சிங்கப்பூரில் நடந்த ஒரு நல்ல இசை நிகழ்ச்சி….


சிங்கப்பூர் சுற்றுலாத் துறையினரின் சார்பில் கடந்த
ஜூலை 19-ந்தேதியன்று ஒரு அருமையான
தமிழ்த் திரை இசை நிகழ்ச்சி
சிங்கப்பூரில் நடைபெற்றிருக்கிறது.

அதிகாரபூர்வமான வீடியோ, இன்னும் வெளியாகவில்லை.
தேடியதில், இதற்குள் தனிப்பட்ட நபர்கள் சிலர் எடுத்து,
துண்டு துண்டாக வெளியிட்டுள்ள சில காணொளிக் காட்சிகள்
கிடைத்தன. மிகவும் தொலைவிலிருந்து செல்போனில்
எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்…

நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு நிச்சயமாக இது இல்லை.
ஆனால், நான் தேடியெடுத்த லிங்க்குகள்
வீணாகப்போகாமல், விரும்புபவர்களுக்கு
பயன்படட்டுமே என்று இங்கே பதிந்திருக்கிறேன்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை
பரவாயில்லை என்று நினைக்கும் நண்பர்கள் – இதைப்பார்த்து
ரசிக்கலாம்.

ஒரிஜினல் வீடியோவிற்காக காத்திருப்போம்…!!!

————————————

தளபதி –

விழியே கதை எழுது –


அகரம் இப்போ –

அதிசய ராகம் –

அந்தி மழை பொழிகிறது –

இதோ, இதோ என் பல்லவி –


இளைய நிலா –

இசைக்கருவிகளோடு – இறுதி நிகழ்ச்சி…!!!

.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சிங்கப்பூரில் நடந்த ஒரு நல்ல இசை நிகழ்ச்சி….

 1. D. Chandramouli சொல்கிறார்:

  While the pics are not clear, the songs could be heard with clarity. All these songs are liked by me, more so with live orchestra. Amazing how the music directors had dedicated themselves to create such wonderful numbers. If we look back,over five 0r six decades, it can be seen that many songs which we had enjoyed were based some way or the other on carnatic ragas. Btw, any idea who all in the past must have created beautiful raga melodies and how we could ever pay them back our gratitude?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   சந்திரமௌலி,

   நீங்கள் சொல்வது உண்மை. பழைய பாடல்களின்
   மகத்துவமே தனி தான். பல பாடல்களை
   இன்றும் நாம் மறக்கவில்லை. இசைக்கருவிகள்
   இயங்கத்துவங்கியவுடனேயே, இந்த பாடல் என்று
   தன்னாலேயே நினைவிற்கு வந்துவிடும். கூடவே பாடத்
   துவங்கி விடுவோம்…(மனதிற்குள் தான்…!!!)

   ஆனால், இன்றைய பாடல்கள் –
   மிகச் சிலவற்றைத் தவிர –
   மற்றவை யெல்லாம் சத்தத்திற்கு தான்
   முக்கியத்துவம் கொடுக்கின்றன.

   காலம் மாறும்போது ரசனைகளும் மாறுகின்றன.
   இன்றைய தலைமுறை – சத்தத்தையும், வேகத்தையும் தான்
   விரும்புகின்றன. அவர்கள் ரசனையையும் நாம் ஏற்றுக் கொள்ள
   வேண்டியது தான்… நமக்கு ஒத்துப்போகவில்லையென்றால் –
   ஒதுங்கிப் போக வேண்டியது தான்…!!!

   நல்ல வேளையாக விஞ்ஞானம் பழையதை
   நமக்குப் பாதுகாத்து கொடுத்திருக்கிறது.
   நமக்குப் பிடித்ததை தொடர்ந்து அனுபவிக்க
   வழி செய்து தந்திருக்கிறது.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.