மெத்த சந்தோஷம் …. வேறென்ன வேண்டும் நமக்கு….?


புதுடெல்லி –

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய அளவில்
கெளதம் அதானி 8 இடங்கள் முன்னேறி
2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2019-ம் ஆண்டு அக்டோபர்
மாத நிலவரப்படி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை
வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் ரிலையன்ஸ்
நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து
மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 3 லட்சத்து 65 ஆயிரத்து
100 கோடி ரூபாய் ஆகும்.

இதன் மூலம் இந்தியாவின் முதல் கோடீஸ்வர இந்தியராக
முகேஷ் அம்பானி உள்ளார். முகேஷ் அம்பானி
தொடர்ச்சியாக 12 ஆண்டுகளாக இந்தியாவின்
முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அதானி குழுமத்தின் கெளதம் அதானி 1,11,500 கோடி
ரூபாய் சொத்துகளுடன் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு இருந்த இடத்தில் இருந்து
இந்த ஆண்டு பட்டியலில் அவர் 8 இடங்கள்
முன்னேறியுள்ளார்….!!!

( https://www.hindutamil.in/news/india/519802-gautam-adani-jumps-8-spots-to-no-2-1.html )

——————————–

அதானி ஒரே ஜம்ப்பில், கோடீஸ்வர பணக்காரர்கள் வரிசையில்
எட்டு இடங்கள் முன்னேறி விட்டாரே….

எப்பேற்பட்ட சாதனை…!!!

பணக்காரர்களை, தொழிலதிபர்களை நன்கு கவனித்துக் கொள்ளாத
ஒரு நாடு எப்படி உருப்படும்..??? எப்படி முன்னேறும்…?
அவர்களை “ஊக்குவித்தால், உதவி செய்தால் ” தான் in turn
அவர்கள் மக்களை நன்கு கவனித்துக் கொள்வார்கள் …

எனவே, தொழிலதிபர்களை, முதலாளிகளை ஊக்குவிப்பது குறித்து
இந்த அரசாங்கம் சற்றும் தயக்கம் கொள்ளாது, வெட்கப்படாது என்று
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் “கொள்கை விளக்கம்” தரப்பட்டது நினைவிருக்கலாம்.

பணக்காரர்கள் நன்றாக கவனித்துக் கொள்ளப்படுவது
இப்போது உறுதியாகத் தெரிய வருவதால்
இனி, பதிலுக்கு அவர்களும், (அவர்களது)மக்களை –

நன்றாக கவனித்துக் கொள்வார்கள்…!!!

“மங்களமாய் வாழ வேண்டும் –
வேறென்ன வேண்டும்…”

எனவே – ( மக்களுக்கு….??? )
மெத்த சந்தோஷம்.

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to மெத்த சந்தோஷம் …. வேறென்ன வேண்டும் நமக்கு….?

  1. புதியவன் சொல்கிறார்:

    நல்லவேளை… உங்களுக்காவது இது புரிகிறதே கா.மை சார்.

    எல்லாரும் இந்தியா விவசாய, சிறு குறு தொழில்கள் நிறைந்த நாடு, அதன் மீது கவனம் வைத்தால் 30% மக்களுக்கான (அடித்தட்டு) வாழ்வாதாரம் பெருகும், அதுவே நிறைய நன்மைகளை ஏழைகளுக்கு, அடித்தட்டு மக்களுக்கு நல்லது செய்யும் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த 30% அடித்தட்டு மக்கள் நல்லா இருந்தா, அவங்க என்ன அரசியல் கட்சிகளுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கவா போகிறார்கள்? அந்தப் பணத்தை வைத்து அவர்கள் பசங்க படிக்க, வாழ்க்கையில் முன்னேற செலவழிக்கப்போறாங்க அந்த 30%. அவர்கள் நலன் நமக்கெதற்கு என்று மற்றவர்களுக்குப் புரிவதே இல்லை. சின்னச் சின்ன மளிகைக் கடை, பெட்டிக் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு என்ன செய்யலாம் என்றெல்லாம் அரசு யோசிக்கணுமாம். அரசுக்கு வேற வேலையில்லையா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.