மோடிஜி-க்கும், தமிழக அரசுக்கும் …..


நான் ஏற்கெனவே சிலமுறை மாமல்லபுரத்தை
விரிவாக பார்த்திருக்கிறேன்.
ஆனால், நான் இதுவரை பார்த்த மாமல்லபுரமா இது…?

………………………………………..

நேற்றிரவு மின்விளக்குகளின் ஒளியிலும்,
அற்புதமான கடற்கரை நிலவின் பின்னணியிலும்
ஒரு புதிய மாமல்லபுரத்தைப் பார்த்தபோது அசந்து விட்டேன்.

இரவின் பின்னணியில் அதை இவ்வளவு
அழகாக ஜொலிக்க வைத்தது – முழுக்க முழுக்க
தமிழக அரசின் ஆர்வமும்,
இந்த முயற்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ரசனையோடு
உழைத்த பணியாளர்களின் அரிய முயற்சியுமே காரணம்.
வெறும் அரசு ஆணையால் மட்டும் நிகழ்ந்துவிடக்கூடிய
காரியமல்ல இது. மிகுந்த ரசனையுடன் உழைத்திருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் நமது உளமார்ந்த
பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

இந்த முயற்சி முன்னெடுக்கப்பட முக்கிய காரணமாக
இருந்தவர் பிரதமர் மோடிஜி.

இந்திய-சீன சந்திப்பை மாமல்லபுரத்தில் வைத்துக்கொள்ளலாம்
என்கிற முடிவை எடுத்தவர் அவர் தானே….!

தனது இந்த முடிவால் –

தமிழகத்திற்கும்,
பழந்தமிழ் மக்களின் அரிய சாதனைகளுக்கும்,
மாமல்லபுரத்தின் பெருமைக்கும் –

அகில இந்திய அளவிலும், உலக அளவிலும்
பெரும் புகழைத் தேடித்தந்திருக்கும் –
பிரதமர் மோடிஜிக்கு
நமது நன்றியையும், பாராட்டுகளையும்
அவசியம் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

நன்றி மோடிஜி.
அடிக்கடி உங்களுக்கு இப்படி நன்றி தெரிவிக்கக்கூடிய
சந்தர்ப்பங்களை தமிழகத்திற்கு தந்து கொண்டே இருங்கள்…!!!

.
——————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to மோடிஜி-க்கும், தமிழக அரசுக்கும் …..

 1. செ. இரமேஷ் சொல்கிறார்:

  மாமல்லபுரம் என்ற இடத்தை தேர்வு செய்தது மோடி அல்ல. சி ஜின்பிங் தான். அதை பரிந்துரைத்தது இந்தியாவுக்கான முன்னாள் சீனாவின் தூதுவர். இப்போது சி ஜின்பிங் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   ரமேஷ்,

   நீங்கள் கூறுவது போல் மற்றும் சில தகவல்களையும்
   நான் கூட வாசித்தேன். இருந்தாலும், அதிகாரபூர்வமான
   தகவலை உறுதி செய்துக்கொள்ள காத்திருந்தேன்.

   மதியம் 2 மணிக்கு, வெளியுறவுத்துறை செயலாளர்
   விஜய் கோகலே, செய்தியாளர் கூட்டத்தில் இதே கேள்வி
   ஒரு நிருபரால் வெளிப்படையாக எழுப்பப்பட்டபோது,
   மாமல்லபுரத்தை தீர்மானித்தது மோடிஜி தான் என்று
   உறுதியாக கூறினார்.

   அதன் பிறகு தான் இந்த இடுகையை எழுதினேன்.

   நாம், மத்திய அரசால் அதிகாரபூர்வமாக சொல்லப்படும்
   தகவலைத்தானே ஏற்றுக் கொள்ள வேண்டும்…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  மாமல்லபுரம் இடத்தைத் தேர்வு செய்தது பிரதமர்தான் என்று வெளியுறவுத் துறையிலிருந்தே சொல்லியிருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளணும். இதற்கான லாஜிகல் காரணங்கள் புரிகிறது. அவை சரியானவைதான்.

  பிரதமரின் உடைத் தேர்வு, இடம் தேர்வு, அழகுபடுத்தியது, கடற்கரைச் சுத்தம் இவற்றை நாம் சிம்பாலிக் என்ற பார்வையில் பார்த்து பாராட்டணும்.

