…
…
…
2ஜி விவகாரங்கள் வெளியானபோது வெளிச்சத்திற்கு
வந்தவர் நீரா ராடியா…
பர்க்கா தத், கனிமொழி ஆகியோருடன் நிகழ்ந்த
அவரது பதிவு செய்யப்பட்ட டெலிபோன்
உரையாடல்கள் வெளியானபோது – ஏற்பட்ட
பரபரப்பு….???
ஆனால், நம் மக்களுக்கு எல்லாம் மறந்திருக்கும்…
அதை நம்பித்தானே இருக்கிறார்கள் –
அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும்,
இடைத்தரகர்களும்…!!!
அந்தக்காலத்திய நீரா ராடியாவின்
இந்தப் புகைப்படங்களை பார்த்தால்
ஒருவேளை நினைவிற்கு வரலாம்…!!!
…
…
…
…
அவரது பொது /அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்து விட்டது
என்று தான் பலரும் நினைத்திருந்தனர்..
ஆனால் –
தற்போது அதே நபர் யாருடன் இணைந்திருக்கிறார்
தெரியுமா…? அசந்து போய் விடுவீர்கள்….
கீழே வாரணாசியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்
எடுக்கப்பட்டு, உ.பி.முதலமைச்சர் –
(சந்நியாசி) ஆதித்யநாத் அவர்களின்
ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்ட புகைப்படம்…!!!
…
…
( யோகி ஆதித்யநாத் அருகே நிற்பவர் தான் “இன்றைய” நீரா ராடியா…!!! ” )
…
இந்தப்படம் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே
சமூக வலைத்தளங்களில், பலத்த விமரிசனங்கள்
எழுந்ததால், அவை உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட்டன…
காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.
இவரது பின்னணி யோகிஜி -க்கு தெரியாமலா
இருந்திருக்கும்…. தெரிந்து தானே அவர் அழைத்த
நிகழ்ச்சிக்கு லக்னோவிலிருந்து, வாரணாசி வரை
சென்றிருக்கிறார்…?
ஆக, நீராவும் இப்போது கங்கை நீரைப்போல
புனிதராகி விட்டார்…!!!
” சேருமிடத்தில் சேர்ந்து விட்டால்,
எல்லாரும் புனிதர் தானே …!!! ”
.
———————————————————————————————————–
ஊரறிந்த ஒரு ஊழல் பெண்மணிக்கு
இந்த சந்நியாசி ஏன் அடைக்கலம் கொடுக்கிறார் ?
ஏர்கெனவே, கற்பழிப்புக்கார முன்னாள் மந்திரி ஒருவர்,
கொலைகார/கற்பழிப்புக்கார இந்நாள் எம்.எல்.ஏ. ஒருவர் –
எல்லாருக்கும் அடைக்கலம் கொடுத்தது போதாதா ?
உ.பி. மட்டுமல்ல, டெல்லி மட்டுமல்ல –
இந்தியா பூராவும் சிரிக்கிறது இந்த போலி சந்நியாசியை
பார்த்து. அதென்னவோ தெரியவில்லை இவர்கள்
மாநிலத்தில் மட்டும் அயோக்கியத்தனம் செய்பவர்கள்
எல்லாரும் காவி கட்டுகிறார்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு
கண்ட பயல்களெல்லாம் காவி கட்ட
ஆரம்பித்து விட்டார்கள். அந்த கற்பழிப்பு
கல்லூரிக்காரர் சின்மயாநந்தாவை பாருங்கள்.
பொறுக்கிகள் எல்லாம் காவி கட்டினால்,
காவியின் மரியாதை என்ன ஆகும்.
இந்த மாதிரி பொறுக்கிகள் காவி கட்டுவதைத் தடுக்க
எதாவது வழி இருக்கிறதா ?
நிரா ராடியா கையில் நெறைய பணம் உள்ளது
இப்போது நிரா ராடியா Nayati என்ற பெயரில்
மருத்துவமனை நடத்தி வருகிறார் .
வாரணாசியில் உள்ள மருத்துவமனையை
அங்கு உள்ள முதல்வர் யோகி ஆதித்திய நாத்
திறந்து வைத்த போது எடுத்த படம் !
மற்றப்படி வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை !