விடாது கருப்பு …!!! திருவாளர் ஸ்டாலினை துரத்தும் டாக்டர் ராம்தாஸ்….!!!


துவக்கம் ….

வெற்றிமாறன் இயக்கி, தனுஷ் நடித்திருக்கும் படத்தை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பார்த்தார். பின்னர்,
அத்திரைப்படம் குறித்து புகழ்ந்திருந்த ஸ்டாலின்,
“அசுரன் திரைப்படம் பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக
வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதிய வன்மத்தை
எதிர்த்து துணிச்சலுடன் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்,”
எனத் தெரிவித்தார்.

அட்டாக் ….1

இதையடுத்து, இதுகுறித்து கருத்து தெரிவித்த ராமதாஸ்,
திரைப்படத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாடத்தின் விளைவாக –

“முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை
ஸ்டாலின் உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று
நம்புவோம்,” எனத் தெரிவித்தார்.

எசகுபிசகாக மாட்டிக்கொண்ட படலம் –

இந்நிலையில், நேற்று மு.க.ஸ்டாலின், ராமதாஸுக்கு பதில்
அளிக்கும் விதமாக தன் ட்விட்டர் பக்கத்தில்,
“முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலம் என்று ராமதாஸ்
நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!
அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப்
பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத்
தயாரா?,” என சவால் விடுத்திருந்தார். மேலும், அந்தப் பதிவுடன்,
முரசொலி அலுவலகத்துக்கான பட்டாவை ஸ்டாலின்
இணைத்திருந்தார்.

( இது தான் திரு.ஸ்டாலின் தந்துள்ள ஆதாரம்…)

அட்டாக் …2

இந்நிலையில், ராமதாஸ் மீண்டும் இவ்விவகாரத்தில் ஸ்டாலினை
விமர்சித்துள்ளார்.

இன்று (அக்.19) தன் ட்விட்டர் பக்கத்தில்,

1) “முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம்
பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985 ஆம் ஆண்டு
வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார்
மு.க.ஸ்டாலின். இதற்குக் காட்ட வேண்டிய ஆதாரம்
நிலப்பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும்.

அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?

2) முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம்
வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985 ஆம் ஆண்டின்
பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார்
20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?

3) முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு
ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி
ஸ்டாலினுக்குத் தெரியுமா?

4) முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்குச் சொந்தமான மனை
என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர்
மாணவர் நல விடுதி எப்படி வந்தது?

5) நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே?

ஆதவற்றோர் இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம்
கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல்
அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல்
திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட
நியாயவான்கள் தானே திமுக தலைமை,”
என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

…………….

இந்த 4 counter அட்டாக்குகளுக்கும் திருவாளர் ஸ்டாலின்
கொடுக்கப்போகும் ரிடர்ன் பன்ச்’களை தமிழர்கள் ஆவலுடன்
எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

திருவாளர் ஸ்டாலின் சப்தம் போடாமல் ஜகா வாங்கி விடுவார்
என்று ஒரு தரப்பும், இல்லை பதிலுக்கு எப்படி counter
கொடுக்கிறார் பொறுத்துப் பாருங்கள் என்றூ இன்னொரு தரப்பும்
கூறி வருகின்றன…. 🙂 🙂 🙂

எப்படி இருந்தாலும் சரி –
அடுத்த கட்டம் என்ன – ?

தமிழக அரசியலை விட்டு விலகப்போவது யார் …?

இவரா அல்லது அவரா…?
என்பதை தெரிந்துகொள்ள தமிழகமே ஆவலுடன்
காத்திருக்கிறது என்பதே உண்மை.

சஸ்பென்சை நீடிக்காமல் உடனடியாக
திரு.ஸ்டாலின் தனது counter-ஐ தருவாரென்று நம்புவோமாக…!!!

.
—————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to விடாது கருப்பு …!!! திருவாளர் ஸ்டாலினை துரத்தும் டாக்டர் ராம்தாஸ்….!!!

