ஏன் இந்த பந்தா…? எத்தனை கோடி டார்கெட்..???


“காவேரி கூக்குரல் ” –
கூக்குரல் என்கிற சொல்லை கேட்கவே
அவலமாக இருக்கிறது… அருவருப்பாக இருக்கிறது…

ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ்
`காவேரி கூக்குரல்’ என்ற பெயரில் ஓர் இயக்கத்தைத்
தொடங்கியிருக்கிறார். அந்த இயக்கம் குறித்து பிரசாரம்
செய்வதற்காக பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கர்நாடகாவின் தலைக்காவிரியில் தொடங்கி திருவாரூரில்
முடியும் ( உண்மையில் இங்கே முடியவில்லை –
பப்ளிசிடி போதாதே…நகரங்களை “கவர்” செய்ய வேண்டுமே…
இதற்குப் பிறகு காவிரிக்கு சம்பந்தம் இல்லாத புதுச்சேரிக்கும்,
சென்னைக்கும் கூட ஊர்வலம் போகிறார்…!!!)

– இந்தப் பயணத்துக்கு ஜக்கி வாசுதேவ் பயன்படுத்துவது
ஹோண்டா VFR 1200X எனும் விலை உயர்ந்த பைக்.
இந்த பைக்கின் விற்பனை இந்தியாவில் கிடையாது.
இறக்குமதி செய்தே பயன்படுத்துகிறார்.

இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை
ரூ.19 லட்சம். ஆன்ரோடு விலை ரூ.25 லட்சத்துக்குள்
இருக்கலாம் – என்கிறது செய்தி… !!!
( இத்தனை பணம் இவருக்கு எப்படி வந்தது…?
– என்கிற கேள்வியே யாருக்கும் எழாதே –
இத்தனை இளிச்சவாய் சோதரர்கள் நம்மிடம் இருக்கும்போது…!!!)

———-

புதிய பிசினஸ்…
காவிரியின் கரையில் 242 கோடி மரம் நடப்போகிறார்களாம்..
மரத்திற்கு 42 ரூபாய் –
இவரது அடியா(ட்..? )ர் களுக்கும் – இவருக்கும்
அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொழில், வருமானத்திற்கு வழி…

முதலில், இதுவரை இவர் நட்டதாகச் சொல்லும்
லட்சக்கணக்கான (கோடிக்கணக்கான…? ) மரங்கள்
இருக்கும் இடத்தை காட்டினால் தேவலை.

ஆனால், நாம் சொல்வதை யார் கேட்கப்போகிறார்கள்.
மயக்கம்… மதிமயக்கம்…!!!

ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் –
ஏமாற்றுபவர்களுக்கு என்ன குறைச்சல் … ???

வாழ்க வாழ்க வாழ்கவே –
நமது இளிச்சவாய் சமுதாயம் வாழ்கவே…!!!

.
——————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to ஏன் இந்த பந்தா…? எத்தனை கோடி டார்கெட்..???

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! // ஜக்கி வாசுதேவின் நதிகளை மீட்கும் திட்டத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு
  Read more at: https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-supports-isha-foundation-s-rally-for-rivers-361921.html

  // இவரைப்போல் பலரும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள் .! அவரோடு பைக்குகளில் பயணிப்பவர்கள் எல்லாம் விவசாயிகள் என்றோ — சாதாரண நதிகள் மீட்பு என்பதற்காக பாடுபடுகிற மக்கள் என்றோ நினைத்தால் அது நமது தவறு .. !

  ஜக்கி வாசுதேவ் வெள்ளியங்கிரி மலை மற்றும் வனப்பகுதிகள், யானை வழித்தடங்களை அழித்து ஆசிரமங்களை கட்டி இருக்கிறார் என்பது நீண்டகால குற்றச்சாட்டு என்பதோடு வழக்குகளும் நடந்துக்க கொண்டு இருப்பதாக செய்திகள் … !!

