உளறல் பேராசிரியர் …


“திராவிட இந்திக்காரரும் உண்டு…” ( ??? )

“திராவிடத் தமிழர் என்றால் –
ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள்…” ( !!!)

“சாதி, ஆணாதிக்கத்தை எதிர்ப்பவர்கள்
எல்லோரும் திராவிடர் தான் “…(!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! )

——————————

இது – பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்
கரூரில் உளறியதன் ஒரு பகுதி….
இந்த உளறல் – நேற்றைய தமிழ் இந்து வலைத்தளத்தில்
வெளியாகி இருக்கிறது…

( https://www.hindutamil.in/news/tamilnadu/518992-suba-veerapandiyan-interview-about-keeladi-1.html )

——————–

” கீழடியில் கண்டறியப்பட்டது திராவிட நாகரிகமா?
தமிழர் நாகரிகமா? என கேட்கின்றனர். அது திராவிடத்
தமிழர் நாகரிகம்.

எப்படியென்றால் தென்னை மரம், மல்லிகைப்பூ
என்கின்றனர். தென்னை என்றாலே மரம்தான்.
மல்லிகை என்றாலே பூ தான்.

மரம் பொதுப்பெயர், தென்னை என்பது தனிப்பெயர்.
இது இரு பெயரொட்டு பண்புத்தொகை. அப்படிதான்
திராவிட தமிழர் என்பதும் இரு பெயரெட்டு
பண்புத்தொகை. திராவிடத் தெலுங்கர், திராவிட கன்னடர்,
ஏன் திராவிட இந்திக்காரரும் உண்டு.( 🙂 🙂 )

திராவிடத் தமிழர் என்றால் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள். ( 🙂 )
சாதி, ஆணாதிக்கத்தை எதிர்ப்பவர்கள் எல்லோரும்
திராவிடர்கள்தான். ( 🙂 ) இதை அகராதியில் தேடவேண்டாம்.
வரலாற்றில் தேடுங்கள்….”

—————————————–

எதாவது புரிகிறதா…?
சாதாரணமான ஆசாமிகள் பேசினால் புரியும்…
பேராசிரியர்கள் உளறினால்…?

………………………………………..

இதுவரை கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் –
தமிழர் வாழ்க்கையை பிரதிபலிப்பவை என்றும் –
கி.மு.6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று
உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவே தற்காலிகம் தான்.
இன்னும் ஆராய்ச்சியை தொடர்ந்தால், இதை விட
தொன்மையான பல பொருட்கள் கிடைக்க
நிறைய வாய்ப்பிருக்கிறது.

கி.மு.6-ஆம் நூற்றாண்டில், தமிழைத்தவிர வேறு
எந்த மொழியும் விந்தியத்திற்கு தெற்கே பிறந்திருக்கவில்லை.

பின் எங்கே வந்தது திராவிடம்…?

கன்னடம் – கி.பி.5-ஆம் நூற்றாண்டிலும்,
தெலுங்கு – கி.பி.6-ஆம் நூற்றாண்டிலும்,
மலையாளம் – கி.பி.9-ஆம் நூற்றாண்டிலும் –
உருவாயின என்று என்சைக்கிளோபீடியா பிரிட்டானிகா
உறுதி செய்கிறது..

—————————————–

தமிழைத்தவிர வேறெந்த மொழியும் இந்த மண்ணில்
தோன்றாத காலத்தே –

இந்த பேராசிரியர் எதற்காக இங்கே திராவிடத் தமிழர்
என்று இல்லாத மற்ற மொழிகளை இழுத்துக்கொண்டு
வருகிறார்…?

எந்த கன்னடியராவது,
எந்த தெலுங்கராவது,
எந்த மலையாளியாவது –
தங்களை –
திராவிட-கன்னடியர்,
திராவிட-தெலுங்கர்,
திராவிட-மலையாளி என்று சொல்லிக்கொண்டு
அலைகிறார்களா….?

நான் இந்தியாவின் பல மாநிலங்களிலும்
தங்கி – பணியாற்றி இருக்கிறேன்.
மொத்த இந்தியாவிலும் – தமிழ்நாட்டைத்தவிர
வேறு எங்குமே இந்த ஆரியர்-திராவிடர் பேச்சே இல்லை.

திராவிடம் என்பது ஒரு இனமே அல்ல…
பூகோள ரீதியாக, விந்திய மலைக்கு கீழே – தெற்கே
இருக்கும் பிரதேசத்திற்கு திராவிடம் என்று பெயர்…
அவ்வளவு தான். திராவிட இனம் என்று ஒன்று
கிடையவே கிடையாது…

“திராவிடர்” என்கிற சொல்லை ஆங்கிலேயர் தங்களது
சுயநலத்திற்காக, பிரித்தாள்வதற்காக உருவாக்கினார்கள்…
இந்த கூட்டம் அதை தங்களது சுயநலத்திற்காக,
தொடர்ந்து மேலெடுத்துச் சென்றது – செல்கிறது….!!!

