மறக்க முடியாத ஒரு தொடர் கதையும், அதன் சித்திரங்களும்… கல்கி’யின் – பார்த்திபன் கனவு….


அமரர் ‘கல்கி’ யின் முதல் சரித்திரத் தொடர்கதையான
‘பார்த்திபன் கனவு’ 1941, அக்டோபர், 16 – அன்று
கல்கி வார இதழில் துவங்கியது…
(அப்போது நான் பிறந்திருக்கவே இல்லை…!!! ) –

ஆனால், பின்னாளில், எனது 12-வது வயதில்
பொன்னியின் செல்வன் படித்துக்கொண்டிருந்த காலத்தில் –
கல்கி அவர்களின் முந்தைய படைப்பான,
பார்த்திபன் கனவை – தேடித்தேடி அலைந்து, கண்டடைந்து,
முழுவதுமாகப் படித்தேன்.

அதில் வரையப்பட்டிருந்த சித்திரங்கள் அற்புதமானவை.
கதையில் வரும் பாத்திரங்களையும், இடங்களையும்
சம்பவங்களையும், அதியற்புதமாக வரைந்திருந்தார்
ஓவியர் வர்மா அவர்கள்.

பிற்காலத்தில், ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா,
எஸ்.வி.ரங்காராவ் ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில்
தோன்றி நடித்த “பார்த்திபன் கனவு” திரைப்படம்
வெளியானபோது, அதைப்பார்த்தபோது, முன்னர்
தொடர்கதையில் பார்த்த சித்திரங்கள் நினைவுக்கு வந்தன.

என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்னவென்றால்…
திரையில் தோன்றிய கதா பாத்திரங்களுக்கும் –

அந்த சித்திரங்களை அடிப்படையாகக் கொண்டே
காஸ்டியூம் வடிவமைக்கப்பட்டிருந்தது…

விக்கிரமனாக நடித்த ஜெமினி கணேசனும்,
குந்தவையாக நடித்த வைஜயந்திமாலாவும் ஒருவேளை
கல்கி அவர்களின் கற்பனைப் பாத்திரங்களாக இருக்கலாம்.

ஆனால், மாமல்லன் நரசிம்மபல்லவன் நிஜம்.
நூற்றுக்கு நூறு நிஜமான சரித்திர மனிதர்.

இன்று நான் நரசிம்ம பல்லவனைப்பற்றிய செய்திகளைப்
படிக்கும்போதெல்லாம் – உடனே என் மனதில் தோன்றுவது –
கம்பீரமான தோற்றமும், குரலும் கொண்ட, திரையில்
மாமல்லன் நரசிம்ம பல்லவனாகத் தோன்றிய அந்த
எஸ்.வி.ரங்காராவ் என்னும் அந்த அற்புதமான கலைஞனின்
உருவம் தான்.

பார்த்திபன் கனவு திரைப்படத்தை நண்பர்கள் பார்த்திருப்பீர்கள்.
இப்போதும் யூ-ட்யூபில் காணக் கிடைக்கிறது.

ஆனால், தொடர்கதையில் வர்மா அவர்கள் வரைந்த
அந்த சித்திரங்களை பார்க்க எங்கே போவது…?

இருக்கவே இருக்கிறார் நண்பர் திரு.பசுபதி அவர்கள்….!

பழையன பலவற்றை அதி-ரசனையுடன் சேமித்து வைத்து,
அவ்வப்போது தனது பசு-பதிவுகள் வலைத்தளத்தில்
பதிவிட்டு வரும் அவரது அருந்தொண்டினை பாராட்டி,
நன்றி தெரிவித்துக் கொண்டு, அவரது பதிவில் வெளிவந்த
பார்த்திபன் கனவு தொடர்கதைக்கான, சில சித்திரங்களை
இந்த வலைத்தள நண்பர்களும் ரசிக்க –
கீழே தருகிறேன்….

மறக்க முடியாத கதையும், பாத்திரங்களும், சித்திரங்களும் –
நெஞ்சை விட்டு என்றும் அகலா….
————————————————————–

.
————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to மறக்க முடியாத ஒரு தொடர் கதையும், அதன் சித்திரங்களும்… கல்கி’யின் – பார்த்திபன் கனவு….

 1. Jksmraja சொல்கிறார்:

  ரூ.100 கோடிக்கும் மேல் வாங்கிய கடன்கள் தள்ளுபடி: ஒரு அதிர்ச்சி தகவல்

  வெள்ளி, 11 அக்டோபர் 2019 (08:18 IST)

  ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் வங்கிகளிடம் கடன் வாங்கிய சாமானியர்கள் வங்கி அதிகாரிகளால் நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் ரூபாய் 100 கோடிக்கு மேல் கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

  இதில் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே பெருமளவு கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவல் மூலம் ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி வரை கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்த முடியாமல் திவால் ஆனவர்களின் கடன்களை எந்தெந்த வங்கிகள் எவ்வளவு தள்ளுபடி செய்துள்ளன என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

  இந்த தகவலின்படி பாரத ஸ்டேட் வங்கி ரூ.100 கோடிக்கு மேல் கடன் வாங்கிய 220 கடனாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ76,600 கோடி ஆகும். அதேபோல், ரூ500 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றுள்ள கடனாளிகளின் ரூ37,700 கோடி கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

  அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியும் 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிய 94 வாடிக்கையாளர்களின் வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும் இதன் மொத்த தொகை ரூ27,024 கோடி என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. அதேபோல், ரூ500 கோடிக்கு மேல் கடன் பெற்ற 12 தொழிலதிபர்களின் வாராக்கடன்கள் 9,037 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

  மொத்தத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளிடம் கண்ட வாங்கிய ரூ2.75 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 100 கோடி முதல் 600 கோடி வரை கடன் வாங்கிய தொழிலதிபரின் கடன்களை தள்ளுபடி செய்து விட்டு, ரூபாய் ஆயிரம், ரூபாய் இரண்டாயிரம் என கடன் வாங்கிய சாமானியர்களை வதைப்பது தான் வங்கிகளில் நியாயமா என்று கேள்விகள் எழுந்துள்ளது

  வெப்துனியாவைப் படிக்கவும்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Jksmraja,

   1) இதற்கு யார் பொறுப்பு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்…?

   2) இதற்கு யாராவது பொறுப்பு ஏற்பார்கள் என்று நினைக்கிறீர்களா…?

   3) குறைந்த பட்சம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயரோ,
   அதன் உரிமையாளர்களின் பெயரோ-வாவது வெளிவரும்
   என்று நினைக்கிறீர்களா….?

   4) அல்லது எதிர்க்கட்சிகள் எதாவது இது குறித்து
   அர்த்தமுள்ள வகையில் இயங்குமென்று நம்புகிறீர்களா…?

   நமக்கு நம்பிக்கை தரும் வகையில் இங்கே எந்தவொரு
   அரசியல்வாதியோ, கட்சியோ – செயல்படுகிறார்களா…?

   ஹூம் – நமது வயிற்றெரிச்சலை, ஆற்றாமையை
   வெளிப்படுத்திக் கொள்ள இது ஒரு இடம் – அவ்வளவே.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Nakeeran சொல்கிறார்:

  பார்த்திபன் கனவு நாவல் படித்தவர்களுக்கு படம் ருசிக்காது. நாவலில் ஆரம்பம் முதல் கடைசி வரை மாமல்லன் தான் சிவனடியார் என்ற சஸ்பென்ஸ் காப்பாற்றப்பட்டிருக்கும். படத்தில் இது சாத்தியப்படவில்லை. இருப்பினும் ரங்காராவின் கம்பீரம், ஜெமினி + வைஜயந்தியின் வசீகரம், சுப்பையாவின் கனிவு நம்மை கவர்ந்தது என்னவோ நிஜம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நக்கீரன்,

   நீங்கள் சொல்வது மிகவும் சரி.
   ரங்காராவை சிவனடியாராக பார்த்தவுடனே,
   இவர் நரசிம்ம பல்லவன் தான் என்பது தெரிந்து
   விடுவதால், நாவலில் இருந்த சஸ்பென்ஸ்
   இங்கே துவக்கத்திலேயே உடைந்து விடுகிறது.
   பார்த்திபன் கனவு படம் தோல்வியடைந்ததற்கு
   இதுவும் ஒரு முக்கியமான காரணம்.

   ரங்காராவ், ஜெமினி, வைஜயந்திமாலா,
   எஸ்.வி.சுப்பையா எல்லாரையும் சரியாகச் சொன்ன
   நீங்கள் ராகினியை மறந்து விட்டீர்களே…

   சிவனடியாரை பார்க்கும்போதெல்லாம், அவர்
   யார் என்கிற உண்மை புரிந்து விட்டதால்,
   ராகினி குறும்பாக சிரித்துக் கொண்டே இருப்பாரே –
   அதுவும் கண்களிலேயே நிற்கிறது… இல்லையா…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Nakeeran சொல்கிறார்:

  கே எம் சார், ரசிகனைய்யா நீர்! ராகினி பத்மினியின் நளினம் ஐம்பது சதம், லலிதாவின் ஆளுமை ஐம்பது சதம்…

 4. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  1) இதற்கு யார் பொறுப்பு ?
  சி ஏ எனப்படும் ஆடிட்டர்கள் .
  பாங்கில் பணம் வாங்கிக்கொடுக்க , பேங்க் அதிகாரிகள் – லெவல் 5 க்கு
  மேல் உள்ளவர்களுக்கு கமிஷன் உண்டு .
  இதற்கு சில சி .ஏ .க்கள் ப்ரோக்கர் ஆக உள்ளனர் .
  இது தவிர பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் /அரசியல் வாதிகள்
  கவனிக்க படுவார்கள் .

  2)யாராவது பொறுப்பு ஏற்பார்கள் ?
  இல்லை !

  3)உரிமையாளர்களின் பெயரோ-வாவது வெளிவரும் ?
  பேங்க் கடன் கொடுப்பது பற்றிய விவரங்களை வெளியே
  சொல்லக்கூடாது .
  ஒரு பேங்க் , அதன் மொத்த கடன் மட்டும் வெளியே சொல்லலாம் .
  அதுவும் கூட பேங்க் அதிகாரிகள் போராட்டம் நடத்திய பிறகு !

  4)எதிர்க்கட்சிகள் எதாவது இது குறித்து
  மௌனம் !

  வராக் கடன் பிரச்சினை உருவாக ரகுராம் ராஜனும் ஒரு காரணம் .
  பேங்குகள் ராஜன் வரும் வரை பிரச்சினையை மூடி
  மறைத்து ஒப்பேற்றி கொண்டிருந்தன !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.