காட்மண்டு’விலிருந்து…..!!!ஐந்து-ஆறு நாள் சுற்றுப்பயணமாக குடும்பத்துடன்
நேபாளம் வந்திருக்கிறேன்… தற்போது காட்மண்டுவில்
இருக்கிறோம்.

சுமார் 20 வருடங்களுக்கு முன்னர், பணியில் இருந்தபோதே
தோன்றிய ஆசை – நேபாளம் வழியாக கைலாஷ்-மானசரோவர்
பயணம் போக வேண்டுமென்று. ஆனால், அந்த சமயத்தில்
அதற்குத் தகுந்த பண வசதி இல்லை….!

ரிடையர் ஆனபிறகு கொஞ்சம் பணம் கிடைத்தது.. ஆனால் –
ஹார்ட் அட்டாக் வந்து, உடல் வசதி(தகுதி) போய் விட்டது…

எனவே, என்னைப் பொறுத்தவரையில், கைலாஷ்-மானசரோவர்
நிறைவேறாத கனவாகி விட்டது. இருந்தாலும், முடிந்தபோது
நேபாளம் வரையிலாவது சென்று வர வேண்டுமென்று
நினைத்திருந்தேன். இப்போது தான் கைகூடி இருக்கிறது.

வருடத்திற்கொரு முறையாவது, தொலை தூரப் பயணங்கள்
செல்ல வேண்டும்… புதிய இடங்களை – புதிய மனிதர்களைப்
பார்க்க வேண்டும் என்பது என் நிரந்தர ஆசை.. அநேகமாக,
வருடாவருடம் போய்க்கொண்டும் இருக்கிறேன்.
ஆனால், இது இன்னும் எத்தனை நாளைக்கோ…!!!

பயணத்தில் இருந்தாலும் கூட, முடிந்தவரை, வாய்ப்பு
கிடைக்கும்போது எழுத வேண்டுமென்று உத்தேசம்….பார்ப்போம்.
இடையிடையே சில புகைப்படங்களாவது போட முடியுமென்று
நினைக்கிறேன். திரும்ப வந்த பிறகு வழக்கம்போல்
முழுமையாக எழுதுகிறேன்.

(காட்மண்டு, திருபுவன் விமானநிலையம் –
ரொம்ப சுமார் தான்……!!!)

.
———————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to காட்மண்டு’விலிருந்து…..!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை சார்… நல்ல பயணம். வாழ்த்துகள்.

  எனக்கும் ‘பயம்’ வந்ததனால் கஷ்டமான இடங்களுக்கு முடிந்தவரை இப்போதே செல்வது என்று தீர்மானித்துச் செல்ல முயல்கிறேன். முக்திநாத் நாங்கள் 2008ல் போய்வந்துவிட்டோம். அப்போது காத்மண்ட் கோவில்கள் மற்றும் பொகாராவிற்குச் சென்றிருந்தோம். பிறகு நான் மட்டும் கைலாஷ்/மானசரோவர் செல்லலாமா என்று நினைத்த சமயத்தில்… அவ்வளவு தூரம் செல்வது கஷ்டம் என்ற நிலை. சமீபத்தில் கயா வரை சென்றோம். இன்னும் பத்ரி, துவாரகை, ரிஷிகேஷ், கேதார்நாத் என்று பல இடங்களுக்குச் செல்லணும் என்று ஆசை.

 2. Selvarajan சொல்கிறார்:

  பயணத்தின்பயன் முழுயைடைய வாழ்த்துக்கள்…!

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  பயணம் என்பதே மனதை சோர்விலிருந்து உற்சாகம் என்ற நிலைக்கு கொண்டு செல்லும்! தங்களின் இந்த பயணம் சிறக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஐயா.

 4. Tamilmani சொல்கிறார்:

  my best wishes for your Nepal Yatra . I hope the travelogues you are going to write will help some
  who are yet to visit Nepal and encourage them to visit the places you are going to visit now.

 5. Ganesh சொல்கிறார்:

  Please share Nepal travel experience. With regards, Ganesh

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  Friends,

  I thank you all
  For the Good wishes.

  For the present I am not in a
  Position to writie lengthy paras in Tamil.
  However –

  I will be posting some photographs
  And some other material – whatever is
  Practically possible.
  Shall write in detail once I am back
  In Chennai…….

  .
  With all Best Wishes,
  Kavirimainthan
  30th September 2019
  Katmandu.

 7. Thiruvengadam சொல்கிறார்:

  Wish you happy journey.If possible visit Janakpuri and Lumbini garden So.Thiruvengadam

 8. D. Chandramouli சொல்கிறார்:

  Dear KM

  Sorry to digress. I wish you could write a special article about Sivaji Ganesan, whom many of us adore and whose birth anniversary has just passed; Rightly, Sivaji Fans Association has criticized “Nadigar Sangam” on their lack of participation on an important day like this. Probably, your special article could be in in such category as “En Viruppam” . Please do this at your convenience after your return from Katmandu. I am sure you will have a lot to say about Sivaji.

 9. வில்லவன் கோதை சொல்கிறார்:

  எனக்கும் அப்படியொரு ஆசை உண்டு.பயணத்தில்தான்மனம் விரிவடையும்.எழுத்துக்குத்தீனி கிடைக்கும்.உங்களுக்கு அது கிடைத்திருக்கிறது நல்வாழ்த்துகள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.