  முன்பு கலைஞரின் கோபாலபுரம் வீட்டுக்கே சென்று அவருடைய ஆசிர்வாதத்தோடு இவர் நட்ட மரக்கன்றுகள் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பது அந்த ” ஆதி யோகி சிவனுக்கே ” வெளிச்சம் … !! இருக்கட்டும் … இருந்தாலும் .. அவருக்கு ஆதரவான பலர் இன்றைய இடுகை பற்றி கருத்து பதிவிட வருபவர்களுக்காக ஒரு முந்தைய இடுகை — முன் பார்வைக்காக : —

  // “நீங்கள் ஜக்கி வாசுதேவ் பற்றி எழுதியது தவறே…”
  Posted on நவம்பர் 19, 2016 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2016/11/19/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%aa/

 2. Prabhu Ram சொல்கிறார்:

  கமலும் ஜக்கியும் ஒரே இனம்… ஏமாற்றும் இனம்.
  எனவே அவர்கள் இருவரும் ஒருவரையொருவர்
  ஆதரிப்பது இயற்கையே.

  • Prabhu Ram சொல்கிறார்:

   இந்த ஆள் முதலில் இதுவரை நட்ட மரங்களுக்கு
   கணக்கு கொடுக்கட்டும். அவை இருக்கும் இடத்தை
   காட்டட்டும்.

   • Prabhu Ram சொல்கிறார்:

    வனத்தை அழித்து, மரங்களை வெட்டியகற்றி விட்டு
    யானை வழித்தடத்தில் ஆசிரமம் கட்டி பிசினஸ் செய்பவர்களுக்கு
    திடீரென்று காவிரி மீது அக்கறை பிறந்திருப்பதாகச் சொல்வதை
    நம்ப முடியவில்லை.
    இது ஒரு பித்தலாட்டம்.

 3. Subramanian சொல்கிறார்:

  இப்போதே, காவிரி டெல்டாவில் விவசாயிகளுக்கு
  ஆண்டிற்கு 4-5 மாதங்கள் தான் வேலை இருக்கிறது/கிடைக்கிறது.
  நெல் விளையும்போதே இந்த நிலை.
  இவர்கள் நெல்லை விட்டு விட்டு, மரத்தை நட்டு விட்டார்கள்
  என்றால் -சுத்தம். ஒரு வேலையும் இல்லை.
  விவசாயிகளை வெட்டிகளாக்கி சோம்பேறிகளாக்க,
  அவர்களது செயல்திறனைக் குறைத்து பட்டினி போட ஒரு திட்டமா ?

  கர்நாடகாவில் எந்த விவசாயியும் பயிரைக் கைவிட்டு,
  மரம் நடப்போக மாட்டான். இவர் ஏமாற்றுவது தமிழக விவசாயிகளை
  மட்டும் தான். நெல் பயிரிடுவதை குறைத்துக் கொண்டால். சோத்துக்கு
  அரிசிக்கு எங்கே போவது ? ஆந்திராவுக்கோ பஞ்சாபுக்கோ
  படையெடுக்க வேண்டுமா ?
  இவர்களை டெல்டா பக்கமே வரவிடக்கூடாது. இவர் தனது
  அடியாட்களுக்கு வேலை தருவதற்காகவே இந்த திட்டத்தை
  தொடங்கி இருக்கிறார்.

 4. புவியரசு சொல்கிறார்:

  40-50 ஆண்டுகளாக நாம் காவிரி நீருக்காக கர்நாடகத்துடன்
  போராடினோம். அப்போதெல்லாம் இந்த கன்னடத்துக்காரர்
  எங்கே போயிருந்தார் ?
  இப்போது காவிரி ஆணையம் தீர்ப்பு தந்த பிறகு திருட்டுத்தனமாக
  உள்ளே நுழைகிறார். இவருக்கு வேறு ஏதோ ulterior motive
  இருக்கிறது. நெல் பாசனத்தை காடுகளாக மாற்ற தீர்ப்பாணையம்
  அனுமதி அளிக்கிறதா ? இவர் யாரை ஏமாற்றப் பார்க்கிறார் ?
  இதனால் விவ்சாயிகளின் வேலை நாட்கள் பறிபோகும்.
  விவசாயிகளின் சோற்றுக்கே நெல் இல்லாத நிலை ஏற்படும்.
  வருமானம் பாதிக்கப்படும்.
  காவிரி நீரில் நமது உரிமை பாதிக்கப்படும்.
  அந்த சாக்கை வைத்து கர்நாடகா இப்போது வருகின்ற நீரையும்
  தடுக்க முயற்சிக்கும்.
  வேண்டாத போராட்டங்களுக்கு இடம் கொடுக்கும் முயற்சி இது.
  முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