தமிழ் மக்கள் எப்போதோ விழித்துக் கொண்டு விட்டார்கள்.
இவர்களின் திராவிட வேடம் கலைந்து, கிழிந்து
கந்தலாகத் தொங்கி நீண்ட நாட்களாகி விட்டன.

இனியும் இங்கே வேண்டாம் –
“திராவிட” என்கிற மோசடி வார்த்தை…

உலகிலேயே மூத்த மொழியான –
தமிழைத் தாய்மொழியாக கொண்ட நமக்கு
“தமிழன்” என்கிற அடையாளமே போதும்…

கீழடி காலத்தில் நாம் “தமிழன்” மட்டும் தான் –
பிறகு ஆங்கிலேயர் காலத்தில் ஒரு குடையின்
கீழ் வந்ததால் – “இந்தியன்” ஆகவும் ஆனோம்.
இடையில் எதற்கு இந்த திராவிடக் கும்மி….?

திராவிடர்கள் என்று சொல்லி –
கும்பலில் கொண்டுபோய் விட்டுவிடும்
முயற்சிகள் இனியும் இங்கே வேண்டாம் …
திருவாளர் சுப.வீ. முதலில் தனது
“இந்தி திராவிடர்கள்” என்பதற்கு
விளக்கம் சொன்னால் தேவலை…!!!

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to உளறல் பேராசிரியர் …

 1. paiya சொல்கிறார்:

  fitting reply. These so called dhravidans are fooling tamil people for their selfish reason to mint money for the past five decade.

 2. Prabhu Ram சொல்கிறார்:

  திருடர்கள் முன்னேற்ற கழகமும்,
  அதன் துணை, இணை அமைப்புகளும் !

  அவர்களின் முன்னாள் கஸ்டமர்கள் எல்லாரும்
  உண்மையை புரிந்து கொண்டு விட்டார்கள். எனவே,
  இவர்கள் கடையை மூடிவிட்டு, வேறு வியாபாரம்
  துவங்குவது நல்லது.

 3. புதியவன் சொல்கிறார்:

  சுப.வீ தனக்குத்தானே டிரஸ்ட் வைத்துக்கொண்டு பணவரவிற்கேற்றபடி பேசுபவர். அவருக்கென்று அல்லக்கை கும்பல் உண்டு. சுப வீ, கி.வீ ஆகியோர் திமுக போடும் காசுக்குப் பேசுபவர்கள். அதனால் அவங்க பேசறதை ஒரு பொருட்டா எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

  தமிழர்கள் நாகரிகம் என்று சொன்னால், அதில் தெலுங்கர்கள், மலையாள மொழி, உருது பேசுபவர்கள் போன்றோர் வரமாட்டார்கள். நாயுடு, இசை வேளாளர், நாயக்கர், கோமுட்டிச் செட்டியார், அருந்ததியர் என்று பெரிய லிஸ்டே உண்டு. உண்மையைச் சொன்னா ஓட்டுப் பிச்சை எடுக்க முடியுமா? இல்லை அய்யாத்துரைதான், தமிழர் என்று சொல்லி காசு பார்க்க முடியுமா..இல்லை ஈ.வெ.இராமசாமி நாயக்கரைத்தான் தமிழர் என்று சொல்லமுடியுமா? அதனால் தமிழர் நாகரிகம் என்று சொல்வதற்குப் பதிலாக திராவிட நாகரீகம் என்று இந்த அல்லக்கைகள் மற்றும் அய்யாத்துரை கூட்டம் கூவும். இவங்களுக்கு வரலாறு தெரியாது என்று நமக்குத் தெரியும் என்பதால் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட வேண்டியதுதான்.

 4. Narayanan Krishnan சொல்கிறார்:

  தமிழும் திராவிடமும் ஒன்றுதான் என்று உளரும் சுபவீ ஏன் இதை தமிழர் நாகரிகம் என்று அழைக்கக் கூடாது. தமிழர் நாகரிகம் என்று அழைப்பதால் அதற்குள்ளே தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் அடக்கம் தானே. அதற்கு ஏன் சுபவீ இந்த தம் கட்டுகிறார். கீழடியை எந்த தெலுங்கரும் கன்னடரும் சொந்தம் கொண்டாடவில்லை. பெருமிதமும் கொள்ள வில்லை. பிறகு என்ன ம… இந்த ஆளு உளரிகிட்டு திரியுறாருன்னு விள்ங்கவில்லை. அவருக்கு வழங்கப்படும் எச்ச காசுமட்டுமே காரணமாக இருக்க வேண்டும். எவ்வளவு துப்பினாலும் இந்த ஆளுக்கு அறிவே வராது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.