கூட்டணி கட்சிகளின் விலையை வெளியிட்டு, அசிங்கப்படுத்திய திமுக; இ.கம்யூனிஸ்ட் -15 கோடி, வ.கம்யூனிஸ்ட் -10 கோடி, கொங்கு -15 கோடி….


திமுகவோ, அதிமுகவோ, தங்களுடன் கூட்டணியில் சேரும்
கட்சிகளுக்கு தேர்தல் சமயத்தில் பண உதவி செய்கின்றன
என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால்,
யார் யாருக்கு எவ்வளவு கோடி என்பது தான் ரகசியம்…!!!

ஆனால், முதல் தடவையாக, யார் யாருக்கு எவ்வளவு
கொடுத்தோம் என்று வெளிப்படையாகக்கூறி தங்களது
கூட்டணிக்கட்சிகளை அவமானப்படுத்தியதோடு
அல்லாமல், தேர்தல் கமிஷன் முன் அவர்களை பொய் சொன்ன
குற்றவாளிகளாகவும் காட்டி இருக்கிறது திமுக.

இன்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி மே 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தல்களின்போது,
தனது கூட்டணி கட்சிகளுக்கு தான் ரொக்கமாக கொடுத்த
தொகையை தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தி,
அந்த தகவல் பொதுவெளியில் வரவும் காரணமாகி விட்டது
திமுக.

அந்த தகவலின்படி – கீழ்க்கண்ட விவரங்களை தேர்தல்
கமிஷனுக்கு தந்திருக்கிறது திமுக.
தேர்தல் செலவுகளுக்காக –

இடது கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சிக்கு – 15 கோடி,
வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு -10 கோடி.
கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு -15 கோடி ஆக மொத்தம்
40 கோடி இதர கட்சிகளுக்கு கொடுத்ததாக தனது
அஃபிடவிட்டில் கூறி இருக்கிறது.

தேர்தலுக்காக திமுக செய்த மொத்த செலவு ரூ.79.26 கோடி
என்றும் தெரிவித்திருக்கிறது.

———————————

ஆனால் தனது கூட்டணியில் இருந்த இதர கட்சிகளான –
வைகோவின் மதிமுக,
திருமாவின் விசிக,
இஸ்லாமிய கட்சிகள், மற்றும்
காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு –
எந்த வித பண உதவியும் செய்ததாக கணக்கில் இல்லை….

எனவே – குறிப்பிட்ட சில கட்சிகளை மட்டும் அவமானப்படுத்தும்
நோக்கிலேயே திமுக இந்த விவரங்களை வெளியிட்டுள்ளதோ
என்கிற சந்தேகம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இதில் பணம் வாங்கிய கட்சிகள், தேர்தல் கமிஷனுக்கு
கொடுத்த கணக்குகளில், இந்த நன்கொடை விவரங்களை
காட்டவில்லை. எனவே, அவற்றை, திமுக இப்போது ஒரு
தர்மசங்கடமான நிலைக்கு தள்ளி இருக்கிறது…

இந்த இந்த கட்சிகளை இவ்வளவு இவ்வளவு விலை கொடுத்து
வாங்கினோம் என்று சொல்கிற மாதிரியான இந்த விவரங்களை
திமுக வெளியிட்டிருப்பதன் பின்னணி என்ன….?

.
———————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to கூட்டணி கட்சிகளின் விலையை வெளியிட்டு, அசிங்கப்படுத்திய திமுக; இ.கம்யூனிஸ்ட் -15 கோடி, வ.கம்யூனிஸ்ட் -10 கோடி, கொங்கு -15 கோடி….

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… நீங்க முக்கியமான பாயிண்டை கவனிக்க விட்டுட்டீங்க. தேர்தல் சமயத்துலயே அந்தப் பேச்சு வந்ததே.

