என் விருப்பம் – 32 (ஏ.எம்.ராஜா…)


தமிழ்த் திரையுலகில், பலவேறு துறைகளில்,
பல திறமைசாலிகள் நிரந்தரமான இடத்தைப்
பெற்றுள்ளனர்.

இசைத்துறையில் மக்கள் மனதில் நீங்காத
இடம் பெற்ற சிலரில் ஏ.எம்.ராஜா அவர்களும் ஒருவர்.

ஏ.எம்.ராஜாவின் குரலில் மயங்காதவர்களே
இருக்க முடியாது. அது மகிழ்ச்சி ததும்பும்
காதல் பாடலானாலும் சரி,
துக்கம் தோய்ந்த தனிமை சோகப்பாடல்
ஆனாலும் சரி – அந்த குரலின் இனிமை இருக்கிறதே…
அதை வார்த்தைகளில் சொல்வதை விட
ரசித்து அனுபவிக்கும்போது தான்
சரியாக உணர முடியும்.

பல படங்களில் பாடியுள்ள ராஜா மிகச்சில படங்களுக்கு
இசையும் அமைத்திருக்கிறார். அவர் இசையமைத்த
படங்களில் எல்லாம் அவரது ஆர்கேஸ்டிரேஷன் வித்தியாசமாக
இருக்கும். அதை வைத்தே, இது ஏ.எம்.ராஜாவின்
இசையமைப்பு என்று தெரிந்து கொண்டு விடலாம்.

இன்றைய என் விருப்பத்தில், எனக்குப் பிடித்த
சில பாடல்கள் கீழே – ராஜாவே இசையமைத்து பாடியதும்
மற்றவர்களின் இசையமைப்பில் பாடியதும் .. இரண்டு
ரகமும் உண்டு.

ஏ.எம்.ராஜா -1951-ல்
முதன் முதலில் பாடிய தமிழ்ப்பாடல் –
எஸ்.எஸ். வாசன் – ஜெமினியின் சம்சாரம் ….

ஏ.எம்.ராஜா இசையமைத்த படம் -ஆடிப்பெருக்கு….
தனிமையிலே இனிமை காண முடியுமா…?

ஏ.எம்.ராஜா இசையமைத்த படம் – கல்யாண பரிசு
வாடிக்கை மறந்ததும் ஏனோ?

ஏ.எம்.ராஜா இசையமைத்த படம்
என்னாளும் வாழ்விலே – விடிவெள்ளி

கே.வி.எம். இசையமைப்பு –
கண்மூடும் வேளையிலும் – மஹாதேவி –

இதய வானின் உதய நிலவே -பார்த்திபன் கனவு

எம்.எஸ்.வி.இசையமைப்பு –
தென்றல் உறங்கிய போதும் –
பெற்ற மகனை விற்ற அன்னை-

மயக்கும் மாலைப்பொழுதே -குலேபகாவலி

இந்த 2 பாடல்களையும் சேர்த்தே கேட்க வேண்டும் –
சிற்பி செதுக்காத பொற்சிலையே – எதிர்பாராதது


கலையே என் வாழ்க்கையின் -மீண்டசொர்கம்

.
———————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to என் விருப்பம் – 32 (ஏ.எம்.ராஜா…)

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! ” தேன் நிலவு ” என்கிற படம் ஏ .எம் . ராஜாவின் இசையில் ஒரு அற்புதம் … அனைத்து பாடல்களும் ஹிட் ,,! காலையும் நீயே மாலையும் நீயே என்ற பாடலையும் — மீண்ட சொர்க்கம் :-கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் என்ற பாடலையும் ஒப்பிட்டு பாருங்கள் .. ஜெமினி கணேசன் – வைஜயந்திமாலா .. ஜெமினிகணேசன் – பத்மினி .. அந்த இரண்டு பாடல்களின் நடன அசைவுகளையும் உற்று நோக்குங்கள் … ஓரளவு ஒற்றுமை தெரியும் … !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   செல்வராஜன்,

   ஏ.எம்.ராஜாவின் பாடல்களில் மிக அருமையான
   பாடல்கள் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும்
   ஒரே சமயத்தில் போட்டால், வாசகர்கள்
   பார்க்கத் தவறி விடுவார்கள்; இருக்கவே இருக்கிறது
   அடுத்த சந்தர்ப்பம்.

   தேனிலவு, மீண்ட சொர்கம் இரண்டுமே ஸ்ரீதரின்
   படங்கள். எனவே நிச்சயம் ஒற்றுமை
   இருக்கத்தான் செய்யும். நீங்கள் “சுமைதாங்கி”
   பார்த்திருக்கிறீர்களா…? ஸ்ரீதரின் அற்புதமான படைப்பு…
   ஆனால் failure.மீண்ட சொர்கம் கூட
   box office-ல் failure தான்.

   Box Office-க்கும் ஒரு படத்தின் தரத்திற்கும்
   சம்பந்தமே இல்லை என்பது என் கருத்து.

   ஒரு ஏக்கப் பெருமூச்சு – அந்த மாதிரி படங்கள்
   இனி வர வாய்ப்பு இருக்கிறதா…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. D. Chandramouli சொல்கிறார்:

  My favorite singer with his honey coated voice has always been A.M. Raja. Then Nilavu, Missiamma, Edhir Paradhadu, Kulebagaali are just a few of his masterpieces. Who can forget A.M. Raja’s melodious musical beats just before the song “Patu Padava”?

  His voice went well with Gemini’s. Unlucky for Gemini that .A.M. Raja, for some unknown reasons, withdrew from singing for movies. If he had lived long enough and continued to sing for Tamil movies, particularly for Gemini, P.B.Srinivas would not have made it this far. Director Sridhar and A.M. Raja were trendsetters for melody that would touch greater heights with MSV-VR,

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.