…
…
இவரை ட்ராஃபிக் போலீஸ் பிடித்தால்,
கட்கரிஜியின் புதிய சட்டத்தின்படி –
எவ்வளவு FINE போடுவார்கள்…?
அவர், “என்னிடம் காசு இல்லை –
பைக்கையும், அதில் உள்ள லக்கேஜையும்/ஆட்களையும்
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் …”
என்று நடையைக் கட்டினால்…??? 🙂 🙂
…
…
.
————————————————————————————————————————
நம்ம நாட்டுல ஏழை, மத்தியதரவர்க்கம், பணக்காரங்க என்று மூன்று பிரிவுகள் பெரிய இடைவெளியோட இருப்பதால், சட்டங்கள் நிறைய மீறப்படுது, மனிதாபிமானம் இல்லாதமாதிரி தெரியுது, தடி எடுத்தவன் தண்டல்காரனாக-அதாவது பணம் இருப்பவன் சட்டத்தை தூசாகக் கருதும் நிலையும் இருக்குது. (பாருங்க.. ஸ்டான்லி பேராசிரியர், தன் மகனுக்காக ஆள்மாறாட்டமா பரீட்சை எழுத ஆள் ரெடி பண்ணியிருக்கார்..இதுக்குன்னே கேரளாவுல ஒருத்தன் அகாடமி நடத்தறான்)
இதுக்கு முன்னால ஹெல்மெட்டுக்கும் நான் சட்டத்தை ஆதரிச்சு கருத்து எழுதியிருக்கேன். இப்போ புதிய கடுமையான ஃபைன் போடும் சட்டத்தையும் ஆதரிக்கத்தான் நினைக்கிறேன். அது நமக்கு ரொம்பவும் அவசியம்.
நான் தற்போது வாழும் இடங்களில் சாப்பாட்டிற்கு வழியில்லாத குறவர் கூட்டங்கள், குப்பைத் தொட்டியில் ஏதாவது உபயோகமான பொருட்கள் இருக்காதா என்று தேடுகின்ற அவர்கள், ஒருத்தருக்கு ஒரு வகைல உதவ நினைத்து அவங்கள்ட போன் நம்பர் கேட்டபோது போன்லாம் எங்களுக்கு கிடையாது, ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த ஏரியாவுல குப்பைத் தொட்டில உணவு இருக்கான்னு தேடுவோம்னு சொன்ன அவர்கள்….. இவங்களுக்கெல்லாம் வழி சொல்லாம, வெறும்ன சட்டத்தை அவங்க மீது பாய்ச்சுவது முறையா என்று தோன்றுகிறது. (ஏன் பிளாஸ்டிக் பை வைத்திருக்கிறாய் என்பதுபோல).
சிக்னலை மதிக்காமல், மெயின் சாலையில், சிவப்பு இருக்கும்போதே, பச்சை வந்துவிடும் என்று பாதி வரையில் வழியை அடைத்து நிற்கும் வாகன ஓட்டிகளைப் பார்த்தால், டிராபிக் ரூல் ஒன்றையும் ஃபாலோ பண்ணாமல், ஒரு பைக் வாங்கிவிட்டதால் எந்த விதிகளையும் மதிக்காமல் ரவுடிகள்போல் சாலையில் ஓட்டுகின்றவர்களைப் பார்த்தால், இவங்களுக்கு ஆயிரக்கணக்குல இல்லை, லட்சக்கணக்குல ஃபைன் போட்டாத்தான் புத்தி வரும்னும் தோணுது.
சொன்னா விநோதமாத்தான் இருக்கும். அரசே மக்களை மூன்று பிரிவா பிரிச்சு, எல்லா ஆவணங்களிலும், மஞ்சள், பச்சை, சிவப்பு என்று கலரை வைத்து, ஏழை-பட்டப்படிப்பு படிக்காதவர்களைக் கொண்ட, ரேஷன் உணவை மட்டுமே நம்பியிருக்கும், தொலைக்காட்சி/குளிர்சாதனப்பெட்டி இல்லாத குடும்பம், மத்தியவர்க்கம், பணக்காரன்னு பிரிச்சு, இந்த மாதிரி கடுமையான சட்டங்களை மத்தியவர்க்கம், பணக்காரன் இவர்களிடம் மட்டும் பிரயோகிக்கலாம்.
புதியவன்,
மூளை வேறு மனம் வேறு அல்லவா…?
சட்டத்தை இயற்றும் மந்திரி மூளையை மட்டும்
பயன்படுத்துகிறார்… அதுவும் கட்கரிஜி மாதிரி
புத்திசாலிகளுக்கு கேட்கவே வேண்டாம்.
