திரு.ஸ்டாலின் ரகசியமாக கலந்துகொண்ட திருமணம்…!!!அண்மையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள்
ஒரு பிரம்மாண்ட “பெரிய்ய்ய” இடத்து பள பளா
திருமணத்தில் கலந்து கொண்டார்…. ஆனால் தான்
சம்பந்தப்பட்ட புகைப்படங்களோ, செய்திகளோ – மீடியாவில்
வெளியாகக் கூடாது என்று கண்டிப்பான உத்திரவு இருந்தது.

காரணம் – சிலருடனான தன் நெருக்கம்
வெளியே தெரியக்கூடாது என்பதாக இருக்கலாம்.

சாமியார்கள் கட்சி என்று பாஜகவை குறைசொல்வதெல்லாம் –
சும்மா- அரசியலுக்கான கதை-வாதங்கள்.
இவர்கள் மட்டும் குறைந்தவர்களா என்ன …?
இவர்கள் குடும்பம் போகாத கோவில்களா…
பார்க்காத சாமியார்களா… ஜோசியர்களா ..!!!

ஆனால், இந்த இன்டர்னெட் யுகத்தில், இதையெல்லாம்
ரகசியமாக வைத்துக்கொள்ள முடியுமா…?

எனக்கு கிடைத்த பள பளா கல்யாண விசேஷங்களை
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…. கீழே –

—————————————

( 3000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான ஹாலில்
இந்த நிகழ்ச்சிக்காக ஏ.சி.வசதி செய்யப்பட்டிருக்கிறது …!!!)

(அவ்வளவு நெருக்கம்….! வெளியே தெரியாத நெருக்கம்…!!! )
..

..

(திரு.ஸ்டாலின் தன் நெருங்கிய சகாக்களுடன் அமர்ந்திருக்க,
பின்னால்,  பல்லக்கில்  மணப்பெண்ணை தூக்கி வருகிறார்கள்..!!! )


(முக்கிய விருந்தினர்கள் மன்னித்துக் கொள்ளவும்..
இந்த தடவை வெள்ளித்தட்டில் தான் முடிந்தது….
அடுத்த நிகழ்ச்சியில் அவசியம் தங்கத்தட்டில்  தான் விருந்து…!!!)


……..

தமிழகத்தின் சரித்திரத்திலேயே முதல் முதலாக,
விசேஷ சீன் செட்டுகளுடன் – முகேஷ் அம்பானிக்கு சமமாக…!!!)

—————————————

ஒரு சின்ன சந்தேகம்…

– வருமான வரித்துறைக்கும், அமலாக்கப்பிரிவுக்கும் –
மேல்மருவத்தூர் என்கிற “வளம் கொழிக்கும் இடம்”
ஒன்று இந்த வறண்ட தமிழ்நாட்டில் – இருப்பதே
தெரியாதோ… 🙂 🙂 🙂

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to திரு.ஸ்டாலின் ரகசியமாக கலந்துகொண்ட திருமணம்…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  உங்களுக்கு முக்கியமான படங்கள் வரலை போலிருக்கு.

  சிவப்புச் சட்டை, சிவப்பு புடவையுடன் ஸ்டாலின் கனிமொழி பங்காரு அடிகளாருடன் மேடையில் அமர்வது, பேசுவது இதெல்லாம் இந்த இடுகைல காணோமே.

  நல்லவேளை டாய்லட் படம்லாம் எடுத்துப்போடலை. இருந்திருந்தால், அங்கேயும் தங்க ரேக்குகளால் அலங்கரிக்கப்பட்டது தெரிந்திருக்கும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   1) இந்த திருமண விழாவிற்கு
   திருமதி கனிமொழி வரவில்லை
   என்றே தெரிகிறது.

   2) சிவப்பு சட்டையுடன் ஸ்டாலினும்,
   சிவப்பு புடவையுடன் கனிமொழியும்
   தவத்திரு வுடன் காட்சியளிக்கும்
   புகைப்படமும் எனக்கு கிடைத்தது…
   ஆனால், அது சந்தேகத்திற்குரியது.
   போட்டோ ஷாப் செய்யப்பட்டிருக்கிறது
   என்று தோன்றுகிறது.