 5. venkat சொல்கிறார்:

  Sir,
  have you ever been to Isha center at coimbatore? I visited that place two weeks ago with open mind and curiosity. I spoke to my driver and few other locals. first of all, I found isha center to be very green with lots of trees. One local told me that at least 25 villages around isha are more or less adopted by Isha that they good education, medical facility etc., volunteers visit those villages and take care of their medical needs. Local kids go to Isha school free of cost. One could argue that these are done to keep the local happy so that they won’t revolt!

  When people are happy accepting him – unless they see some value in his teaching they will not fall for it, what is your problem? why are you taking an extreme stand when you know that he has millions or followers. Is it correct for you to hurt their feeling or think that all those are idiots?

  how different is this compared to an Hindu saying Islam is bad or muslim say jesus is a cheat? you seem to preach one thing in your blogs but applying a different yard stick for yourself. isn’t it hypocrisy.

  I am neither a modi bakht or Jakki Bakht.

  THINK! THINK! be sensitive to people faith. you have no right to call someone a cheat unless you have first hand evidence to say so!

  my humble opinion.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   .

   அய்யா வெங்கட்,

   முதலில், கண்மூடி விசுவாசிகளுடன்
   விவாதத்தில் இறங்கி என் நேரத்தையும்,
   சக்தியையும் வீணாக்க வேண்டாமென்று
   தான் நினைத்தேன்.

   நீங்கள் வேண்டுமானால், இப்போது தான்
   கோவைக்கு போய் இவரைப்பற்றி,
   கார் டிரைவர் மூலமாகவும், கடைக்காரர்கள்
   மூலமாகவும் தெரிந்து கொண்டிருக்கலாம்.

   இவர் விஷயத்தில் எனக்கு ஏற்கெனவே
   எல்லாவித முன் அனுபவங்களும் உண்டு.
   நான் இந்த விஷயத்தில் நிறைய
   அனுபவப்பட்டு, ஆராய்ச்சிகள் செய்து,
   ஏற்கெனவே 4-5 வருடங்களுக்கு முன்னர் இந்த
   வலைத்தளத்தில் விவரமாக எழுதி இருக்கிறேன்.
   உங்களுக்கு தேவையான விளக்கங்கங்கள்
   அங்கே கிடைக்கும்.

   உங்களுக்கு நிறைய நேரம் இருப்பது தெரிகிறது.
   கூகுள் அறிவு வேறு இருக்கிறது…!!!
   எனவே, பழைய இடுகைகளை தேடிக் கண்டுபிடித்து
   படித்து, இந்த போலி’யைப்பற்றிய அறிவை
   (அபி)விருத்தி செய்து கொள்ளவும்.

   மேலும், உங்களுக்கு நிறைய நேரமும்,
   இந்த போலி’யின் மீது ஆர்வமும்
   இருப்பதால், கீழ்க்கண்ட விவரங்களை
   கண்டு பிடித்து தெரியப்படுத்துங்களேன்…
   எனக்கும், மற்ற வாசக நண்பர்களுக்கும்
   உதவியாக இருக்கும்.

   1) மரம் நடும் பணியை
   இவர் எப்போது /எத்தனை வருடங்களுக்கு
   முன்னர் துவக்கினார்…? இதுவரை எத்தனை
   மரங்கள் நட்டிருக்கிறார்…?

   2) அவற்றில் எவ்வளவு இன்னும் உயிரோடு
   பிழைத்திருக்கிறது…?

