123 வயதுப் பெரியவர்…!!!
கீழே ஒரு தந்தி டிவி காணொளிச் செய்தி…

எனக்கென்னவோ, இந்த காணொளியையும்,
செய்தியும் – எனக்குள் ஒரு திகிலைக் கிளப்புகிறது.

76 வயதே போதும் போதும் என்கிறது…
இன்னமும் 50 ஆண்டுகள் என்றால்…. அய்யோ…!!!

ஹிந்தியில் ஒரு வார்த்தை சகஜமாக புழங்குவது உண்டு…

“ஜீனா ஹீ முஷ்கில் ஹை” …

அதாவது வயதாகி விட்டால் –
“(ஜீவித்து) இருப்பதே ஒரு கஷ்டம்…”

இந்தப் பெரியவர் பரவாயில்லை…
தெம்பாக செயல்படுகிறார்…
நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழட்டும்…

ஆனால், என்னைப் பொருத்த வரையில் –
நினைக்கும் விதத்தில் செயலாற்ற முடிகிற வரை
வாழ்ந்தால் போதும்; செயலற்ற நிலையில் இருப்பதை விட
போய்ச் சேர்வதே நிம்மதி… சந்தோஷம்…
என்று நினைக்கிறேன்..

எவ்வளவு தான் யோக்கியமாக வாழ்ந்தாலும்,
ஆரோக்கியம் என்பது 100 % நம் கையில் இல்லை…!
இது என் அனுபவம்.

அதற்கு கொஞ்சம் “கொடுத்தும்” வைத்திருக்க வேண்டும்…
அம்மா, அப்பா – கொடுப்பது சொத்து மட்டும் தானா…?
– ரத்த அழுத்தம், சர்க்கரை, இதயம்…?

இளமையில் வறுமை…?
நினைவு தெரிந்து நமது வாழ்க்கையை நாமே
திருத்தமாக அமைத்துக் கொள்ளும் வரையில்
நாம் வாழ்ந்த சூழ்நிலை…?
Foundation strong-ஆக இல்லையென்றால்,
கட்டிடம் எப்படி பலமாக இருக்கும்….?

இவையெல்லாவற்றையும் தாண்டி –
முந்தைய பிறவியிலிருந்து நாம் “கொண்டு” வந்தவை … 🙂 🙂

உடல் நலத்தைப் பொறுத்த வரையில் –
இவையெல்லாம் கூட நிறைய பங்கு வகிக்கின்றன ..!!!

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to 123 வயதுப் பெரியவர்…!!!

 1. Subramanian சொல்கிறார்:

  ரெக்காரட்ஸ் என்னதான் சொன்னாலும்,
  இவருக்கு 123 வயது என்று நம்ப முடியவில்லை.

 2. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  வணக்கம் சார், இந்த கருத்துரை இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாதது, மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் சுஜித்தை மீட்க இப்பவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் இது போல் நிகழும் போது மட்டும் பேசிவிட்டு மீண்டும் அதே நிலை தொடர்கிறது, இதைப்பற்றிய விவாத்துக்கான உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஜிஎஸ்ஆர்,

   இந்த விஷயத்தில் தமிழ்நாட்டில் சட்டவிதிகள்
   மிகத்தெளிவாக கூறுகின்றன –

   எந்த கம்பெனி “போர்வெல்” பள்ளத்தை
   தோண்டுகிறதோ, அந்த கம்பெனி, அதை உரிய
   முறையில் மூடாமல் அங்கிருந்து செல்வது
   தண்டனைக்குரிய குற்றம். இதில் சம்பந்தப்பட்ட
   போர்வெல் கம்பெனி உரிமையாளரை உடனடியாக
   சிறையில் தள்ளி, அவர்களது எந்திரங்களை அரசு
   பறிமுதல் செய்ய வேண்டும்.