அதை நடைமுறையில் அமல்படுத்துபவர்களுக்கு –
எங்கோ ஓரிருவருக்கு மனதில் ஈரம் இருக்கத்தான்
செய்கிறது. எச்சரிக்கை செய்து விட்டு அனுப்பி
விடுகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் –
எந்திரம் மாதிரி செயல்படுத்துகிறார்கள்.
நீங்கள் சொல்கிற மாதிரி அப்பாவிகள்
மாட்டுவதைப் பார்க்கும்போது பரிதாபமாக
இருக்கிறது.
ஒரு சம்பவம்… நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களோ
மாட்டீர்களோ எனக்குத் தெரியாது.
சென்ற கோடையில் ஊருக்குப் போயிருந்தபோது,
ஹெல்மட் சட்டத்தை திடீரென்று ஒரு நாள்
மிகத்தீவிரமாக கையில் எடுத்துக் கொண்டார்கள்.
நிறைய பேருக்கு அன்று பிடிக்கிறார்கள் என்று
தெரியாது.
இரவு 8 மணி இருக்கும். மெயின் ரோடிலிருந்து,
ஊருக்குள் வரும் தெரு பிரிகிற இடம்.
திருப்பத்திலிருந்து 500 அடி தள்ளி,
ஒரு மரத்தடியில் இருட்டில் நின்றுகொண்டு
வருகிறவர்களை எல்லாம் வரிசையாக மடக்க
ஆரம்பித்தார்கள். மாட்டியவர்களில்
பெரும்பாலானோர் நடுத்தர, ஏழை வர்க்கத்து
குடும்பஸ்தர்கள். அவர்களிடம் காசும் இல்லை…
பரிதாபமாக கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
வாக்கிங் போய்க்கொண்டிருந்த நான் இதைப்
பார்த்து விட்டு, கொஞ்ச நேரம் அங்கேயே
நின்று என்ன நடக்கிறது என்று கவனித்தேன்.
பிறகு மடக்கிக்கொண்டிருந்த குழுவில் இருந்த
ஒருவரிடம் சகஜமாக பேச்சுக் கொடுத்தேன்.
“என்ன இன்று திடீரென்று ” என்று விசாரித்தேன்.
புதிதாக பெரிய அதிகாரி ஒருவர் திருச்சிக்கு
மாற்றலில் வந்து பொறுப்பேற்றிருக்கிறார்.
வந்த அன்றே, அவர் குறைந்தது 5000 கேசாவது
பிடித்து சாதனை ஏற்படுத்த வேண்டும் என்று
உத்திரவிட்டிருக்கிறார். அதான் இருட்டில்
நின்றுகொண்டு மடக்குகிறார்கள். வெளிச்சத்தில்
நின்றால், மக்கள் தூரத்திலிருந்து பார்த்து விட்டு,
பின் வாங்கி வேறு பாதையில் சென்று விடுவார்களே…!!!
நகரில் பல பகுதிகளிலும் அன்று திடீர்
ரெய்டு என்று சொன்னார்.
நான் ஒரு காரியம் செய்தேன்.. அவர்கள்
மடக்கிக்கொண்டிருந்த இடத்திலிருந்து,
400 அடி முன்னால் தள்ளி நானும் ஒரு
மரத்தின் நிழலில், இருட்டில் நின்று கொண்டேன்.
வெறும் தலையுடன் வரும் வாகன ஓட்டிகளை
எல்லாம் அங்கேயே மடக்கி ரெய்டு விஷயத்தை
சொல்லி, திசை திருப்பி விட்டேன்.
ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம், ட்ராஃபிக்
அடங்கும் வரை, இந்தப் பணியை செய்து
கொண்டிருந்தேன்… ஒருவேளை நான் சட்டத்திற்கு
எதிராக நடந்துகொண்டதாக சிலர் நினைக்கலாம்.
ஆனால், என் மனதில் ஒரு பெருத்த சந்தோஷம்…
நிம்மதி.
நான் செய்தது … தவறா…?
ஆனால் என் மனசாட்சி அப்படிச்
சொல்லவில்லையே…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை சார்… ஒரு சட்டத்தினால் அப்பாவிகள், ஏதிலிகள் பாதிக்கப்படக் கூடாது என்பது என் இன்றைய நிலை (இந்திய அனுபவத்துக்குப் பிறகு). சட்டை போடாமல், முழங்கால் வரையாவது மறைக்காமல் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்பது நாகரீகச் சட்டமாக இருக்கலாம். ஆனால் கோவணம் மட்டும்தான் வைத்திருப்பவனிடம் இந்தச் சட்டத்தைப் பிரயோகம் செய்வது எப்படிச் சரியாகும்?
