ஹரியானாவில் … பயில்வானும் – பச்சாவும் …!!!


ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் யாருக்கும்
பெரும்பான்மை தராததால், 10 எம்.எல்.ஏ.க்களை
கொண்ட, ஜனநாயக (!!!) ஜனதா தள் தலைவர்
துஷ்யந்த் சவுதாலா, பாஜக தலைவர் அமீத்ஜீயுடன்
ஒரு உடன்படிக்கை செய்துகொண்டு பாஜக அரசுடன்
கூட்டணி ஆட்சியமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதன் முக்கியத்துவம் தெரிய துஷ்யந்த் சவுதாலா
யாரென்று அறிவது மிகவும் அவசியம்.

நம்ம தேவகவுடாவின் தோஸ்த்தும், முன்னாள்
துணைப்பிரதமருமான (!!!) மறைந்த தேவிலால
அவர்களின் மகன் வயிற்று கொள்ளுப்பேரன் தான்
இந்த துஷ்யந்த்.

இந்த மஹா தலைவரின் கொள்ளுத் தாத்தா –
முன்னாள் துணைப் பிரதமர் என்றால் –

தாத்தா, 4 முறை ஹரியானா முதலமைச்சராக
பதவி வகித்திருந்த ஓம் பிரகாஷ் சௌதாலா.

அவரது மகன் – இவரது தந்தை அஜய் சௌதாலா….

இவரது தந்தையும், தாத்தாவும் – பதவியிலிருந்தபோது
செய்த ஊழல்களுக்காக, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு,
10 ஆண்டுக்கால சிறைவாசத்தில் தற்போது
கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

துஷ்யந்த் சௌதாலா – தேர்தல் முடிந்ததும்,
தாத்தாவையும், தந்தையையும் – சிறையில் சந்தித்து
ஆலோசனை நடத்திவிட்டு – அமீத்ஜியை சந்தித்து
சில கண்டிஷன்’கள் போட்டு, கூட்டணிக்கு கையெழுத்து
போட்டிருக்கிறார்…

கண்டிஷன்களில் சில –

இந்த துஷ்யந்த் சௌதாலா துணை முதலமைச்சர்
ஆக்கப்பட வேண்டும்.

இவர் சொல்லும் இன்னும் 2 பேர்
அமைச்சர்களாகவும்,
ஒருவர் துணை அமைச்சராகவும்
நியமிக்கப்பட வேண்டும்.

இவரது கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட்
கொடுக்கப்பட வேண்டும்.

இவர் போட்ட அத்தனை கண்டிஷன்களையும்
பாஜக தலைமை உடனே ஏற்றுக்கொண்டு ( 🙂 🙂 )
சம்பந்தப்பட்ட தலைவர்கள் அனைவரும்
வெற்றிச் சின்னத்தைக் காட்டி எடுத்துக் கொண்ட
புகைப்படம் கீழே –

பாவம் துஷ்யந்த் ….
என்ன தான் 4-ம் தலைமுறை அரசியல்வாதி என்றாலும்,
யாரிடம் யார் கண்டிஷன் போடுவது என்று
ஒரு வரைமுறை தெரிய வேண்டாமா…?

இன்றிலிருந்து – ஒரு 7-8 மாதங்களுக்குப் பின்னர்
துஷ்யந்த் சௌதாலா கொடுக்கவிருக்கும்
புகைப்பட போஸ் எப்படி இருக்கும் என்பதையும்
இப்போதே நம்மால் யூகிக்க முடிகிறது…. 🙂 🙂 🙂
கீழே –

ஆனால், இந்த புகைப்படத்தின் அர்த்தம்
என்னவாக இருக்குமென்றால் –

எங்கள் எம்.எல்.ஏ.க்கள் -10 பேரில், 8 பேர்
பாஜகவில் ஐக்கியமாகி விட்டாலும், நானும்
இன்னொரு எம்.எல்.ஏ.வுமாக இன்னும் 2 பேர்
ஜனநாயக ஜனதா தள்’ளில் பாக்கி
இருக்கிறோம்…!!! 😉 🙂 🙂

————–

யாரிடம் யார் கண்டிஷன் போடுவது என்று
ஒரு விவஸ்தை இல்லையா என்ன…

பயில்வானுடன், “பச்சா” கோதாவில் இறங்கலாமா…?

(“பச்சா” – ஹிந்தி சொல்;
தமிழில் இதன் அர்த்தம் “குழந்தைப்பையன்..” )

.
——————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ஹரியானாவில் … பயில்வானும் – பச்சாவும் …!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  //யாரிடம் யார் கண்டிஷன் போடுவது என்று ஒரு விவஸ்தை இல்லையா என்ன…//

  கா.மை. சார்… ரொம்ப சீக்கிரமா இதை எழுதிட்டீங்க.

  எனக்குள்ள சந்தேகம் தாக்ரே சிவசேனா, பச்சாவா இல்லை பயில்வானா? அதை எப்போ சொல்வீங்க? கட்டுச்சோத்துக்குள்ள பெருச்சாளியை ஏன் அமித்ஷா சேர்த்துக்கொண்டார்னு யோசிக்கிறேன்.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  // எனக்குள்ள சந்தேகம் தாக்ரே சிவசேனா,
  பச்சாவா இல்லை பயில்வானா? //

  இப்போதைக்கு, தாக்கரே ஒரு நரி…
  புலித்தோல் போர்த்திய நரி…
  தான் வேறு எங்கெங்கோ பண்ணிய பாவத்திற்கு –
  இங்கே, இவரிடம் மாட்டிக்கொண்டு விழிக்க வேண்டும்
  என்பது குஜராத்தி ஜூனியரின் விதி –
  தலைவிதி…!!! 🙂 🙂 🙂

  மஹாராஷ்டிராவில் – சீரியசாக இல்லாவிட்டாலும்,
  இன்னும் நிறைய வேடிக்கைகள் காத்துக்
  கொண்டிருக்கின்றன என்று தோன்றுகிறது.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.