   அந்த செய்திக்கு அனைத்து மீடியாக்களிலும்
   முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

   அந்தக் குழந்தையின் பெற்றோரும்,
   அஜாக்கிரதைக்காக தண்டிக்கப்பட வேண்டியவர்களே
   என்றாலும், ஏற்கெனவே அவர்கள் துன்பத்தில்
   இருப்பதால், அவர்களுடன் சேர்ந்து நாமும்
   துயரத்தில் பங்கு கொள்வதைத்தவிர வேறு
   என்ன செய்ய முடியும்..?

   இந்த மாதிரி விபத்துகளில் சிக்கிக்கொள்ளும்
   குழந்தைகளை மீட்கும் எந்திர வசதிகளை
   ஒவ்வொரு மாவட்டத்திலும், தமிழக அரசு
   உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

   இத்தனை பாடங்களுக்குப் பிறகும்,
   மீண்டும் இப்படி அஜாக்கிரதையால் ஒரு உயிர்
   பறிபோகும் நிலை ஏற்பட்டிருப்பது
   மிகவும் வேதனை தருகிறது.

   -காவிரிமைந்தன்

   • ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

    சார் நம்மிடம் இவ்வளவு மனித வளம், தொழில் நுட்பம், கல்வியறிவு இத்தனை இருந்தும் இது போன்ற நேரங்களில் குழந்தைகளை காப்பாற்ரும் வண்ணம் எளிமையான தொழில் நுட்பம் இல்லாதது அதற்காக அரசு முனைப்பு காட்டது இன்னும் எத்தனை காலத்துக்கு இது தொடர போகிறதோ, மனம் மிக்க வருந்துகிறது அந்த பாலகனை நினைத்து

 3. புதியவன் சொல்கிறார்:

  123 வயது என்பது சாதாரணமானதுதான் இவங்களுக்கு. இன்னும் சில யோகிகள் அதிகமான வருடங்கள் ஜீவித்து இருக்காங்க என்பதையும் படித்திருக்கிறேன். அதுக்கு அவங்க காரணமாச் சொல்வது நிமிடத்துக்கு எவ்வளவு குறைவாக சுவாசம் செய்கிறார்கள் என்பதைத்தான்.

  சொன்னால் தவறாத்தான் தெரியும். நான் வேண்டுவது 70ஐ எக்காரணம் கொண்டும் தாண்டக்கூடாது என்பதுதான். ஓய்வு பெற்றபின் 15 வருடங்கள் இருந்தாலே மிக அதிகம் என்பது என் எண்ணம். அதைவிட முக்கியமா நான் நினைப்பது 68 லிருந்தே, எந்த விநாடியில் காலன் வந்தாலும், ‘நான் ரெடி கிளம்ப’ என்ற நிலையில் இருக்கணும்.

  யோகா, மூச்சுப் பயிற்சி, எதிலும் மிகக் குறைவான அளவு என்று வாழ்ந்தாலே நாம ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனா பாருங்க.. இந்த ஞானம் எல்லோருக்கும் 50+ல தான் வருகிறது (பெரும்பாலும்)

 4. ஸ்ரீனிவாசன் சொல்கிறார்:

  //ஆரோக்கியம் என்பது 100 % நம் கையில் இல்லை…!
  இது என் அனுபவம்.//

  நிச்சயமாக ஆரோக்கயம் என்பது 99% அவரவர் கையில்தான் உள்ளது. மீதி 1% நேரம்/காலமும் கைகூட வேண்டும் அவ்வளவே. தற்சமயம் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் ஆரோக்கிய சீர்கேட்டிற்கு நமது உடல் மற்றும் உண்ணும் உணவு பற்றிய முழுமையான விழிப்புணர்வு இல்லை. இன்னொரு பக்கம் நம்மூர் அரசியல்வாதிகளும், எந்த வழியில் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம், ஆக மொத்தம் பணம்தான் முக்கியம் என நினைக்கும் வியாபாரிகளும் இவர்களைவிடவும், இன்னும் என்ன நடக்கிறது நாம் நம் ஊர் எந்த நிலையில் இருக்கிறது என சிறிதும் தெரியாமல் இவர்களை ஊக்குவிக்கும் மக்களும் முக்கிய காரணம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.