புதியன கழிதலும்…. பழையன புகுதலும்…!!!


நண்பர் ஒருவர் ஒரு புகைப்படம் அனுப்பி இருக்கிறார் –
1908-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது… நம்பலாம்…!!!

அதில் ஒரு கேள்வியும் தொடர்கிறது –
இன்றைய பசங்களின் லேடஸ்ட் ஹேர் ஸ்டைல்
இதேபோல் தானே இருக்கிறது என்று…!!!

ஆமாமாம். எந்த வித சந்தேகமும் இல்லை.
ஃபேஷன் என்பதே 10 ஆண்டுகளுக்கொரு தடவை
மாறிக்கொண்டே இருப்பது தான். ஒரு ரவுண்டு
முடிந்தவுடன், மீண்டும் பழைய ஸ்டைலில்
துவங்கும்…

இப்போதெல்லாம் பசங்கள்…( பல பெரிசுகள் கூட..!!!)
காதில் கடுக்கன் போடுவதைக்கூட பார்த்திருக்கலாமே…
இதுவும் சுழற்சி தான்.


எங்கள் வீட்டில் ஒரு புகைப்படம் இருக்கிறது.
என் மாமா, தாத்தா ஆகியோர் இருக்கும் படம்.
1915-ல் எடுக்கப்பட்டது. அதில் தெளிவாக கடுக்கன்
மாட்டி இருக்கிறார்கள்.
ஒரே ஒரு வித்தியாசம். அப்போது இரண்டு காதுகளிலும் –
இப்போது ஒரு காதில் மட்டும்…!!!

பாவாடை தாவணி கூட திரும்ப வந்து விட்டதை
பார்த்திருக்கலாமே…!!!

விரைவில் வாலிபர்கள் குடுமியுடன், பைக்கில் –
ஸ்டைலாக ரவுண்டு அடிப்பதயும் காண முடியுமென்று
நம்புகிறேன்…!!!!

என்ன – யாராவது ஒரு ஹீரோ துவக்கி வைக்க வேண்டும்…!!!

புதியன கழிதலும்…. பழையன புகுதலும்… 🙂 🙂 🙂

“காலம் என்னும் சிற்பி செய்யும்…
———— கோலமடா…!!! ”

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to புதியன கழிதலும்…. பழையன புகுதலும்…!!!

 1. Prabhu Ram சொல்கிறார்:

  ஒற்றைக் காதில் கடுக்கன்,
  சதுரவட்டை கிராப் எல்லாம் சகிக்கவில்லை.
  ஆனால், பாவாடை தாவணி மனதிற்கு
  நிறைவாக இருக்கிறது. குறைந்த பட்சம்
  விழாக்காலங்களில், பண்டிகை காலங்களில்
  பெண்கள் பாவாடை தாவணி அணிந்தால்
  பார்க்கவும் நன்றாக இருக்கும். பழைய பண்பாடு
  போற்றப்படுவதால், மனதிற்கும்
  சந்தோஷமாக இருக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.