…
…
…
பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் அவர்கள் பிரதமருக்கு
எழுதியுள்ள ஒரு கடிதத்தை தமிழ் இந்து வலைத்தளம்
வெளியிட்டுள்ளது…
விஷயத்தின் முக்கியத்துவம் கருதி,
நமது வாசக நண்பர்களுடன் அதை பகிர்ந்து கொள்ள
விரும்பி கீழே பதிப்பித்திருக்கிறேன்.
( https://www.hindutamil.in/news/india/519155-fir-against-celebrities-tharoor-writes-to-pm-expresses-strong-protest-4.html )
———————————————————————————
”கும்பல் வன்முறையை தடுக்கக் கோரி கடந்த
ஜூலை 23-ம் தேதி உங்களுக்குக் கடிதம் எழுதிய
49 பிரபலங்களுக்கு எதிராக பிஹார் முசாபர்பூரில்
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பது ஆழ்ந்த
வேதனையைத் தருகிறது. இவர்கள் மீது
வழக்குப் பதிவு செய்ததற்கு எனது கடுமையான எதிர்ப்பைத்
தெரிவிக்கிறேன்.
ஜனநாயகத்தில் எதிர்ப்பை வரவேற்க வேண்டும்.
எதிர்ப்பு இல்லாமல் ஜனநாயகம் இல்லை. உங்களைப்
பற்றியும, உங்கள் அரசு குறித்தும் கருத்து வேறுபாடு
இருந்தால், அதை வெளியே தெரிவிக்க
கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதை
நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தவர்கள் தங்களின்
துணிச்சலை வெளிப்படுத்த எதிர்ப்பைத் தெரிவிக்காமல்
இருந்திருந்தால், இந்தியா இன்று சுதந்திரமான தேசமாக
வரலாற்றில் இருக்காது.
வகுப்புவாதம் அல்லது குழந்தை கடத்தல் வதந்திகள்
ஆகியவை மூலம் கும்பல் வன்முறை தூண்டப்படலாம்.
கும்பல் வன்முறை ஒரு நோய், அது வேகமாகப்
பரவக்கூடியது. சரியான குடிமகன்களாக இருப்பதால்தான்
இந்த 49 பேரும் உங்களுக்கு இதை தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.
எதிர்ப்பு இல்லாமல் ஜனநாயகம் இல்லை.
வேறுபட்ட கருத்துகள், கண்ணோட்டங்கள், சித்தாந்தங்கள்
ஆகிவற்றால்தான் இந்தியாவின் அடித்தளம்
அமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்தியா வெற்றிகரமான,
வலிமைமிக்க ஜனநாயகமாக இருந்து வருகிறது.
இந்தியாவின் குடிமகன்கள் என்ற அடிப்படையில்,
ஒவ்வொருவரும் எந்தவிதமான அச்சமுமின்றி, உங்கள்
பார்வைக்கு இதைக் கொண்டுவந்துள்ளனர். தேசிய
முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தைக் கொண்டு
வந்துள்ளதால் அதைத் தீர்க்க வேண்டும்.
கருத்துச் சுதந்திரத்துக்கு நீங்கள் ஆதரவாக இருப்பீர்கள்
என்று நாங்கள் நம்புகிறோம்.
கடந் 2016-ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில்
நீங்கள் பேசுகையில், அரசியலமைப்புச் சட்டம் என்பது
எங்கள் அரசின் புனித நூல் என்று குறிப்பிட்டீர்கள்.
எவ்வாறினும், உங்களின் பேச்சுக்கு விரோதமாகவே
உங்கள் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.
அப்படியென்றால், அடிப்படையான இந்த விஷயங்களுக்காக
உங்கள் கருத்துகளை மாற்றுகிறீர்களா?
உங்கள் அரசுக்கும், உங்களுக்கும் எதிரான கருத்துகளையும்
விமர்சனங்களையும் வைப்பவர்களை தேசவிரோதியாகவும்,
எதிரியாகவும் சித்தரிக்கக் கூடாது. விமர்சனங்களின்றி
எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.
பிரச்சினைகள் முன் அனைவரும் பார்வையற்றவர்களாக
இருந்தால், அது மக்களைத்தான் பாதிக்கும்.
சர்வாதிகார ஆட்சிக்கு மாறுவது கடினம். அது நமது
அரசியலமைப்பின் மதிப்புகளுக்கு விரோதமானது.
அரசைப் பற்றியும், அரசின் கொள்கைகளைப் பற்றியும்
ஒவ்வொரு முறையும் விமர்சிக்கும்போதும் முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்வதுதான் புதிய இந்தியாவில்
நீங்கள் தேசத்துக்கு அளித்த வாக்குறுதியா?.
இந்த புதிய இந்தியாவைத்தான் நீங்கள் உருவாக்க
விரும்பினீர்களா? குடிமக்களின் குறைகளை அறிந்து அதைத்
தீர்த்துவைக்க மாட்டீர்களா?
ஆளும் அரசுக்கு எதிராக இருக்கும் அரசியல் கட்சிகள்,
தனிமனிதர்கள் அனைவரும் அகற்றப்பட்டு, நாட்டின்
எதிரிபோல நடத்தப்படுவதுதான் புதிய இந்தியாவா ?.