 1. Narayanan Krishnan சொல்கிறார்:

  சவால் விடுவதும் சவடால் பேசுவதும் இரண்டு கட்சிக்கும் அல்வா சாப்பிடுவது போல. இவர்களாவது அரசியலை விட்டு போவவாவது. இதுவெல்லாம் தமிழர்களுக்கு மரத்துபோன விடயங்கள்.

 2. Prabhu Ram சொல்கிறார்:

  நீங்கள் சொல்வ்து சரி தான்.
  ஆனால் ஸ்டாலின் கொஞ்சம் ஓவராக விடுவது போல்
  தோன்றுகிறது.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இது அடுத்த கட்டம் –

  இன்று திரு.ஸ்டாலின் கூறி இருப்பது….

  ——————–
  நான் விடுத்த அறைகூவலை அவர் ஏற்பதாக உறுதி செய்தால்,
  அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக்
  காட்டிட நான் தயார்! ராமதாஸ் நேர்மையான அரசியல்வாதியாக
  இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக்
  கொள்ளலாம்! நான் தயாராக இருக்கிறேன்!
  ——————–

  டாக்டர் ராம்தாஸ் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று
  சொன்னால் மட்டும் தான் ஸ்டாலின் ஆதாரங்களை
  காட்டுவாரா…?

  மக்கள் முன் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம்
  அவருக்கு இல்லையா…?

  ( இன்னொரு விஷயம் – சவால் விட்டது
  டாக்டர் ராம்தாஸ் மட்டும் தான் …
  இவர் ஏன் டாக்டர் அன்புமணியையும் சேர்ந்து
  விலகச் சொல்கிறார்…?
  பாவம்… அன்புமணி …அவர் என்ன பாவம்
  செய்தார்…??? 🙂 🙂 ஸ்டாலின் ஒரே கல்லில்
  இரண்டு மாங்காய் அடிக்கப் பார்ப்பது நியாயமா…? )

  .
  -காவிரிமைந்தன்

 4. புதியவன் சொல்கிறார்:

  திமுக எப்போதுமே நிலக் கொள்ளையர்கள் கூட்டம். அதில் கருணாநிதியோ ஸ்டாலினோ உதயநிதியோ விலக்கில்லை. நிலத்தை ஆட்டையைப் போடுவது அவர்கள் ரத்தத்தில் ஊறியது.

  2011க்கு முன் உதயநிதி மிகப் பெரிய சொத்தை ஒருவரிடமிருந்து மிரட்டி அவரை விரட்டி 1 கோடி கொடுத்து ஆக்கிரமித்துக்கொண்டார். ஜெ. பதவிக்கு வந்தவுடன் அந்த ஓனரிடம் பயந்து சமரசம் பேசி இன்னொரு 2 கோடி கொடுத்தார். அந்த வயதானவர், என் வயதில் சட்டச் சண்டைக்குத் தயாராக இல்லை, இந்தச் சொத்து என் கையை விட்டுப் போவதை விரும்பவில்லை, ஆனாலும் வேறு வழியில்லை என்று அமைதியானார்.

  அண்ணா அறிவாலயத்திலேயே அரசு நிலத்தை ஆக்கிரமித்தது கருணாநிதி. அவரது கோபால புரம் வீட்டிலும் ஏகப்பட்ட பொது நிலத்தை ஆக்கிரமித்து, பிறகு திமுக அல்லக்கைகள் மூலம் மாநகராட்சியில் தீர்மானம் போட்டு தனதாக்கிக்கொண்டார்.

  ஸ்டாலின் சொல்வது பொய். அவர்கள் அரசு நிலத்தைத் திருடியவர்கள். டாகுமெண்ட்ஸை மாற்றி நம்மை ஏமாற்றுவதில் திமுகவினர் எத்தர்கள். அவர்கள் சொத்துக்கள் முழுவதும் அடுத்தவரை மிரட்டிச் சம்பாதித்தவை… திருச்சி அண்ணா அறிவாலயம் உட்பட.

