ஜஸ்டிஸ் சந்துரு அவர்களிடம் – (தடு) மாற்றம் ஏன்…?


உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் மாற்றல் உத்திரவை
நியாயப்படுத்தியும், அதை எதிர்ப்பவர்களை குறைகூறியும்
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் திடீரென்று பேட்டி
கொடுத்திருக்கிறார்.

…………

…..

பொதுவாக, நடுநிலையாளர், இடதுசாரி பார்வையுள்ளவர்
என்று கருதப்படும் ஜஸ்டிஸ் சந்துரு அவர்களின் இந்த திடீர்
தடுமாற்றத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த
மாற்றத்தை நியாயப்படுத்துவதோடு மட்டுமல்லாமல்,
அதனை விமரிசிப்பவர்களையும் குறை கூறுகிறார் சந்துரு.

ஆழமாக விவாதத்தில் இறங்காமல், ஒரு சிறிய கேள்வியை
மட்டும் சந்துரு அவர்களின் முன் வைக்கிறோம்.

தலைமைச் செயலகத்தில், முக்கியமான இலாகா பொறுப்பினை
வகித்து திறம்பட பணியாற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி
ஒருவர், அரசியல்வாதி ஒருவருக்கு பிடிக்கவில்லை என்கிற
ஒரே ஒரு காரணத்தால் –
திடீரென்று மண்டபம் அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டால் –

அவரது பதவியை ஒன்றும் குறைக்கவில்லையே.
அவர் சம்பளத்தை ஒன்றும் குறைக்கவில்லையே…
சீனியாரிடியில் ஒன்றும் கை வைக்கவில்லையே…
அவரை வெறுமனே இடம் மாற்றினால், அதில் என்ன தவறு
என்றும் ஜஸ்டிஸ் சந்துரு கேட்பாரா ?

பணிமாற்றம் என்பது ஒரு பனிஷ்மெண்ட்டாக இருக்கக்கூடாது
என்று கூறப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் அவர்
மறந்து விட்டாரா…?

ஜஸ்டிஸ் சந்துரு அவர்களிடம் ஏன் இந்த (தடு)மாற்றம்…?

நீதிமன்ற மாற்றங்களில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை
என்று இவர் இந்த சந்தர்ப்பத்தில் வாலண்டியராக,
உறுதியாக கருத்து கூறுவது ஏன்…?

அவரது விளக்கங்கள் நடுநிலையாகவோ
ஏற்கக்கூடியனவாகவோ இல்லை.. அவரது மனசாட்சியே
கூட – இதனை ஏற்காது என்று சொல்லலாம்.

நாட்டில் பொதுவாழ்வில் இருக்கும் நடுநிலையாளர்கள்,
நேர்மையாளர்கள், வெளிப்படையாக பேசக்கூடியவர்கள் என்று
கருதப்படும் பலரும் ஒவ்வொருவராக விலை போகும்
சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதால் –

இவரும் திடீரென்று (தடு)மாறுவது சந்தேகத்தை தூண்டுகிறது…
வருத்தத்தை தருகிறது.

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ஜஸ்டிஸ் சந்துரு அவர்களிடம் – (தடு) மாற்றம் ஏன்…?

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …! // நீதிமன்றங்களின் தீர்ப்பை கூட போராடியே பெற வேண்டிய சூழல் உள்ளது – நீதியரசர் சந்துரு
  September 03, 2018 // என்று கூறியவர் ..

  // முதலமைச்சர் கருணாநிதி, செத்துப்போன சிதம்பரம் உதயகுமார் குறித்து ஜஸ்டிஸ் கே.சந்துரு அவர்கள் பேட்டி ……!!!
  Posted on மே 9, 2016 by vimarisanam – kavirimainthan // என்கிற இடுகையில் …

  // மாணவர் அமைப்புகள் இதை விடவில்லை.
  எனவே வேறுவழியின்றி என்.எஸ். ராமசாமி தலைமையில்
  விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.

  கடலூரில் விசாரணை நடைபெற்றது.
  எனக்குக் கடலூரில் எந்த லாட்ஜிலும் இடம்தரக் கூடாது
  என அரசு எச்சரித்திருந்ததால் நான் பாண்டிச்சேரியிலிருந்து வந்து சென்றேன்….என்றும் — தொடர்ந்து நடைபெற்ற பல போராட்டங்களில் நான் பங்குபெற்றதால்
  (கருணாநிதி) அரசுக்கு என்மீது கோபம் ஏற்பட்டது. அண்ணாமலைப்
  பல்கலைக்கழகக் கலவரத்திற்கு தீவிரவாத மாணவர்களின் சதியே
  காரணம் எனக் கூறி அரசு என்மீது எஃப்ஐஆர் பதிவுசெய்தது. // என்றும் …

  நீதிக்காக படிக்கும் போதும் — நீதிபதியான பின்னும் பல நேர்மையான தீர்ப்புகளை வழங்கிய ” ஜஸ்டிஸ் சந்துரு ” இன்று : ” எப்படியிருந்த நான் – இப்படியாயிட்டேன் ” என்பதை போல ….?