   அதனால் தான் அவற்றை போடவில்லை.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … // ஒரு சின்ன சந்தேகம்…
  – வருமான வரித்துறைக்கும், அமலாக்கப்பிரிவுக்கும் –
  மேல்மருவத்தூர் என்கிற “வளம் கொழிக்கும் இடம்”
  ஒன்று இந்த வறண்ட தமிழ்நாட்டில் – இருப்பதே
  தெரியாதோ… // ….. முன்பு அதாவது 2010 ல் “வளம் கொழிக்கும் இடம்”தெரிந்து — , இவர் கல்லுரி வளாகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின்போது, 100 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம், மற்றும் 12 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது இந்தச் செய்தியை பதிவு செய்யச் சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது பங்காருவின் ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.என்பதும் செய்தியாக வந்தது .. அடுத்து …

  2013 ஜனவரியில் சிபிஐ சோதனையயும் நடந்தது . மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரிக்கு ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கான அனுமதி பெறுகையில் பிற மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவர்களை, ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியது போல காட்டியதற்கு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. என்று செய்திகள் வெளிவந்தது … அடுத்து

  மேல்மருவத்தூர் பல் மருத்துவக் கல்லூரியில், முதுகலைப் படிப்பு தொடங்குவதற்காக, அகில இந்திய பல்மருத்துவக் கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முருகேசன் என்பவரைச் சந்தித்து, 25 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தபோது, சிபிஐ போலீசார் கையும் களவுமாக பிடித்தார்கள் .என்பதும் செய்தியாக வந்தது …

  எல்லாம் நடந்ததது ஒரு காலம் — யோக்கியர்கள் ஆளும் போது மீண்டும் வரும் என்று நம்புவோமாக …? பிரமாண்டமான இது போன்ற விழாக்களில் கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் அழைக்கப்பட்டு தனித்துவமாக கவனிக்கப்படுவது எல்லாம் எதற்கு என்று அனைவரும் அறிந்தது தானே …? பழைய சென்னைக்கு செல்லும் நெடுஞ்சாலையையே தனதாக்கி கொண்டவர்கள் செவ்வாடை அணிந்த அம்மாக்கள் …

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   செல்வராஜன்,

   நாம் இங்கு எழுதுவது அனைத்தையும், பாஜக அரசின்
   சீரியஸ் தலைமை வக்காலத்தார் திருவாளர் வெங்கட்
   படித்துக் கொண்டிருக்கிறார்.

   அவர் இதற்கு விளக்கம் கொடுப்பார் என்று நம்பி
   காத்திருப்போமாக.

   ஏற்கெனவே மற்றொரு இடுகையில் அவரது
   விளக்கங்களுக்காக வழி மேல் விழி வைத்து
   காத்திருக்கிறோம்.

   திருவாளர் வெங்கட்,
   நீங்கள் இப்படி பாராமுகமாக இருப்பது நியாயமல்ல.
   ஒன்றுமறியாத பாமரர்களான இந்த தளத்து
   வாசகர்களையும், என்னையும் – இப்படி காக்க வைப்பது
   தர்மமல்ல….!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. natchander சொல்கிறார்:

  I earnestly hope income tax authorities
  Take note of this arrogant expensive wedding, ,

  • புதியவன் சொல்கிறார்:

   இந்திய ஜனநாயகத்தில் இந்த மாதிரி நம்பிக்கைகளை வைத்துக்கொள்ள வேண்டாம். கடைசியில், எல்லாச் செலவுகளையும் ஒவ்வொரு ‘அம்மா பஜனை குழு’ எடுத்துச் செய்ததாக கணக்கு காண்பிப்பார்கள். வெள்ளித் தட்டு வாடகைக்கு என்று கணக்கு காட்டுவார்கள். அதைத் தவிர, தாங்கள் ‘வன்னியர்’ தலைவர் என்பதால் இந்தக் காழ்ப்புணர்ச்சி என்று அரசியல் கட்சிகள் ஆதரவுக்கு வரும். ‘வன்னியர்’ என்ற லேபிளால், பெரிய அரசியல் கட்சிகள் அமைதியாக இருக்கும்.