 5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  முரசொலி கட்டப்பட்ட இடம் பஞ்சமி நிலம் இல்லை .
  பஞ்சமி என்பது கிராமங்களில் தலித் பிரிவு மக்களுக்காக
  ஒதுக்கப்பட்ட விவசாய நிலம் .
  மெட்ராஸில் விவசாய நிலம் இருக்க வாய்ப்பு இல்லை !

  மற்றப்படி வேறு எதுவும் தகிடுதத்தம் நடந்து இருக்கலாம் .
  அது பற்றி விவரம் தெரியாது .

  இப்போது நீர் ஆதாரங்களை அபகரிப்பது ஏன் ?
  அதற்கு பட்டா கிடையாது – பொது நிலம் .
  அதை அபகரித்து பிறகு ரெகுலர் செய்து விடலாம் !
  பட்டா போடும் அதிகாரம் ரெவென்யூ வசம் உள்ளது .

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இந்த விஷயத்தை இப்போது,
  டாக்டரின் சார்பில், ஜி.கே.மணி
  பேசத்துவங்கி இருக்கிறார்…

  லேடஸ்டாக, அவர் திரு.ஸ்டாலின் முன்
  வைத்திருப்பவை –

  ———————————

  1) முரசொலி நிலம் தொடர்பான 1924-ஆம் ஆண்டின்
  மூல ஆவணம் முதல் 1960-களில் முரசொலி நிலம்
  வாங்கப்பட்டதற்கான நிலப்பதிவு ஆவணம் வரை
  அனைத்தையும் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்.

  2) அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி
  அமைந்திருந்த நிலம் எப்படி, எவ்வளவு தொகைக்கு
  முரசொலிக்கு மாறியது என்பதை அவர் விளக்க வேண்டும்.

  3) இவற்றைக் கடந்து அரசியலில் நேர்மை என்பது
  சிறிதளவாவது இருந்தால் அண்ணா அறிவாலயத்தில்
  தொடங்கி மாவட்டத் தலைநகரங்களில் கட்டப்பட்டுள்ள
  திமுக அலுவலகங்கள் வரை ஒவ்வொன்றும்
  யார் யாருக்கு சொந்தமான, எவ்வளவு நிலங்களை
  ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன? என்பது குறித்து
  வெளிப்படையான விசாரணையை அரசு நடத்த
  ஆணையிடக் கோரி எதிர்கொள்ள வேண்டும்’’
  என ஜி.கே.மணி கூறியுள்ளார்.

  ——————————————–

  இதில் 3-வது நடவாத காரியம்… விட்டு விடுவோம்.

  1 மற்றும் 2 -ல் ஜி.கே.மணி எழுப்பியிருப்பவற்றை
  திருவாளர் ஸ்டாலின் சுயகௌரவம் கருதியாவது
  அவசியம் உடனடியாக கவனிப்பாரென்று நம்புவோம்.

  .
  வாழ்த்துகளுடன்,
  -காவிரிமைந்தன்

 7. tamilmani சொல்கிறார்:

  திமுக என்றாலே நில அபகரிப்பு என்பது தெரிந்த விடயம்தான். அண்ணாநகர் சென்னையில்
  உலக சுற்றுலா பொருட்காட்சி முடிந்தவுடன் வீட்டு வசதி வாரியத்தின் பெரும்பாலான
  வீட்டுமனைகள் ஆற்காட் வீராசாமி , ஐ ஏ எஸ் ,ஐ பி எஸ் , அதிகாரிகள் (பெரும்பாலும் மலையாளிகள் ) திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு “ஒதுக்கீடு” செய்யப்பட்டு விட்டது .
  இப்போது அதன் மதிப்பு 100 கோடிகளை தாண்டும். திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சி
  வருவதற்குள் அண்ணாநகர் முழுவதும் பெரும் கோடீஸ்வரர்கள் கையில் போய் சேர்ந்து விட்டது.
  ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றவர்கள் நூறு தலைமுறைக்கு
  சொத்து சேர்த்துவிட்டர்கள் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.