  //பழந்தமிழ் மக்களின் அரிய சாதனைகளுக்கும்// – நான் எழுதுவது இடுகைக்குச் சம்பந்தமில்லாதது. காஞ்சியில் 5-6ம் நூற்றாண்டில் பல்லவமன்னன் கட்டிய கோவிலை நாம் இன்னும் சிறப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். வெளிநாடுகளில் இத்தகைய இடங்களை கையால் தொட முடியாதபடி வைப்பார்கள். நம் மக்களில் 80% க்கு வரலாற்றின் அருமை தெரியாது.

  • Narayanan Krishnan சொல்கிறார்:

   ரொம்பவும் கரெக்ட்டாக சொல்லியுள்ளீர்கள். நம் மக்களில் 80% க்கு வரலாற்றின் அருமை தெரியாது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   ரொம்பவும் கரெக்டாகத் தான் சொல்லி இருக்கிறீர்கள்.
   ஆனால், பொறுப்பை இடம் மாற்றி விட்டீர்கள்.

   யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட
   ஒரு அரிய வரலாறறுச் சிறப்புள்ள இடத்தை பராமரிப்பதில்
   மத்திய அரசின் தொல்லியல் துறைக்கு கொஞ்சமும்
   அக்கறை இல்லை. இந்த இடங்களை எப்படி பாதுகாப்பது
   என்கிற அறிவோ, அக்கறையோ அவர்களுக்கு
   சற்றும் இல்லை என்பது உண்மை தான்… 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    //பொறுப்பை இடம் மாற்றி விட்டீர்கள்.// – இல்லை கா.மை. சார்.. நான் இதை ஒத்துக்கொள்வதில்லை. அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள் என்று அனேக அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதை நியாயப்படுத்த முடியுமா? தொல்லியல்துறை – அவங்களுக்குத் தேவையான ஆட்கள் இல்லை. அரசுக்கும் (எல்லா அரசுகளுக்கும்) ‘வரலாற்றுச் சிறப்பு உள்ள இடம்’ நன்கு பராமரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் வரவால் பணம் அதிகம் கிடைக்கும், பொருளாதாரம், அந்தப் பகுதி மக்களுக்கு நன்மை என்ற விஷன் இல்லை. 10 ஏக்கர் பரப்பளவும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான புராதானமான கோவில்களுக்கு (அவையும் நம் வரலாற்றுப் பொக்கிஷங்கள்) 2 பேர்தான் பார்த்துக்கொள்ள (பூசாரி, ஒரு மெய்க்காவலர்).

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     புதியவன் ,

     //இல்லை கா.மை. சார்.. நான் இதை
     ஒத்துக்கொள்வதில்லை.//

     எதை ஒத்துக்கொள்வதில்லை… ?

     சின்னத்தையொட்டி, இரண்டடி தள்ளி,
     ஒரு கம்பிவேலி போட்டு மனிதர் அவற்றை
     தொடாமல் பார்க்கும்படி செய்ய வேண்டியது
     யாருடைய பொறுப்பு…?

     இதைச் செய்ய அரசுக்கு ஏன் துப்பில்லை…?
     அரசிடம் இல்லாத பணமா…?
     ஆட்கள் இல்லையென்றால் – ஏன் இல்லை…?
     தகுந்த அளவிற்கு ஏன் நியமிக்கவில்லை…?
     நியமிக்காதது யார் தவறு…?

     அக்கறை இல்லை…
     சுயவிளம்பரத்தில் இருக்கும் அக்கறை –
     நாட்டின் நிர்வாகத்தில் இல்லை.

     3000 கோடி ரூபாய் செலவழித்து புதிதாக,
     இரும்புச்சிலை வைக்க முடிந்தவர்களுக்கு,
     1500 வருட பழைய வரலாற்றுச் சின்னங்களை
     பராமரிக்க ஆள் போட முடியவில்லையா…? ஏன்…?

     விருப்பம் இல்லையென்றால்,
     அக்கறை இல்லையென்றால் –
     தொல்லியல் துறை பொறுப்பை மாநில அரசிடம்
     மாற்றிக் கொடுக்க வேண்டியது தானே…?

     அந்த துப்பில்லாத அரசுக்கு நீங்கள்
     ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்…?

     -காவிரிமைந்தன்

 3. D. Chandramouli சொல்கிறார்:

  It was a pleasant surprise to see our PM wearing Tamil Nadu dress Veshti and Thundu. Seems he didn’t find it difficult. It was so natural.for him. In the limited time available, Kalakshetra Foundation;s great efforts in putting up an impressive show for the guests was another welcome feature of the events. Nice to see that PM was thoroughly enjoying the grand presentation showed that how our music and dance captivates one and all. Politics divides all of India while our music, arts and culture certainly unite the whole of India.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.