   3) அதில் தமிழ்நாட்டில் எவ்வளவு ?
   மற்ற மாநிலங்களில் எவ்வளவு…?

   4) மரம் நடுவதற்காக இவர் இதுவரை
   பெற்ற நன்கொடை எத்தனை கோடி ரூபாய்..?

   5) அதில், மாநில, மத்திய அரசுகளிடமிருந்து
   எவ்வளவு ? தனிப்பட்ட நிறுவனங்களிடமிருந்து,
   தனிப்பட்ட நபர்களிடமிருந்து எவ்வளவு…?

   6) இதற்காக இவர் வாங்கிய தொகையிலிருந்து
   நட்ட மரங்களுக்கு ஆன செலவை கழித்து,
   மீதி எத்தனை கோடி இவரிடம் மீதி இருக்கிறது ?

   7) ஒரு மரம் நடுவதற்கு இவர் 50 ரூபாய்
   வாங்குகிறார். அதன் பிறகு நட்ட மரத்தை
   மெயின்டெயின் பண்ணுவதற்கு எவ்வளவு,
   யாரிடம் வாங்குகிறார் என்கிற விவரங்கள்
   வெப்சைட்டில் இல்லை.

   அதனாலென்ன… உங்களுக்கு தான்
   கூகுள் அறிவு இருக்கிறதே…!!!
   அதையும் கண்டுபிடித்து
   விவரமாக எழுதினால், நண்பர்கள் அனைவரும்
   தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

   8) இவர் ஆசிரமத்தை சுற்றியுள்ள
   25 கிராமங்களிலிருந்து பிள்ளைகள் இங்கு வந்து
   இலவசமாக படிக்கிறார்கள் என்று சொல்லி
   இருக்கிறீர்கள். தோராயமாக எவ்வளவு
   பிள்ளைகள் அப்படி படிக்கிறார்கள் என்பதையும்
   தெரிவித்தால், விவரத்தை முழுசாக தெரிந்துகொண்ட
   திருப்தி எங்களுக்கு மட்டுமல்லாமல் –

   உங்களுக்கும் கிடைக்கும்.

   9) 30-40 ஆண்டுகளாக அரும் தொண்டு ஆற்றிவரும்
   ஒரு நபரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
   என்று இப்போது தான் உங்களுக்கு ஆர்வம் வந்ததா ?
   அடடா – உங்கள் வாழ்க்கையையே
   இதுநாள் வரை வேஸ்ட் பண்ணி விட்டீர்களே…!

   10) சிவராத்திரி சமயத்தில் அங்கே போயிருக்கிறீர்களா ?
   எத்தனை பணம் கொடுத்தீர்கள்…?

   கேட்பதற்கு இன்னும் நிறைய விஷயங்கள்
   இருக்கின்றன… எல்லாவற்றையும் ஒரே நேரத்தில்
   வைத்துக் கொள்ள வேண்டாம். இந்த தகவல்களை
   நீங்கள் கண்டுபிடித்து /தெரிந்துகொண்டு எழுதினால்,
   மற்றவற்றையும் கேட்க சவுகரியப்படும்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   பின் குறிப்பு –

   அடுத்து, ஒரு உண்மையான துறவியின்
   பெயரை வைத்துக்கொண்டு காமலீலைகள்
   நடத்திய ஒரு உத்திர பிரதேச அரசியல்-ராஸ்கலைப்
   பற்றி எழுதலாமா என்று யோசிக்கிறேன்…
   உங்கள் வசதி எப்படி ?
   இந்த மாதிரி ஆசாமிகளைத்தான் உங்களுக்கு
   நிறைய பிடிக்கிறதே… நிறைய செய்திகள்
   தேடி வைத்திருப்பீர்களே…
   அவனைப்பற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களை
   தந்தால், என் கட்டுரையில் சேர்த்துக் கொள்ள
   உதவியாக இருக்கும்.

   .

   • venkat சொல்கிறார்:

    I have read your past articles on jakki. no ‘sontha saraku’. They were all cut and past from savukku posts. All the research you are asking me to do, are for you to do. You are the one who is calling someone as cheat! I don’t call him either a saint or a cheat. I am trying to point your arrogance.

