சிவாஜி…..!!!


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்
பிறந்த நாளன்று நீங்கள் அவசியம் அவரைப்பற்றி
எழுத வேண்டுமென்று நண்பர் சந்திரமௌலி விருப்பம்
தெரிவித்திருந்தார். இது அவரது விருப்பம் மட்டும் தானா…?
என் விருப்பமும் கூடத்தான்….!!!

ஆனால், அந்த நாளில் நான் நேபாளத்தில் இருந்ததால்,
எழுத வசதி இல்லாமல் போய் விட்டது. அதனாலென்ன –
சிவாஜியைப்பற்றி எழுத நாள், கிழமை, நேரம் எல்லாம்
பார்க்க வேண்டுமா என்ன…?

இன்று காலை ஒரு இடுகை பதிவிட்டிருந்தேன்.
சிவாஜியும் நாகேஷும் குறித்தது….
இப்போது, மாலையில் இன்னொன்று… !!

சந்திரமௌலி சாருக்கு ரெட்டை சந்தோஷம் …?

பலருக்கு சிவாஜியைப் பிடித்தால், எம்.ஜி.ஆரை பிடிக்காது.
எம்.ஜி.ஆரை பிடித்தால் -சிவாஜியைப் பிடிக்காது.

ஆனால், இளமையிலிருந்தே – எனக்கு இவர்கள்
இருவரையுமே மிகவும் பிடிக்கும்.
வெவ்வேறு காரணங்களுக்காக …
இவர்கள் இருவரும் நடித்த படங்களில் அநேகமாக
95 சதவீதம் பார்த்திருப்பேன்.

சின்ன வயதில் எனக்கு மிகவும் பிடித்த சிவாஜி படம்
கல்கி அவர்கனின் கதையான – “கள்வனின் காதலி”.
சோகமாக முடியும் படம் என்பதால், அப்போது
இது வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை. எனவே,
பலர் இந்தப் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை….
ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
பிற்காலத்தில் பல படங்கள்….!!!

கள்வனின் காதலி படத்திலிருந்து எனக்குப் பிடித்த
பாரதியார் பாடல் ஒன்று கீழே –

சிவாஜியின் இன்னொரு தோல்விப் படமான
அம்பிகாபதி’யிலிருந்து – ஒரு பாடல் கீழே…!!!

( இவருக்கு வேறு யாரோ பின்னணி
பாடியிருக்கிறார்கள், இவர் வாயை மட்டும் தான்
அசைக்கிறாரென்று சத்தியம் செய்தால் கூட
நம்ப முடியாது… இல்லையா….!!! )

நிறைய எழுதலாம்… அதனாலென்ன… அடுத்த முறை
எழுதினால் போயிற்று.
இன்றைய தினம் –
என் எழுத்தைப் படிப்பதை விட,
ஒரு முக்கியமான தமிழ்ப் பேச்சாளர்
ஒருவரின் உரையை நீங்கள் கேட்கவேண்டுமென்று
விரும்புகிறேன்…

கீழே – நான்கு நாட்களுக்கு முன், சிவாஜி பிறந்த நாள்
விழாவில் திருமதி பாரதி பாஸ்கர் பேசியது …..

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to சிவாஜி…..!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  பாரதி பாஸ்கர் அவர்கள், ‘சிவாஜிக்கு விருது கொடுத்தால் விருதுக்குப் பெருமையே தவிர அவருக்கு இல்லை’ என்று சொல்வது ஏற்கத்தக்க கருத்து அல்ல.

  அரசியல் காரணமாக சிவாஜிக்கு விருதுகள் மறுக்கப்பட்டன. சிவாஜியின் நேரம், அவர் காமராஜருடன் இருந்ததால், விருதுக் குழுவினர், எதுக்கு இந்திராவைப் பகைச்சுக்கணும்னு சிவாஜிக்கு விருது கொடுக்கலை. சிவாஜி இந்திரா காங்கிரஸுக்கு வந்த பிறகு, விருது கொடுத்து உற்சாகப்படுத்தும் வயதை அவர் கடந்துவிட்டார்.

  நம்ம நாட்டுல மட்டும்தான் விவேக், வைரமுத்துவுக்கு பத்மஸ்ரீ கொடுத்துவிட்டு எம்.எஸ்.வி., நாகேஷ் போன்றோரைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அளவு, விருதில் காசும், பாலிடிக்சும் விளையாடுகிறது.

 2. Selvarajan சொல்கிறார்:

  சிவாஜி நடிப்பின் இமயம் .. அந்தக்கால நடிகர்களிடம் அவரது நடிப்பின் சாயல் கொஞ்சமேனும் கலந்தே இருந்தது — இதில் விதிவிலக்காக இருந்தவர்கள் ஒன்று எம்.ஜி.ஆர். ..அடுத்து ஜெமினி கணேசன் ..! நடிகர் திலகம் சிவாஜி அமெரிக்க சென்று திரும்பியபோது அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளித்தவர் எம்.ஜி.ஆர். தான் .. !

  எம்.ஜி.ஆர் பொறுப்பாசிரியராக இருந்த நடிகர் சங்கத்தின் இதழான நடிகன் குரலில் சிவாஜி பற்றி அருமையானதொரு கட்டுரை எழுதினார். சக போட்டியாளர் என்ற ஈகோவின்றி சிவாஜியை புகழ்ந்து எம்.ஜி.ஆர் எழுதிய இந்த கட்டுரை அவரது பிறந்தநாளில் இன்று உங்களுக்கு…. https://www.vikatan.com/government-and-politics/politics/69010-this-is-what-mgr-told-about-sivaji

  நடிகர் திலகம் அவர்களைப்பற்றி இதைவிட சிறப்பாக வேறு யாராலும் கணித்து எழுத முடியுமா என்பதே சந்தேகம் தான் ..!!!

 3. D. Chandramouli சொல்கிறார்:

  Welcome back from Katmandu. I remembered my own visit to Nepal towards end of 1981 before I left India for taking up an overseas job. I see that his fan-base have increased multi-fold, more so after Sivaji’s demise. I loved G. Ramanathan’s magic in creating lovely songs based on Carnatic Ragas. In Ambigapathy, It seemed that G. Ramanathan, TMS and Sivaji were competing against each other. Sivaji’s portrayal made all wonder if Sivaji himself had sung those songs. Apart from the one from Kalvanin Kadhali “Manadhil Urudhi Vendum”, I also loved Bhanumathy’s “Veyyirkketra Nizhal Undu”. Bharathy Bhaskar’s speech on Sivaji, I guess, would have moved many to tears!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சந்திரமௌலி,

   “வெய்யிற்கேற்ற நிழலுண்டு”
   எனக்கும் மிகப்பிடித்த பாடல் தான்.
   இடுகை நீண்டு விட்டதே என்று தான்
   அங்கே போடவில்லை.
   இதோ, அந்த பாடல்…
   ஒன்றிற்கு இரண்டு தடவையாக –

   ( இந்த பழைய பாடல்கள் விஷயங்களில்
   நமது ரசனை மிகவும் ஒத்துப்போகிறது
   பாருங்கள்…!!! )

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.