  எங்க சின்னத்துல நின்னா நாங்க 20 கோடி செலவழிப்போம். உங்க சின்னத்துல நின்னா நீங்கதான் செலவைப் பார்த்துக்கணும் என்று சொல்லி, மதிமுக, விசிக ஒவ்வொரு தொகுதிக்கு தங்கள் செலவைப் பார்த்துக்கணும் (அவங்க சின்னத்துல நின்னதுனால) என்ற கண்டிஷன் திமுக போட்டது. அதுனாலத்தான் விசிக, மதிமுக போன்றவங்களுக்கு திமுக பணம் கொடுக்கலை. திருமா மற்றும் வைகோவுக்கு (வைகோ ராஜ்யசபை எம்.பி தெரியும்) திமுக செலவுக்கணக்குல எழுதியிருப்பாங்க.

  கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளிகளுக்குண்டான கட்சி என்பதால், திமுகவிடம் பணம் வாங்கியிருப்பாங்க. அவங்க ஏழைகளுக்கு உழைக்கும் கட்சி அல்லவா?

  ஸ்டாலின் இந்த விஷயத்தில் தவறு செய்ததுபோலத் தெரியலை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // அதுனாலத்தான் விசிக, மதிமுக போன்றவங்களுக்கு திமுக பணம் கொடுக்கலை.//

   இது உங்கள் நினைப்பு மட்டுமே.

   இந்த கட்சிகள் திமுகவிடம் பணம் வாங்காமல் இருந்திருக்கும்
   என்று என்னால் நினைக்க முடியவில்லை.
   கடந்த தேர்தலில் கூட, திருமாவுக்கு நான் ——- கோடி கொடுத்தேன்
   என்று வைகோ கூட கூறினாரே… நினைவில்லை…?
   வைகோவிடமே வாங்கியவர்கள், செழிப்பான திமுகவிடம்
   வாங்காமலா இருப்பார்கள்…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    இது சம்பந்தமாக பல செய்திகளைப் படித்தேன். மறுமொழி எழுதலாம்னு நினைத்தேன் (என் கருத்துக்கு). அப்புறம் விட்டுவிட்டேன். அரசியல்வாதிகள் அவங்க லாபத்துக்குத்தான் அரசியல்ல இருக்காங்க. மற்றபடி கொள்கை, மக்கள் நலன் என்று நாம நினைக்கிறது கானல் நீரை உண்மையான நீர்நிலை என்று நினைப்பதைப்போல.

    நிச்சயம் திருமா காசு வாங்காமல் எதையும் செய்யமாட்டார், ஆதரவு, எதிர்ப்பு இரண்டுக்கும் அவரிடம் ஒரு விலை இருக்கிறது. வை.கோ. நேர்மை, நியாயம், நீதி என்றெல்லாம் பேசுபவர். ஆனால் அவர் செயல்கள் அப்படியே நேர் எதிராக இருக்கும். காலம் அவருக்கு நிறைய கற்றுத் தந்த பிறகு, தன் சிகரெட் ஏஜெண்ட் மகனை மதிமுகவுக்கு வாரிசாக்க முற்பட்டிருக்கிறார்.

 2. Selvarajan சொல்கிறார்:

  பாவம்யா — இந்த கம்யூனிஸ்ட்கள் — ? ஒன்னு –ரெண்டு சீட்டுக்காக அப்படி — இப்படி பேசி காலத்தை ஓட்டுகிறார்கள் — தனியாக — சொந்தமாக — சுயமாக வாழ்வதைவிட ஒட்டுண்ணியாக வாழ்வதன் சுகத்தை அவர்கள் பல ஆண்டுகளாக நுகர்ந்து — அதில் கண்ட ருசியினால் அவர்கள் மீண்டு வருவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. …