    Before you call some one as cheat, you should have know that person close enough to call names! Do you your research and expose him! I will welcome that.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     வெங்கட்,

     How about this….?????????????????

     // அடுத்து, ஒரு உண்மையான துறவியின்
     பெயரை வைத்துக்கொண்டு காமலீலைகள்
     நடத்திய ஒரு உத்திர பிரதேச அரசியல்-ராஸ்கலைப்
     பற்றி எழுதலாமா என்று யோசிக்கிறேன்…
     உங்கள் வசதி எப்படி ?
     இந்த மாதிரி ஆசாமிகளைத்தான் உங்களுக்கு
     நிறைய பிடிக்கிறதே… நிறைய செய்திகள்
     தேடி வைத்திருப்பீர்களே…
     அவனைப்பற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களை
     தந்தால், என் கட்டுரையில் சேர்த்துக் கொள்ள
     உதவியாக இருக்கும்.//

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     Venkat,

     // I am trying to point your arrogance. //

     Instead of being a “Bakt” or “Jaalraa ”
     I am pround to be an Arrogant… WITH SELF RESPECT.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     Venkat,

     // Before you call some one as cheat, you should have know
     that person close enough to call names! //

     If you are that much worried about your Guru,
     go through all my charges and prove that
     they are false.

     Atleast as a first step answer to the points
     I have raised in the above Article and Pinnoottams.
     one by one.

     I know You will Run Away…
     and come back only when I write again something
     about your Favourite BOSSES in future.

 6. venkat சொல்கிறார்:

  I did a simple google to find out what happened to previous trees planted by isha. I found the following link…

  It says, if you enter your tree code, you will know the status of same. Apparently, there is some sort of tracking. how effective, how true, i don’t know!

  https://www.ishaoutreach.org/en/project-greenhands/track-your-tree

 7. புவியரசு சொல்கிறார்:

  வெங்கட் ; இது முட்டாள்தனமான வாதம்.
  பாஜக தான் போலிச் சாமியார்களுக்கு இடம் கொடுக்கிறது;
  வளர்த்து விடுகிறது. கற்பழிப்பாளர்கள், கொலைகாரர்கள்,
  பொறுக்கிகள் எல்லாம் இன்று காவியுடை போட்டுக்கொண்டு
  பாஜகவில் சேர்ந்து விடுகிறார்கள். நீங்கள் இவர்களுக்கு
  வக்காலத்து வாங்குகிறீர்கள்.
  காவிரிமைந்தன் சார் சொல்வவதில் என்ன தவறு ?
  பொதுமக்களிடம் நன்கொடை வாங்கியவன் அதற்கு
  அவசியம் கணக்கு காட்ட வேண்டும்.

  ஒவ்வொரு வருடமும், மரங்கள் நடுவதற்காக இதுவரை
  இவ்வளவு ரூபாய் நன்கொடை வந்திருக்கிறது;
  அதில் இவ்வளவு மரங்கள் நட்டிருக்கிறோம்.
  மீதி இவ்வளவு பணம் இருக்கிறது; எதிர்காலத்தில் இதைக்கொண்டு
  இவ்வளவு மரம் நட இருக்கிறோம் என்று அவர்கள் வாலண்டியராக
  அறிவித்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை ?

  இதில் ஏன் ரகசியம் காக்கிறார்கள் ? இதைக்கேட்டால், நீங்கள்
  ஏன் அவர்களுக்கு ஜால்ரா போடுகிறீர்கள்; ? வக்காலத்து வாங்குகிறீர்கள்;?
  காவிரிமைந்தன் சார் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை
  கொடுங்கள் ; இல்லையேல் மன்னிப்பு கேட்டுக்கொண்டு
  நகர்ந்து போங்கள். இந்த மாதிரி போலிச் சாமியார்களை வளர்த்து விடுவதே
  உங்களைப் போன்றவர்களின் கண்மூடித்தனம் தான்.

