…
…
…
இறைவன் படைப்பில் குழந்தைப் பருவம் தான்
மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட பருவம்.
சிந்திக்கவோ, கவலைப்படவோ –
அவசியமோ, அனுபவமோ இல்லாத
அந்தப் பருவம் தான் எத்தனை இனிமையானது…?
நமது குழந்தைப் பருவத்தை நாம் பார்த்திருக்க
மாட்டோம். எப்படி அனுபவித்தோம் என்றும்
நமக்குத் தெரியாது.
ஆனால், மற்ற குழந்தைகளைப் பார்க்கும்போது,
அதை ஓரளவு உணரவும், நினைத்து ரசிக்கவும் முடிகிறது.
இந்த காணொளியில் வரும் குழந்தைகளின்
அற்புதமான முகபாவங்களைப் பார்க்கப் பார்க்க
பரவசம் ஏற்படுகிறது.
பேசக்கூட தெரியாத வயதில், ஒரு குழந்தை
வேண்டுமென்றெ – குறும்புடன் திரும்ப திரும்ப
சப்தம் எழுப்பவும்,
அடுத்த குழந்தை அதை எப்படி பொறுப்புடன்
சத்தம் போடாதே என்று எச்சரிக்கிறது பாருங்கள்…
பெற்றவர்களுக்கும், இதனை ரசனையுடன்
வீடியோவாக எடுத்து அனுப்பியவர்களுக்கும்
நமது நன்றியும், வாழ்த்துகளும்…!!!
…
…
.
———————————————————————————————————-
My God!! Never seen kids with such extraordinary sensory skills. This kid is one of a kind. Don’t know if this child would grow to be a tough leader in future. Anyway, let us just enjoy the toughness exhibited by this little one.