  கடைசிவரை கார்பொரேட் — முதலாளித்துவ கட்சிகளுக்கு முட்டுக் கொடுத்து வாழவே அவர்கள் ஆசைப்படுகின்றார்கள்… எல்லாம் முடிந்து ஏதாவது மிச்சம் இருக்குற சீட்டுகள் கொடுத்தால் போதும் என்கிற மனப்பக்குவம் அடைந்தவர்கள் — இவர்கள் வைத்த திமுக கூட்டணி குடும்ப — மற்றும் வாரிசு நலனுக்காக..என்பது தெரிந்திருந்தும் … சித்தாந்தம் மறந்து ” சில்லறைக்காக ” கூட்டணி ஜோதியில் கலந்து தற்போது பணம் பெற்றது அம்பலமாகி நிற்கிறார்கள் … இதை நியாயப்படுத்த அறிக்கைகள் மூலம் சப்பைக்கட்டுகட்ட முயற்சிக்கிறார்கள் … இது வழக்கமான ஒன்று தான் என்று திமுக செய்தித் தொடர்பாளரும் எம்.பி.யுமான டி.கே.எஸ். இளங்கோவன்கூறுகிறார் … பாவம்யா தோழர்கள் …!!!

  அதுக்கு — இதுக்கு என்று பிறந்தவனுக்கு — செத்தவனுக்கும் அடையாளம் ” ஆதார் ” அவசியம் என்று ஐந்து ஆண்டுகளை ஒட்டியவர்கள் — தற்போது மீண்டும் ஆதாருக்கு மாற்றாக ” ஒரே அட்டை “என்று கூக்குரலிட தொடங்கிவிட்டார்கள் ..! ஒரே நேஷன் — ஒரே மொழி .. ஒரே ரேஷன் என்றெல்லாம் கூற தெரிந்தவர்கள் — அரசியல் கட்சிகள் தனித்து போட்டி என்று கொண்டுவர துணிவார்களா …? அப்படியிருந்தால் ” கூட்டணி கட்சிகளின் விலை ” என்பது இருக்காது அல்லவா … ? வெளிவந்து நாறாமல் இருக்கும் அல்லவா …? எலெக்ட்ரோல் பண்ட் என்பது தானே இதற்கு வழிகாட்டி ..?

  இடது — வலது கம்யூனிஸ்ட்கள் பெற்ற தொகையை சரிபார்க்கவும் — மாறியுள்ளது …!

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  செல்வராஜன்,

  தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள்
  என்ன வேண்டுமானாலும் யோசிக்கலாம், பேசலாம் … செய்யலாம்.
  கேட்டுக் கொள்ள வேண்டியது தான்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 4. Selvarajan சொல்கிறார்:

  அய்யா ..! தாங்கள் குறிப்பிட்ட // இடது கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சிக்கு – 15 கோடி,
  வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு -10 கோடி. // என்பதை தான் ” இடது — வலது கம்யூனிஸ்ட்கள் பெற்ற தொகையை சரிபார்க்கவும் — மாறியுள்ளது …! ” என்று குறிப்பிட்டு இருந்தேன் …சரி செய்யவும் …! // The Hindu reported on Tuesday. Of this amount, Rs 15 crore was given to the Communist Party of India and Rs 10 crore to the Communist Party of India (Marxist). //

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இந்த செய்தி இன்னும் முழுமையடைந்ததாகத்
  தெரியவில்லை… கீழே லேடஸ்ட் நிலவரம் –

  ————–

  1) -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய அரசியல் தலைமைக் குழு இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 24) ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.

  அதில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் நிதி தொடர்பாகவும், செலவுக் கணக்கு தொடர்பாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இத்தகைய தகவல்கள் கட்சியின் மீதான மதிப்பைக் குறைக்கும் நோக்கத்தோடு வெளியிடப்பட்ட தவறான தகவல்களாகும்.

  கடந்த மக்களவைத் தேர்தல் காலகட்டத்தில் கட்சிக்கு பெறப்பட்ட அனைத்து நன்கொடைகளையும், நிதிகளையும் பற்றி தேர்தல் ஆணையத்திடம் கட்சி சமர்ப்பித்துள்ள வரவு செலவுக் கணக்கு அறிக்கையில் தெளிவாக இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கட்சிக்கு கிடைத்த நன்கொடைகள் பற்றிய முழு விவரங்கள் அந்த அறிக்கையில் இருக்கின்றன. எதுவும் மறைக்கப்படவில்லை.

