ஆட்சி மாறியதால்… காட்சி மாறியதா…?


2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி
நடந்தது… அந்த ஆட்சியின் கடைசி இரண்டு ஆண்டுகளில்
வெளியே தெரியவந்த ஊழல்களுக்கு கணக்கே இல்லாமல்
போனது…

மக்கள் நொந்து போனார்கள்… அந்த ஆட்சி தொலைய
வேண்டுமென்று மனதார விரும்பினார்கள்…தேர்தலும் வந்தது.
ஒருவழியாக – அந்த ஆட்சியும் தொலைந்தது….

2014-ல் புதிய ஆட்சி வந்தது… ஐந்தரை ஆண்டுகளாக
புதிய ஆட்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
காட்சி மாறியதா…?
காட்சி மாறியது உண்மை தான்… ஆனால் –
இது வேறு விதம்….!!!

பலவித வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன…
ஆட்சி மாறுகிறது… காட்சியும் மாறுகிறது…
ஆனால், மக்களுக்கு விடிவு கிடைக்கிறதா…?

கீழே ஒரு கட்டுரை… குமுதத்தில் வெளிவந்தது.
படித்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள்…
( குமுதம் வார இதழுக்கு நன்றி…)————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஆட்சி மாறியதால்… காட்சி மாறியதா…?

 1. Selvarajan சொல்கிறார்:

  // “கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்வதா?”- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல் // https://www.dailythanthi.com/News/India/2018/10/01014255/LIC-in-the-debt-sinking-company-Invest-in-money.vpf ….
  ஓராண்டுக்கு முன்பு திரு ராகுல் காந்தி அவர்கள் // ஐ.எல்.அண்ட் எப்.எஸ். என்றால் “ஐ லவ் பைனான்சியல் ஸ்கேம்ஸ் பார் யூ” என்று அர்த்தமா?” (ஐ.எல். அண்ட் எப்.எஸ். என்றால் நான் உங்களுக்காக நிதி ஊழல் செய்வதை விரும்புகிறேன் என்று அர்த்தமா?) // என்று கேட்கின்ற அளவுக்கு வெளிவந்த விவகாரம் …!.

 2. புதியவன் சொல்கிறார்:

  நம்ம இந்திய நீதித்துறையை யார்தான் மெச்சுவார்கள். ஊழலுக்குத் துணைபோகும் அதிகாரிகள், அரசியல்வாதிகள்… குற்றவாளிகளுக்குத் துணை போகும் நீதிமன்றங்கள் (சட்டத்தைக் காரணம் காட்டி). நம்ம சட்டத்துல உள்ள பெரிய பிரச்சனை, குற்றவாளி என்றால், மொத்த குடும்பத்தையும் தன் பிடியில் கொண்டுவரணும். இந்தியாவில் ஊழல் செய்பவர்கள் தங்கள் குடும்பத்துக்காகத்தான் ஊழல் செய்கிறார்கள். மேலை நாட்டில் குடும்பம் என்பது கணவன் மனைவி மட்டும்தான். விஜய் மால்யா ஓடினார் என்றால், சித்தார்த்தை திகாரில் போட்டு பாத்ரூம் தண்டனை கொடுத்தால் ஆட்டமேட்டிக்கா விஜய் மால்யா ஓடி வருவார். இந்த ரவி பார்த்தசாரதின்னா, மிச்சமுள்ள அவர் குடும்பம், அதனுடைய சொத்துக்கள்மீது கை வைக்கணும்.

  பொதுவா குமுதம் ராஜ் தாக்ரே மாட்டிக்கொண்டதால் கட்டுரையை வெளியிட்டிருக்கு. இல்லைனா கட்டுரை வந்திருக்காது (நேரடி பாஜகவாக இருந்தால்).

  ஆனா 5 ரூபாய் லஞ்சம் வாங்கினாலோ, ஹெல்மெட் போடவில்லையென்றாலோ போச்சு.. சட்டம் உடனடியாக தன் கடமையைச் செய்யும்.

 3. Prabhu Ram சொல்கிறார்:

  பாஜக ஆட்சி செய்யும்/ஸெய்த மாநிலங்களில்
  நடைபெற்ற பிரசித்தி பெற்ற ஊழல்கள் எல்லாம்
  பாதாளத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டன.

  மத்திய பிரதேசத்தில் பாஜக முதலமைச்சர் சிவ்ராஜ் சிங்
  சௌஹானின் “வியாபம்” ஊழல் விசாரணை
  எந்த அளவில் இருக்கிறது ? ஏன் முன்னேற்றம்
  எதுவும் இல்லை ?

  குஜராத்திலேயே கூட பல ஊழல் புகார்கள்
  வெளியே பேசப்பட முடியாத அளவிற்கு
  நீதிமன்ற தடை பெறப்பட்டு வாய்ப்பூட்டு
  போடப்பட்டிருக்கிறது.

  ஊழலற்ற ஆட்சி தருவோம் என்று சொல்லி விட்டு
  வந்தவர்களின் ஆட்சி, அதற்கு முந்தைய ஆட்சியை
  விட எந்த விதத்தில் உசத்தி ?
  முந்தைய ஆட்சியாவது வெறும் பணக்கொள்ளையோடு
  நின்றது. மாநிலத்திற்கு மாநிலம் பாஜகவைச் சேர்ந்த
  சாமியார்கள் எல்லாம் கற்பழிப்பில் கை தேர்ந்தவர்களாக
  இருக்கிறார்களே ?
  இது அவர்களின் கூடுதல் தகுதியோ ?
  நித்தியானந்தா கூட பாஜகவில் சேர்ந்துவிட்டதாக
  கேள்வி – நிஜந்தானா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.