…
…
…
…
இதை காமெடி என்று சொல்வதா ? அல்லது
தமிழகத்தின் தலைவிதி என்று சொல்வதா – ?
தெரியவில்லை…!
ராதாபுரம் தேர்தல் குறித்து, மறு எண்ணிக்கைக்கு
உயர் நீதிமன்றம் உத்திரவிட்டது. எண்ணிக்கொண்டிருக்கும்
போதே, எண்ணுங்கள்; தடையில்லை. ஆனால் முடிவை
வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஆணை
பிறப்பித்து விட்டது.
எண்ணிக்கையில் ஈடுபட்டவர்கள் குறைந்தது 50 பேராவது
இருப்பார்கள். இரண்டு தரப்பு வேட்பாளர்களும் இருந்தார்கள்.
முடிவை வெளியிடக்கூடாதே தவிர, எண்ணிக்கை முடிந்து,
இரு தரப்பும் கையெழுத்து போடும் நடைமுறை நடந்தே
தீர வேண்டும். எனவே, இரண்டு தரப்பிற்கும், கூடவே
குறைந்த பட்சம் இன்னும் 50 பேருக்குமாவது முடிவு
தெரிந்திருக்கும்.
முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் தடை போட்டதை
ஜீரணிக்க முடியவில்லை திமுக தலவரால்.
கைக்கு எட்டியதை வாய்க்குள் போட முடியாமல் கையை
பிடித்து வைத்துக் கொள்வதா – என்று கடுப்பு….!
எனவே, மறைமுகமாக ரிசல்டை வெளியிட்டார்.
முடிவுகள் வெளிவரும்போது – இன்பதுரை (அதிமுக வேட்பாளர்)
துன்பதுரை ஆகிவிடுவாரென்று… புத்திசாலித்தனமாக
நீதிமன்ற உத்திரவை மீறாமல் – தான் பேசுவதாகத் தான்
நினைப்பு அவருக்கு.
அந்த இன்பதுரை மட்டும் சும்மா இருப்பாரா…? ரிசல்ட்
வெளிவந்த பிறகு பேசமுடியாமல் போகலாம். இப்போது
திருவாளர் ஸ்டாலினுக்கு பதில் சொல்வதை யார் தடுக்க
முடியும்…? எனவே பதிலுக்கு சுடச்சுட கொடுக்கிறார் –
“ரிசல்ட் வெளிவரும்போது இன்பதுரை – துன்பதுரை
ஆக மாட்டார்; “பேரின்ப துரை” யாகத்தான் ஆவார்.
ஆனால் அய்யாத்துரை தான் ( ஸ்டாலினுக்கு அவரது தந்தை
முதலில் வைக்க யோசித்த பெயர்…!!!) தான் “அய்யோத் துரை”
ஆகி விடுவார்…!!!
இங்கே தமிழ் மொழியை இவர்கள் கையாளும் விதம்
மகிழ்ச்சியை கொடுத்தாலும், தமிழகத்தின் அரசியலை
நினைத்து வருந்தவே தோன்றுகிறது….
நமது ஆசை –
இன்பதுரையும் – துன்பதுரை ஆகட்டும்…!!!
அய்யாத்துரையும் – அய்யோத்துரை ஆகட்டும்…!!!
அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதோ இல்லையோ –
தமிழக மக்களுக்கு கொஞ்சமாவது திருப்தி கிடைக்கும்….!!!
(இது எப்படி நடக்கும் …. ?
ராதாபுரம் தீர்ப்பு – திமுகவுக்கு சாதகமாகவும்,
நாங்குநேரி தீர்ப்பு – அதிமுகவுக்கு சாதகமாகவும்
வந்தால் சாத்தியமாகுமே…!!! )
நாங்குநேரியில் தீர்ப்பு அதிமுகவுக்கு சாதகமாக
வரத்தான் – காங்கிரஸ், திமுக இரண்டுமே –
போட்டி போட்டுக்கொண்டு முனைகின்றனவே…!!! 🙂 🙂
.
————————————————————————————————————
ஆஹாஹா… அய்யாத்துரையும் இன்பதுரையும் தோல்வியைத் தழுவட்டும். தமிழகத்துக்கு அது வெற்றியைத் தரட்டும்.
அய்யாத்துரையின் மேல் தேச துரோக வழக்கு வரும் போலிருக்கு… பாகிஸ்தான், காஷ்மீர், … ஏதோ லின்ங் ஓடுதா?
அய்யாத்துரை வாரிசு முறையில் கட்சித்தலைவராகி
விட்டாரே தவிர, பக்குவம் போதவில்லை. அடிக்கடி
இப்படித்தான் எதையாவது சொல்லி, அசிங்கப்படுகிறார்.
கலைஞர் – இவருக்கு பதிலாக கனிமொழியை
கட்சியில் வாரிசாக்கி இருக்கலாம். கட்சி இன்னும்
கொஞ்சம் பெட்டராக இருக்கும் . கட்சிக்காரர்களுக்கு
ஒரு புதிய உத்சாகமும் பிறந்திருக்கும்.
இப்போது கூட கட்சிக்காரர்கள் நினைத்தால்
அதைச் செய்யலாம்.