  மேலும் ஊடகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்தத் தொகை என்பது புனைப்பட்ட தொகையாகும். தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் செலவுக் கணக்கு பற்றிய முழு அறிக்கையும் வெளிவந்தபிறகு இதை யார் வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ளலாம்” என்று மார்க்சிஸ்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  ————————–

  2) “தேர்தல் காலத்தில் திமுக சார்பில் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களான திருமாவளவன், ரவிக்குமார், கணேசமூர்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் ஐந்து கோடி ரூபாய்க்கு டிடி எடுத்துக் கொடுத்திருக்கிறது திமுக. இந்நிலையில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, கொமதேக ஆகிய கட்சிகளை மட்டும் கணக்கில் காட்டியிருப்பது ஏன்?” என்ற கேள்வியும் திமுக கூட்டணிக்குள் எழத் தொடங்கியிருக்கிறது.

  —————————–

  .

  காவிரிமைந்தன்

 6. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… இந்த சப்ஜெக்டையே நான் உங்களிடம் வித்தியாசமா கேட்கிறேன்.

  எல்லோருக்கும் தெரிகிறது, ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் கட்சி வேட்பாளராக போட்டியிடணும்னா குறைந்த பட்சம் 10-20 கோடி ரூபாயாவது வேண்டும் என்று. இவங்கதான் பாராளுமன்றத்தை அலங்கரிக்கறாங்க. அப்படி இருக்கும்போது ஏன், தேர்தல் செலவை நியாயமான ஒரு தொகையாக நிர்ணயம் பண்ணக்கூடாது, சட்டத்தின் மூலமாக? நியாயமில்லாமல் 70 லட்சம் என்று நிர்ணயம் செய்வதில் யாருக்கு லாபம்? ஆரம்பமே ஃப்ராடுத்தனம் செய்து ஒரு பதவிக்கு வருபவர்கள் நேர்மையாக எப்படி நடந்துகொள்ள முடியும்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // ஆரம்பமே ஃப்ராடுத்தனம் செய்து ஒரு பதவிக்கு
   வருபவர்கள் நேர்மையாக எப்படி நடந்துகொள்ள முடியும்? //

   இந்த கேள்வி சரியானது… ஆனால், நீங்கள்
   சொல்வது போல் தேர்தல் செலவின் உச்சவரம்பை
   உயர்த்தினால் மட்டும் இந்த பிரச்சினை தீர்ந்து விடாது.
   ஒருவேளை 5 கோடி என்று உயர் வரம்பு வைத்தால் –
   5 கோடியை முதலீடு செய்பவர் பொதுசேவை செய்யவா
   வருவார்…? பணம் இல்லாத நேர்மையான ஒரு மனிதர்
   போட்டியிட விரும்பினால், அவர் என்ன செய்வார்…?

   ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலில் நிற்க, போட்டியிட,
   ஏழை, பணக்காரர் என்று அனைவருக்குமே சமமான
   வாய்ப்பு கிடைக்க வேண்டும். பணம் இருப்பவருக்கு
   மட்டும் பலத்த விளம்பரங்களும், ஆள் பலமும் வைத்து,
   ஜெயிக்கக்கூடிய வசதிகள் கிடைக்க சட்டம் உதவக்கூடாது.

   எனவே, தேர்தல் செலவுகளை அரசாங்கமே ஏற்று
   வேட்பாளர்கள் செலவு செய்வதையோ, பெரிய அளவில்
   விளம்பரங்கள், ஊர்வலங்கள், பேரணிகள் நடத்துவதையோ –
   தடை செய்ய வேண்டும். அரசாங்கமே ஒவ்வொரு
   தொகுதியிலும் ஒரு மேடை போட்டுக்கொடுத்து,
   அனைத்து வேட்பாளர்களையும் அங்கேயே பிரச்சாரம்
   செய்ய வைக்க வேண்டும்…

   இதைச் செய்ய முடிந்தால் ….ஜனநாயகம்
   பிழைக்க வழியுண்டு… ஆனால் -இத்தகைய
   சட்டங்கள் எதுவும் கொண்டு வரப்பட
   அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா…?
   இத்தகைய ஜனநாயகம் அவர்களுக்கு உதவியாக
   இருக்காதே…???

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.