…
…
…
பல சமயங்களில் நாம் நினைத்துக் கொள்வோம்…
அவ்வளவு தான். இதற்கு மேலும் தாங்காது என்று…
நம் நினைப்பு எந்த அளவிற்கு சரி….?
இதைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல வேண்டும்…
ஆனால், அதற்கு முன்பாக இந்த காணொளியை
பார்க்க வேண்டியது அவசியம்….
(காணொளி உதவி -நண்பர் அஜீஸுக்கு நன்றி…)
…
…
வாழ்க்கையில் –
தாங்கவொணா துன்பங்கள் வரும்போதும் –
தூக்க முடியாத சுமைகளை தூக்க நேரிடும்போதும் –
பல சமயங்களில் நாம் நினைத்துக் கொள்வோம்…
“அவ்வளவு தான் – இதற்கு மேலும்
நம்மால் முடியாது” என்று –
ஆனால், எந்தவொரு மனிதனும் துன்பங்களை தானே
சுமப்பதாக நினைப்பது தவறு…
அவனுக்கு அந்த துன்பங்களையும், சுமைகளையும்
தாங்கும் வலிவை – சக்தியை – அவனைப்படைத்த
இறைவன் கொடுத்திருக்கிறான் என்பதை நினைத்துக்
கொண்டால், எத்தனை பாரங்களையும் சுமக்க முடியும்…
எப்பேற்பட்ட துன்பங்களையும் கடக்க இயலும்…
” மனிதனின் தாங்கும் சக்திக்கு மேலாக
எந்த சுமையையும் படைத்தவன் அவனுக்கு கொடுப்பதில்லை ”
இந்த காணொளியில் –
பின்னணியில், இனிய அரபு மொழியில்,
இசை வடிவில் சொல்லப்படும் வார்த்தைகள் இதைத்தான்
உணர்த்துகின்றன.
.
———————————————————————————————————–
Simply Beautiful.