ரசனைகள் பலவிதம்…!!!பலவித சைசுகளில்,
விதவிதமான வடிவங்களை பிரதிபலிக்கும்,
வண்ணமயமான பொம்மைகள் செய்வது ஒரு
அற்புதமான கலை. இன்றும், சில ஆயிரம் குடும்பங்கள்
பரம்பரையாக இந்த கலையை/தொழிலைச் செய்து தான்
பிழைப்பை நடத்துகின்றன.

30-40 வருடங்களுக்கு முன்னால் எல்லாம்,
வீட்டில் 10 நாட்களுக்கு கொலு வைப்பது,
நண்பர்கள், உறவினர்களைக் அழைத்து,
வகை வகையான சுண்டல் பிரசாதங்களைக் கொடுத்து –

பாடத்தெரிந்தவர்களை பாடச்செய்வது என்று
பரபரப்பாக, முக்கியமாக வீட்டிலுள்ள பெண்களுக்கும்,
குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி தரும் அனுபவங்களாக
இருந்தன.

ஆனால், இப்போது பரபரப்பாக ஆகி விட்ட உலகில்
இதற்கெல்லாம் நேரமில்லை… பலரிடம் பணவசதியும் இல்லை.
எனவே, கொலு வைப்பது பணக்கார /வசதி படைத்த
இல்லங்களில் மட்டுமே நிகழ்கிறது. அதுவும் பெயருக்கு
முறை வைத்து, ஒரு நாள் மட்டுமே அழைப்பதும்
வழக்கமாகி விட்டது.

வசதிபடைத்தவர்கள் மட்டுமாவது இன்னமும் இந்த
வழக்கத்தைத் தொடர்வது, இதையே நம்பிப் பிழைக்கும்,
சில ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வயிற்றுப்பாட்டிற்கு உதவும்.

அண்மையில், புதிய தொலைமுறையில் ஒரு நிகழ்ச்சி
நன்றாக இருந்தது என்று சொன்னார்கள்…
முதலில் நான் பார்க்கவில்லை.
கேள்விப்பட்ட பின் தேடியெடுத்து பார்த்தேன்.
மிகுந்த ஆர்வத்துடன், இந்த குடும்பம் பெரிய அளவில்
ஒரு பொம்மைகள் கண்காட்சியையே நடத்தி இருக்கிறது.

அவர்களுக்கு நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

இந்த வித்தியாசமான, வண்ணமயமான பொம்மைகளைக்
காண்பது, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும்
சந்தோஷத்தைத்தரும்.

தொலைக்காட்சியில் காணத்தவறியவர்களுக்காக –
அந்த காணொளியை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.
வீட்டிலுள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்
அவசியம் காட்டுங்கள்….!!!

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.