   நாம் மட்டும், அரசின் சட்டங்களுக்கு அடங்கி, 10 ரூபாய்க்கும் கணக்குக் காண்பித்து நடுங்கிக்கொண்டிருப்போம்.

   பாருங்க… ப.சி. கேஸ்ல, ஒரு மணிக்கு 1 லட்சம் வாங்கறவங்க பலபேர் வாதாடறாங்க. இதுக்கு எப்படி இவ்வளவு துட்டு வந்தது என்று யாராவது கேட்க முடியுமா? இல்லை, உள்ளூர்லயே பேசத் தெரியாத ராகுல் எப்படி இங்கிலாந்தில் தொழிலதிபர் ஆனார், இவ்வளவு தொழில்களுக்குச் சொந்தக் காரரானார் என்று யோசிக்க முடியுமா? 20 ரூபாய் லஞ்சம் வாங்கியவர் கைது, சிறையில் அடைப்பு என்றால் நாம் வாய் பிளந்து அடடா எவ்வளவு அருமையா சட்டத்தை பயன்படுத்தி ‘ஊழல் வாதிகளை’ களையெடுக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருப்போம்.

 4. venkat சொல்கிறார்:

  what do i say here? i have nothing to contribute…

  ………..
  …………….
  …………….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வெங்கட்,

   போலி சாமியார்களையும்,
   ஆஷாடபூதி கட்சியையும்
   ஆதரிக்க நீங்கள் செய்யும்
   அதி தீவிர முயற்சிகள்,
   உங்களுக்கு இந்த விஷயத்தில்
   இருக்கும் தீவிர அக்கறை, ஈடுபாடு,
   நேரம், சக்தி, உழைப்பு – ஆகியவற்றை
   வெளிப்படுத்துகிறது… உங்களது இந்த
   அசாத்திய திறமை மெச்சத்தகுந்தது.

   நேற்றைய தினம் மாண்புமிகு மத்திய அமைச்சர்
   சொன்னது போல், அவரவர் தாய்மொழியை வளர்க்க
   ஆனது அனைத்தையும் செய்ய வேண்டும் அல்லவா…?

   அதில் ஒரு முயற்சியாக, உங்களை தமிழில் எழுத
   வைக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

   இத்தனை ஆர்வம், சக்தி, உழைப்பு உள்ள நீங்கள்
   இதுவரை உங்களது தாய்மொழியில் எழுத
   முயற்சி மேற்கொள்ளாதது ஏன்…? உங்களுக்கு
   வேண்டியவர்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டும்…
   ஆனால், அதற்காக கொஞ்சம் கூட
   சிரமப்பட மாட்டேன் என்றால் எப்படி சார்…?
   உங்களுக்கே இது நியாயமாகத் தோன்றுகிறதா…?

   பாஜகவையும், போலி சாமியார்களையும்
   ஆதரித்து எழுத நீங்கள் எடுக்கும் முயற்சிகளில்
   ஒரு சிறு துளியாவது தமிழில் எழுதவும்
   எடுக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
   உங்களது அருமையான சிந்தனை முத்துக்கள்,
   அதிக அளவு நண்பர்களைச் சேர்ந்தடையவும்
   அது உதவும்.

   எனவே, இனியாவது உங்கள் பின்னூட்டங்களை
   தமிழில் பார்க்க வேண்டும் என்கிற ஆவலில்,
   உங்களிடமிருந்து தமிழில் வரும்
   பின்னூட்டங்களை மட்டுமே இங்கு பிரசுரம்
   செய்வது என்று உத்தேசித்திருக்கிறேன்.

   எனவே, தமிழில் பின்னூட்டங்கள் எழுத
   உடனடியாகத் துவங்குவீர்கள் என்று
   நம்புகிறேன். உங்களுக்கு வேண்டியவர்களை
   காக்க எவ்வளவோ செய்யும் நீங்கள்
   உங்கள் தாய் மொழிக்காக, தமிழுக்காக,
   இதைக்கூடவா செய்ய மாட்டீர்கள்…!!!

   .
   – வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. Prabhu Ram சொல்கிறார்:

  அருமையான வேலை செய்தீர்கள் சார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.