 8. Selvarajan சொல்கிறார்:

  அரசு அனுமதியின்றி காட்டை விழுங்கிய ஜக்கி.. சிஏஜி அறிக்கையில் திடுக் தகவல்! …

  https://tamil.oneindia.com/news/tamilnadu/cag-reports-that-isha-foundation-builds-so-many-buildings-without-permission/articlecontent-pf314937-324640.html … இது ஒரு செய்தி ..

  அடுத்து ஒரு செய்தி : சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் சில கேள்விகளை எழுப்பியிருந்தார் .. ஒருசிலர் சமூக தொண்டு என்று கூறிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க சில காரியங்களை செய்வது வாடிக்கையான ஒன்று … ஆனால் அவர்கள் மலைகளையும் –காடுகளில் பல ஏக்கர் இடங்களையும் கபளீகரம் செய்கின்ற மடா முழுங்கி களிடம் நெருங்குவதில்லை . அதைப்பற்றி : —

  ஈஷாவும் காருண்யாவும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? ‘சிறுதுளி’க்கு சில கேள்விகள்… https://www.vikatan.com/news/miscellaneous/60854-isha-and-karunya-university-disturb-nature

  எவன் செய்தாலும் தப்பு — தப்பு தான் — அதை தட்டிக் கேட்க வேண்டிய அரசு இயந்திரமே இந்த வேடதாரிகளிடம் சரணாகதி அடைந்து கிடப்பது தான் — வேதனை …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி செல்வராஜன்.

   ஆனால், இவை எவையும் நண்பர் வெங்கட் போன்றவர்களுக்கு
   போதவில்லையே…!!!

   தெளிவதில்லையே…!!!
   என்றாவது ஒரு நாள் இந்த போலி’யின் முகமூடி தன் செயலாலேயே
   அவிழ்ந்தால் அல்லது இயற்கையாக எதாவது நிகழ்ந்தால் தான்
   பலர் தெளிவடைவர்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 9. Prabhu Ram சொல்கிறார்:

  VEnkat,

  ANSWER the pOInts raised by Mr. Selvarajan.

 10. Prabhu Ram சொல்கிறார்:

  Particularly to reference link no.1:

  https://tamil.oneindia.com/news/tamilnadu/cag-reports-that-isha-foundation-builds-so-many-buildings-without-permission/articlecontent-pf314937-324640.html

  You wanted proof. What more proof you want than CAG<s report ?
  DONT'T RUN ; Answer.

 11. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்…. அந்தக் காலத்தில் தேர்தல் நிதி என்று 1 ரூபாய், 2 ரூபாய் வசூலிச்சதாக அறிவித்து, தேர்தல் கூட்டத்தில் நிதி வழங்குவார்கள். இது வசூலித்த நிதி அல்ல. ஊழல் பணத்தை இந்த மாதிரி கூட்டத்தில் கொடுக்கச் சொல்லிக் கொடுத்து வெள்ளையாக்கும் தந்திரம். இதைச் செய்தது கருணாநிதி.

  42 ரூபாய் எத்தனை பேர் கொடுத்தார்கள், எத்தனை நிதி சேர்ந்தது என்று யாராலும் கணக்குப் பார்க்க முடியாது. பணம் வெண்மையாக மாறிவிடும். இது யாருக்காக, இப்படி சாத்தியம் இருக்கிறதா என்ற கோணத்தில் யோசித்தீர்களா?

  இன்றைக்கு யூடியூப் தளத்தில் இந்த 42 ரூபாய் விளம்பரம் வந்தது. அதைப் பார்த்த பிறகு இப்படி இருக்குமோ என்று தோன்றியது.

 12. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  நண்பர் வெங்கட்’டின் பார்வையில்
  நான் தான் – arrogant – ஆகி விட்டேன்… 🙂 🙂

  இதை தயவுசெய்து நண்பர் வெங்கட்’டுக்கு –
  அவர் ஏற்கிற மாதிரி இருக்கும் நீங்கள் தான்
  புரிய வையுங்களேன்.

  ஆல் தி பெஸ்ட்…!!!

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.