நீங்கள் செய்தது தார்மீகப்படியும் சட்டப்படியும் சரியானதுதான். காவலர்கள் அதிகாரிகளுக்காகச் சட்டத்தை அமல்படுத்துவதும் நாடகமானதுதான்.
இந்தியாவில் சட்டங்கள் எதற்காக இருக்கின்றன ?
விடை rent seeking !
தெருவில் நின்று போலீஸ்காரர் அதிகாரம் செய்கிறார் .
எதற்கு ?
வேறு என்ன – நாலு காசு பார்க்கத்தான் .
நான் யாரு தெரியுமா ? என்பவர்கள் பலசாலிகள் .
பதவி , பணம் இருப்பவர்களிடம் கேட்க மாட்டார்கள் .
அதற்கு அடி பணிந்து போவதை தவிர வேறு வழி கிடையாது .
சட்டம் எழுதுவதே எப்படி பணம் அடிக்கலாம் என்பதுதான் .
ஒரு பேப்பர் – அதில் அய்யா கையொப்பம் இடுவார்.
அந்த பேப்பர் இருந்தால் நீங்கள் செய்வது எல்லாமே சரி .
கையொப்பம் வாங்க காசு கொடுக்க வேண்டும் .
வீட்டு வரி , பட்டா , கட்டிடம் கட்ட அனுமதி ,
சுற்று சூழல் மாசுபாடு எல்லாம் வெறுமனே பேப்பரில்தான் .
விதிகள் மீறுவதற்கு என்றே இருக்கின்றன .
அய்யா powerful என்பார்கள் .அந்த போஸ்ட் வாங்க
அய்யா பணம் செலவு செய்திருப்பார் .
அங்கு இருக்கும் இரண்டு -மூன்று வருடத்தில் போட்ட
பணத்தை எடுப்பார் .மத்தபடி லஞ்சம் என்று சொல்லக்கூடாது .
இந்தியாவில் நிலைமை இப்படி இருக்கும் போது
அபராதத்தை பல மடங்கு உயர்த்துவது அடித்து பிடுங்க வழி வகுக்கும் .
இது போல் சட்டத்திற்கு வியாக்கியானம் பேசிக்கொண்டு மறுபுறம் சுபஸ்ரீ என்ற பெண்ணிற்கு நேர்ந்த விபத்திற்கு காரணம் சட்டத்தை மதிக்காமல் banner நடு ரோடில் தொங்க வைத்தவர்தான் என்று அவரை குற்றம் சொல்வதிலும் அர்த்தம் இல்லை.
அந்த banner ஐ நடு ரோடில் தொங்க வைத்தவர் காகவும் நாம் வியாக்கியானம் பேசுவோமே?
வாழ்க வளமுடன்.
சட்டம் தன் கடமையை செய்யும் என்பது சாதாரண ஆட்களுக்கு .
மெட்ராஸில் பேனர் வைக்கிறார்கள் – பேனர் விழுந்தால் ஆள் க்ளோஸ் .
பண்ணிய நபர் முனிசிபாலிடி கவுன்சிலர்.
அவரை கைது பண்ண முடியாமல் ஸ்காட்லாந்து யார்ட்
போலீஸ் திணறியது .
ரோட்டில் பேனர் வைத்தால் கீழே விழக்கூடாது .
போலீஸ் , முனிசிபாலிடி முன் அனுமதி தேவை .
மீறி வைத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
சட்டம் இருந்தும் அதை செயல் படுத்தவில்லை .
இன்றைக்கு தி நகரில் நெறைய விதி மீறல் கட்டடங்கள் உள்ளன .
ஆனால் ஒரு நடவடிக்கையும் இல்லை .
விதி மீறல் என நோட்டீஸ் வரும் .
அதை வாங்கிக் கொண்டு , நீதி மன்றத்தில் ஸ்டே
வாங்குவார்கள் .
ஸ்டே அப்படியே வருடக்கணக்கில் இருக்கும் .
அப்புறம் பெனால்டி என பேருக்கு ஒரு பணம் கட்டி
ரெகுலர் பண்ணிவிடலாம் .
மெட்ராஸில் எத்தனை ஸ்டே இருக்கிறது ? எத்தனை வருடம் ?
நாளைக்கு எதாவது விபத்து நடந்தால் யார் பொறுப்பு ?
அதிகாரிகள் யாராவது தண்டனை பெற்று இருக்கிறார்களா ?
இதில் அங்கு உள்ள தாசில்தார் , தீயணைப்பு துறை
போன்றவர்களும் உண்டு .
சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்றால்
அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் .
அது வரை எல்லாம் வெறும் பேப்பரில்தான் இருக்கும் .
CMDA என இருக்கிறது – அதில் ஒருவர் கூட qualified கிடையாது !