வைகோ சொல்கிறார்…. பஞ்சமி நிலம் பிரச்சினை – ஸ்டாலின் தீர்த்து வைத்து விட்டார்…


செய்தியிலிருந்து கொஞ்சம் –

( https://www.hindutamil.in/news/tamilnadu/521835-murasoli-land-issue-
vaiko-slams-pon-radhakrishnan-1.html )

முரசொலி அலுவலகம் இடம் பஞ்சமி நிலம்
என நான் கூறினேனா? – வைகோ விளக்கம்

முரசொலி அலுவலகம் இடம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்
தெரிவித்துள்ள கருத்து திசை திருப்பும் முயற்சி என, மதிமுக
பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான
வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (அக்.24) வெளியிட்ட
அறிக்கையில் –

“பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும்,
முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன்
ராதாகிருஷ்ணன் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள
இடம் பஞ்சமி நிலம் என்று நான் கூறியதாகத்
தெரிவித்திருக்கிறார்.

அப்போதைய சூழ்நிலையில் நான் அதுபோன்று கருத்து
தெரிவித்து இருக்கலாம். 🙂 🙂 🙂
————————————————
(எப்போதைய சூழ்நிலையில் ….?
அப்போதைய சூழ்நிலையில் பொய் சொன்னேன் என்று
சொல்கிறாரா…? )
————————————————

ஆனால் அக்கருத்து தவறானது என்பதை
பின்னர் உணர்ந்தேன். 🙂 🙂 🙂

————————————————–
( எப்போது உணர்ந்தார்…?
மீண்டும் ஸ்டாலினுடன் கூட்டணி வைத்தபோதா…? )

எப்படி உணர்ந்தார்…? ஆவணம்
எதையாவது பார்த்தாரா…? பார்த்திருந்தால், அதைச்
சொல்ல வேண்டியது தானே…?
—————————————————

தற்போது இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டு இருப்பதால்
திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித்
தலைவருமான மு.க.ஸ்டாலின் மிகத்தெளிவான
விளக்கத்தை அளித்திருக்கிறார்.
———————
என்ன விளக்கம்…?
எத்தகைய விளக்கம்…?
ஆவணத்தைக் காட்டி விளக்கினாரா…?

———————————————————-
அது பஞ்சமி நிலம் தான் என்று நிரூபித்தால்
அரசியலை விட்டே விலகத் தயார் என்று அறைகூவல்
விடுத்திருக்கிறார்.
(இது தான் தீர்த்து வைக்கிற லட்சணமா…?)
——————————————–

ஆவணம் யாரிடம் இருக்கும்…?
இடத்தின் சொந்தக்காரரான ஸ்டாலினிடம் தானே…?
ஆவணத்தைக் காட்டி, அந்த இடம் பஞ்சமி நிலம் அல்ல
என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது…?
ஸ்டாலினுடையது அல்லவா…?

———————————————–

தமிழ்நாட்டில் பற்றி எரியும் எத்தனையோ பிரச்சினைகளை
திசை திருப்ப சிலர் முயல்கிறார்கள்….!!!

அசுரன் படத்தைப் பார்த்து விட்டு,
கருத்து சொல்லப்போய் –
இந்த பிரச்சினையை துவக்கியவரே ஸ்டாலின் தானே…?

———————————————–

மத்திய அரசின் தமிழ்நாட்டுக்கு எதிரான துரோகங்களை
மக்கள் மன்றத்தில் திசை திருப்புவதற்காக திமுக மீது சிலர்
உள்நோக்கத்தோடு கணைகள் வீசுவதை தமிழக மக்கள்
நன்றாக உணர்வார்கள்….

————————————

பொய்யிலே பிறந்து,
பொய்யிலே வளர்ந்த
புலவர் பெருமானே….!!!

பாவம் வைகோ – இப்படியெல்லாம் அவர்
சிரமப்படத் தேவையே இல்லை. அவ்வப்போதைய
கூட்டணிக்காக அவர் என்ன வேண்டுமானாலும்
செய்வார்; எப்படி வேண்டுமானாலும் பேசுவார் –
என்பதை விஜய்காந்துடன் அவர்
மக்கள் நலக்கூட்டணி வைத்தபோதே மக்கள்
புரிந்து கொண்டு விட்டார்கள்.
இவர் இப்படியெல்லாம் தன்னிலை விளக்கம்
அளிக்கத் தேவையே இல்லை. 🙂 🙂

எத்தனை அனுபவப்பட்டாலும்,
எத்தனை வயதானாலும் –
கடைசி வரை இவர் மாறவே மாட்டாரா…?

எவ்வளவோ திறமைகள் உடைய ஒரு மனிதர் –
சுயநல அரசியலுக்காக இப்படி,
இவ்வளவு கேவலப்பட்டு கிடக்கிறாரே !!

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to வைகோ சொல்கிறார்…. பஞ்சமி நிலம் பிரச்சினை – ஸ்டாலின் தீர்த்து வைத்து விட்டார்…

  1. புதியவன் சொல்கிறார்:

    நீங்கதான் பாவம்…வைகோ சொன்னவைகளுக்குக் கவலைப்படுறீங்க.

    அவர் ஒரு அரசியல் வியாபாரி (நல்ல வார்த்தைதான் உபயோகப்படுத்தியிருக்கேன்). கம்யூனிஸ்டுகள், மற்ற அரசியல் கட்சிகள் மாதிரி வை.கோவும் எந்தக் கட்சியில் அப்போ இருக்காரோ, எந்தக் கொள்கையை அப்போ ஃபாலோ பண்ணுகிறாரோ அதற்கு ஏற்றவாறு பேசும் நாக்கு வியாபாரி வை.கோ.

    அரசியல்வாதிகள் பேசுவதெல்லாம் காணொளியாகவும், செய்தியாகவும் இணையத்தில் கொட்டிக்கிடப்பதால்தான், இவங்களோட வேஷம் நமக்கு நல்லாப் புரியுது. இப்போ திமுகவில் மூழ்கிவிட்டதால், வைகோவுக்கு சாராயப் பிரச்சனை பெரிதாகத் தெரியாது. நிலம் கொள்ளையடிப்பது பெரிய பிரச்சனை அல்ல. அவருக்கு இப்போதைய பிரச்சனை பாஜக தமிழகத்தில் வளரக்கூடாது என்பது மட்டுமே (நாளை பாஜகவோடு கூட்டுச் சேரும்போது அதற்கு ஒரு விளக்கம் அளிப்பார். அப்போது மீண்டும் நீங்க பழைய செய்திகள், காணொளிலாம் போட்டு அவரைத் தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள்)

    //எவ்வளவோ திறமைகள் உடைய ஒரு மனிதர்// – வேலைக்கு எடுக்கும்போது ஒருவனின் குவாலிபிகேஷன், எக்ஸ்பீரியன்ஸ் முக்கியமா இருக்கும். ஆனா இன்கிரிமெண்ட் சமயத்துல, அவன் என்ன டெலிவரி பண்ணினான் என்பதுதான் முக்கியமா இருக்கும். வை.கோவுக்கு இருக்கும் திறமைகள், அவரது குணம், நடவடிக்கை, சுயநலம் போன்றவற்றால், சாக்கடையில் விழுந்துவிட்ட சமைத்த உணவுப்பொருள் போன்றது. அதனால் வைகோவால் தமிழகத்துக்கு உபயோகம் இல்லை. ஆனால் அவரது பையன் துரை வையாபுரிக்கு உபயோகம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.