ஸ்டாக் மார்க்கெட் – அற்ப சந்தோஷிகளுக்காக ஒரு வீடியோ…!!!மிகப்பெரிய தத்துவத்தை 15 விநாடிகளில்
சொல்லி விடும் இந்திய பங்குச் சந்தை…

“எதை நீ கொண்டு வந்தாய் – இழப்பதற்கு…?
எடுத்ததெல்லாம் இங்கேயிருந்து தான் எடுக்கப்பட்டது…!!!

நேற்று வேறு ஒருவனுக்கு ..
இன்று உனக்கு…
நாளை…? வேறு எவருக்கோ…!!!

“எதுவும், யாரும் – இங்கே நிரந்தரமில்லை…”

.
——————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ஸ்டாக் மார்க்கெட் – அற்ப சந்தோஷிகளுக்காக ஒரு வீடியோ…!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  ஒவ்வொரு திங்கட்கிழமை காலைகளும்
  எவ்வளவு அற்புதமானவை
  (அல்லது பயங்கரமானவை )
  என்பது அனுபவப்பட்டவர்களுக்குத் தான்
  புரியும்.

  கே.எம்.சார் உங்களுக்கு அந்த
  அனுபவம் உண்டா ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புவியரசு,

   எனக்கு நேரடியான அனுபவம் இல்லை.
   கடவுள் அருளால் ரோட்டி, கபடா, மக்கான்
   (உணவு, உடை, இருப்பிடம் ) கிடைத்து
   விட்டதாலும், அதீத வருமானத்தில் எனக்கு
   நாட்டம் இல்லாததாலும், நான் இதில்
   ஈடுபட்டதில்லை.
   ஆனால், விஷயங்களை தெரிந்து வைத்துக்
   கொள்வேன்… என் நண்பர்கள் சிலருக்கு
   இதில் “நல்ல” அனுபவம் உண்டு. எனவே,
   அவர்கள் படும் அவஸ்தைகளிலிருந்து
   நிறைய “ஞானம்” பெற்றிருக்கிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  I am not getting carried away by sudden surge of stock market for few days. இதில் பெருமைப்படுவதற்கோ அதீத சந்தோஷம் கொள்வதற்கோ ஒன்றுமே இல்லை. ஸ்டாக் மார்கெட் சாதாரணர்களில் மகிழ்ச்சிக்கு எப்படி காரணமாக இருக்க முடியும்? திடுமெனெ ஸ்டாக் மார்க்கெட்டில் பணம் போட்டுள்ள பெரிய கம்பெனிகள் பணத்தை எடுத்துவிடும். இந்தியப் பொருளாதாரம் கடுமையான சூழல் நோக்கிப் போகுதுன்னு நினைக்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   1) ஏழைகளுக்கும் ஸ்டாக் மார்க்கெட்டுக்கும்
   எந்தவித சம்பந்தமும் இல்லை.

   2) நடுத்தர வர்க்கத்து மக்கள் –
   இதில் அறிமுகம் இல்லாதவர்கள் கொடுத்து
   வைத்தவர்கள். அவர்கள் அறியாதவர்களாக
   நீடிப்பதே அவர்களுக்கும், அவர்களது
   குடும்பத்துக்கும் நல்லது.

   ஆனால், இதில் இறங்கி விட்டவர்களுக்கோ –
   இது ஒரு போதை… அவர்களை நாசமாக்காமல்
   வெளியே அனுப்பாது.

   3) பணக்காரர்களுக்கு இது ஒரு “சூதாட்டம்”.
   வெற்றியோ, தோல்வியோ – ஆட்டத்தில் இருக்கும்
   அந்த “சுவாரஸ்யம்” அவர்களுக்கு முக்கியம்.
   தங்களது புத்திசாலித்தனத்தை/சாமர்த்தியத்தை –
   உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு விளையாட்டாக
   அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் ஏற்படும்
   தோல்விகளையும், நஷ்டங்களையும் தாண்டி –
   தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள்…

   4) அரசியல்வாதிகளுக்கோ ……. 🙂 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.