அரசு நிர்வாகத்தின் தோல்விகளை வெளிக்காட்டும்
பத்திரிகையாளர்களைக் கைது செய்வதுதான் புதிய இந்தியாவா?”.
இவ்வாறு சசி தரூர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுள்ளார்.
பிடிஐ
.
———————————————————————————————————–
Right dose. Good job.
இந்த முதல் தகவல் அறிக்கையே என்னைப் பொருத்தவரை அப்சர்ட். இந்த மாதிரி கோமாளித்தனமான ஐடியாவை யார் கொடுத்ததுன்னு தெரியலை.
அரசை எதிர்த்தோ, மாற்றுக்கருத்தோ கூறினால் FIR என்றால், தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சி சேனல், பத்திரிகைகள் கூட இருக்கவே முடியாது. எதிர்கட்சிகள் எல்லாம் மூட்டை கட்டவேண்டியதுதான்.
Govt must identify who initiated this idea and raise FIR against that person.
இதில் 2 விஷயங்கள் இருக்கின்றன.
1) எவரோ ஒரு கிறுக்கர் புகார் கொடுத்தார் என்றால்,
எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யச்சொல்லி உத்திரவு போட்ட
அந்த நீ…. க்கு புத்தி எங்கே போனது ?
இந்த விஷயம் இதற்கு மேலே இருக்கும் நீதிமன்றத்திற்கு
எடுத்துச் சென்றால் நிற்குமா ? judicial scrutiny யை
தாக்குப் பிடிக்க முடியாத இந்த விஷயத்திற்கு
மீடியாக்கள் இவ்வளவு விளம்பரம் கொடுத்து
சீரியசாக்குவதேன் ?
2) ஆளும் கட்சியின் மேலிடத்திலிருந்து யாரும் இதுவரை
ஏன் இதை கண்டிக்கவில்லை ?
புகார் கொடுத்தவர் யாரோ கிறுக்கன்.
கட்சியில் over enthusiastic ஆக இருந்திருப்பார்.
அதை ஏற்றுக்கொண்டூ, FIR பதியச்சொல்லி சம்பந்தப்பட்டவர்
உத்திரவு போட்டது அபத்தம்.
தான் செய்வது முட்டாள்தனம் என்று தெரிந்தே தான்
அவர் அதைச் செய்திருப்பார்.
அதற்கு காரணம் either விளம்பரம் தேடி அல்லது
ஆளும்கட்சியிலிருந்து எதையாவது எதிர்பார்த்து.
இதனால் serious ஆக எந்த விளைவுகளும் ஏற்படப்போவதில்லை –
தங்களது குறைகளை வெளிப்படையாக எடுத்துச்சொல்லி,
அவற்றை சரி செய்யுமாறு, குடிமக்கள்,
தங்கள் பிரதமருக்கு வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதுவது
எந்த சட்டப்பிரிவின் கீழும் குற்றம் ஆகாது.
ஆனால், இது சீரியஸ் விஷயம் இல்லை என்று தெரிந்துகொண்டே,
இதை சீரியஸான காட்சியாக சிலர் சித்தரிப்பது தான், இதன் பின்னணியில் யாரோ வேண்டுமென்றே திட்டமிட்டு “விஷமம்” செய்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.
யார் அந்த விஷமக்காரர்…? தனிப்பட்ட நபரா..? கட்சியா…?
இதன் விளைவுகளாக அவர்கள் எதிர்பார்ப்பது என்ன ?
இவர்கள் செய்வது வெறுப்பு அரசியல் . ஆங்கிலத்தில் Populist .
இவர்கள் கொள்கைகள் பெரும்பாலும் புனையப்பட்டவை .
எனவே சரித்திரத்தை திரித்திக் கூறுவார்கள் .
விவாதம் செய்ய முடியாதலால் பிரச்சினையை திசை திருப்புவார்கள் .
பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் கிடையாது .
ஒன்று ஆத்திரமாக பேசி வாயை அடைப்பது அல்லது
கேள்வி கேக்கிறவன் எல்லாம் தேசத்துரோகி என சொல்வது .
ஆண்டி இந்தியன் எப்படி வருது என தெரிகிறதா ?
இப்ப இந்த கேஸ் நிற்காது என தெரியும் .
கொஞ்ச நாள் கழித்து ‘ நாங்க ஒன்னும் செய்யலை ‘
என்று கூறி மன்னிப்பு அளிப்பார்கள் .
எல்லாம் வெறும் ட்ராமா !
நாட்டில் பொருளாதாரம் தள்ளாடுகிறது – இப்ப
அதை மறந்து மக்கள் வேற டொபிக் பேசணும் – அவ்வளவுதான் !
By the way ,can someone suggest suitable word for “Populist ” ?
ஜனரஞ்சக, மக்கள் வசீகர, பெரும்பான்மை கவர்ச்சிகர கொள்கைகள்
புதியவன்,
இது அகராதி தரும் அர்த்தம்.
இதன் கூடவே, “போலியான” என்கிற சொல்லையும்
முன்னால் சேர்த்துக் கொண்டால் – நமது
அரசியல்வாதிகளுக்கு ( எல்லா கட்சியினருக்குமே …!!!)
பொருத்தமாக இருக்கும் – இல்லையா… 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்