…
…
…
…
மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக+சிவசேனா
கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று,
ஆட்சியமைக்கத் தேவையான பலத்தைப் பெற்றுள்ளது….
இறுதியில், இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்து விடுவார்கள்..
அதில் ஒன்றும் ஐயம் இல்லை.
இருந்தாலும் ……..
அதற்கு முன்னால்,
இத்தனை அவலங்கள், அவமானங்கள் ஏன்..?
விதி – யாரை விட்டது…?
உத்தமன் அரிச்சந்திரனையே விடவில்லையே…?
வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்க முடியாமல்
இழுபறியாகத் திண்டாடும், அவமானம் ஏன் வந்தது…?
“முற்பகல் செய்யின் …….” பழமொழி நினைவுக்கு
வருவதைத் தவிர்க்க முடியவில்லை….
.
—————————————————————————-
//அதற்கு முன்னால், இத்தனை அவலங்கள், அவமானங்கள் ஏன்..?//
1. பாஜக, சிவசேனாவுடன் கூட்டு சேர்ந்திருக்கக்கூடாது. தனியாகவே நின்றிருக்கவேண்டும். சிவசேனா எப்போதும் கம்பிளெயிங் பார்ட்னர்.
2. அப்படியும் சேர்ந்து நின்றதற்குக் காரணம் ‘எதிர்ப்பு வாக்குகள்’ அதிகம் இருக்கும், காங்கிரஸ்+சரத் பவார் கூட்டணியை வெற்றிபெற சேர்ந்துதான் நிற்கவேண்டும் என்ற கம்பல்ஷன் ஆக இருக்கும். அப்படி இருந்தால், இப்படி கஷ்டப்பட வேண்டியதுதான். சிவசேனை, மகாராஷ்டிராவின் தேதிமுக போலிருக்கு.
என் அனுமானம்… பொருளாதார சிரமங்களினால் மகாராஷ்டிராவில் வாக்குகள் பாதிக்கும் என்று பாஜகவுக்கு தகவல் வந்திருக்கணும். இல்லைனா பட்னாவிஸ் அரசின் பெர்ஃபாமன்ஸ் மக்களுக்கு திருப்தியாக இருந்திருக்காது. இல்லைனா, மோடி பவர் குறைந்திருக்கணும்.
இவை எல்லாவற்றையும் தாண்டி,
காவிரிமைந்தன் சார் சொன்னது போல்,
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”
தான் காரணம். பாஜக, கோவா, அஸ்ஸாம்
போன்ற மாநிலங்களில் தகிடு தத்தங்களில்
ஈடுபட்டு, எதிர்க்கட்சிகளை நாசம் பண்ணி
ஆட்சியை நீதிக்கு புறம்பாக கைப்பற்றியதன்
வினை தான் மஹாராஷ்டிராவில் இன்று
அது அனுபவிக்கும் அவமானம்.