – அப்படியே ஏற்கத்தக்கது.


நமது சமூகத்தில் நிலவும் பெரும்பாலான பதட்டமான
சூழ்நிலைகளுக்கு, நம் மக்கள் எப்போதும் ஒரு விதமான
அழுத்த உணர்வோடே இருப்பதும் ஒரு காரணம்.

மனதை லேசாக வைத்துக் கொள்ள வேண்டியதன்
அவசியத்தையும், அதனால் ஏற்படக்கூடிய பயன்களையும்
இவர்கள் புரிந்து கொண்டால், பல அநாவசியமான
மன அழுத்தங்களையும், உடல்நலக்கேடுகளையும்
தவிர்க்கலாம்…

குடும்பத்திலும் சரி, பணி புரியும் இடங்களிலும் சரி,
வெளியுலகிலும் சரி – டென்ஷன் இல்லாமல் இருக்கப்
பழகினாலே, நமது தனிப்பட்ட ஆரோக்கியம் பலமடங்கு
உயரும் என்பது உண்மை.

தமிழ்நாட்டில், பொதுவாக – நம் மக்களிடம் நகைச்சுவை
உணர்வு ( sense of humour ) மிகவும் குறைவு என்பது என்
அபிப்பிராயம்.

முக்கியமாக, நமது அரசியல்வாதிகளிடையே –
நகைச்சுவை உணர்வு சுத்தமாக இல்லவே இல்லை.
இந்த விஷயத்தில் நான் லாலு பிரசாத் யாதவ்
அவர்களின் ரசிகன்…. அவர் அளவிற்கு நகைச்சுவை
உணர்வை இந்திய அரசியல்வாதிகள் யாரிடமும் பார்க்க
முடியாது…..

முந்தையகால தலைவர்களிடையே சுதந்திரா கட்சியைச்
சேர்ந்த பிலூ மோடி என்கிற பாராளுமன்ற உறுப்பினர்
இருந்தார். அவர் இருந்தால், பாராளுமன்றத்தில் கலகலப்புக்கு
பஞ்சமே இருக்காது. யாரை வேண்டுமானாலும் கலாய்ப்பார்…
இந்திரா காந்தியைக்கூட அவர் விட்டு வைத்ததில்லை.

( இந்த சமயத்தில் மறைந்த துக்ளக் ஆசிரியர் ‘சோ’
அவர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை …!!! )

இப்போதைய தமிழ்நாட்டில், பொதுவாழ்வில் உள்ள
மனிதர்களில் – கலகலப்பானவர் என்று யாரையாவது
அடையாளம் காட்டச் சொன்னால் – நீங்கள் யாரைச்
சொல்வீர்கள்…?

அண்மையில், திருமதி ராதிகா சரத்குமார் அளித்த
சுவாரஸ்யமான தொலைக்காட்சி பேட்டி ஒன்றைப் பார்த்தேன்….
இந்த விஷயத்தை அவர் கூட வலியுறுத்திக் கூறுகிறார்.
நல்ல பேட்டி… நீங்களும் தான் பாருங்களேன்…

.
———————————————————————————————————–

விமரிசனம் இடுகையின் – பேசுதளம் …
( கடைசியாக 29/10/2019 அன்று வெளியான வீடியோ கீழே )

.
—————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to நகைச்சுவை – திருமதி ராதிகாவின் கருத்து – அப்படியே ஏற்கத்தக்கது.

 1. sakthi சொல்கிறார்:

  நன்றி வாழ்த்துகள். தொடரவும்.
  ஒலிப்பதிவில் இருக்கும் சில குறைகளை சரி செய்யலாம்.ஒலிப்பதிவின் போது ஒலிவாங்கியை சரியான தூரத்தில் பிடிப்பது,ஒலிபெருக்கியை நிறுத்தி வைப்பது,தேவையற்ற சத்தங்களை சரி செய்ய ஃபில்டரை பாவிப்பது போன்றவை.சில சமயம் எக்கோ போல் சத்தம் வருகிறது.

  You Tube இல் கேட்பதுடன் படிக்கவும் செய்யலாம்.Show more..என்பதை கிளிக் செய்து ஒலிப்பதிவை விரும்பியவர்கள் படிக்கவும் முடியும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உங்கள் ஆலோசனைக்கு நன்றி சக்தி.

   இன்னும் 2-3 பதிவுகளுக்குள்ளாக
   இவற்றை சரிசெய்து விட முடியும் என்று
   நம்புகிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.