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கொலீஜியம் செயல்படும் முறைக்கு சந்துரு
  அவர்கள் வக்காலத்து வாங்கி இருப்பது
  வியப்பாக இருக்கிறது.

  வெளியிலிருந்து அவர்களுக்கு வரும் தலையீடுகள்
  பற்றி இவருக்குத் தெரியாதா ? 4 நாட்களுக்கு முன்னர்,
  தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற,
  தற்போதும் பணியாற்றிக்கொண்டிருக்கும் பெண் நீதிபதி
  ஒருவர் கொலீஜியம் செயல்படும் விதத்தை
  வெளிப்படையாக குறை கூறி இருந்ததை சந்துரு
  அவர்கள் பார்க்கவில்லையா ?
  அந்த குற்றச்சாட்டில் இவரது நிலை என்ன ?

  ————————————————–
  //economictimes.indiatimes.com/articleshow/70983735.cms?from=mdr&utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
  ————

  Another Judge now objects to SC collegium overlooking seniority –

  Justice Banumathi has objected to the decision of recommending
  Himachal HC CJ Ramasubramanian to the Supreme Court,
  overlooking Manipur HC CJ Sudhakar who is senior.
  ————–

  NEW DELHI: The sixth senior most judge of the Supreme Court,
  Justice R Banumathi, has requested Chief Justice of India Ranjan
  Gogoi and members of the SC collegium to respect seniority
  of judges when recommending them for appointment to the
  apex court. In a letter to the CJI, she objected to the SC
  collegium’s decision to appoint Himachal Pradesh HC c
  hief justice V Ramasubramanian to SC overlooking Manipur
  HC CJ Ramalingam Sudhakar, who is senior to the former,
  a source told ET.

  —————————————

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ..

  நல்ல வேளை – இப்படியும் ஒருவர் இருக்கிறார்…!!!

  புதுடெல்லி-

  ‘தேசத் துரோக வழக்குகள் மற்றும் கருத்து சுதந்திரம்’
  என்ற தலைப்பில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
  நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடைபெற்றது.
  இதில் உச்ச நீதி மன்ற நீதிபதி தீபக் குப்தா பேசியதாவது:

  நீதித்துறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது கிடையாது.
  தீர்ப்புகள் தொடர்பான விமர்சனங்கள் குறித்து
  வழக்குகளை தொடர்ந்தால் நீதிமன்றத்தில் வேறு
  எந்த வழக்கு விசாரணையும் நடைபெறாது. என்னைப்
  பொறுத்தவரை நீதித் துறையில் விமர்சனங்களை
  வரவேற்கிறேன்.

  அரசு, நீதித்துறை, ராணுவத்தை விமர்சிப்பதை
  தேசத் துரோகமாகக் கருதக்கூடாது. நாடாளுமன்றம்,
  சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித் துறை, அரசின் இதர
  அமைப்புகளுக்கு எதிரான விமர்சனங்களை
  ஒடுக்க முயன்றால் நமது நாடு சர்வாதிகார
  நாடாகிவிடும். ஜனநாயக நாடாக இருக்க முடியாது.

  விருப்பு, வெறுப்பு, அச்சமின்றி பொதுமக்கள் தங்கள்
  கருத்துகளை எடுத்துரைக்க முழு சுதந்திரம்
  வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த உலகம்
  மக்கள் வாழ்வதற்கு இன்னும் உகந்ததாக இருக்கும்.

  இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா பேசினார்.

  (https://www.hindutamil.in/news/india/514755-deepak-gupta-speech.html)

  ..

 4. Prabhu Ram சொல்கிறார்:

  ஜனநாயகத்தின் 4 தூண்கள் முதலில் 3 தூண்களாகின.
  பிறகு 2 தூண்களாகின. இப்போது 2 தூண்களும்
  ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து ஒரே தூணாகி விட்டது.
  இந்திய ஜனநாயகம் இப்போது ஒரே தூணில் நின்று கொண்டிருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.