7-D வீடியோ … இது சாத்தியமா…?


நண்பர் ஒருவர் திகைப்பூட்டும் காட்சிகளுடன்,
ஒரு காணொளியை அனுப்பி வைத்திருக்கிறார்…

இப்படி ஒரு காட்சியை, அதற்கான
விசேஷ கண்ணாடிகள் (3-D -க்கு உள்ளது போல்)
எதுவும் இல்லாமல், திரையரங்குகளில்
பார்ப்பது /காண்பிப்பது சாத்தியமா…?
இதை எப்படி படமாக்குகிறார்கள்… காட்டுகிறார்கள்..?

உலகில் எந்த நாட்டிலாவது இந்த மாதிரி ஷோ
நடைபெறுகிறதா…? இது குறித்து நண்பர்கள்
யாருக்காவது தெரிந்திருந்தால் சொல்லுங்களேன்…

….

….

.
——————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to 7-D வீடியோ … இது சாத்தியமா…?

  1. sakthi சொல்கிறார்:

    7D – dimensions எனக்கு தெரிய இல்லை.ஐன்ஸ்டைன் முதல் இன்று வரை உள்ள (superstring theory சொல்வது 10-D;Bosonic string theory படி 26 dimensions -universe இல்) Theory படி 26- D  வரை நிரூபணமாகாமல் உண்டு. சினிமாவில் 4/4 DX என காட்டப்படுகிறது. இதை விளக்க நீண்ட கட்டுரை எழுத வேண்டும்.
    சுருக்கமாக………………….
    நாடக மேடைகளில் நாம் பார்த்திருப்போம்,புயல் காற்று வரும்போது மின் விசிறி கொண்டு காற்றை அடிப்பார்கள்.பனி,மேகம் வரும் காட்சிகளில் புகை (Co2+ice/glycol போன்றவற்றைக் கொண்டு) அடிப்பார்கள்.இதை அப்படியே மேடையில் மட்டுமல்லாமல் அரங்கு முழுவதும் செய்தால்……….

    அதைப் போல் 4D/4DX/5D/7D போன்றவற்றில் செய்கிறார்கள். உண்மையில் 3D (length, width, and height or depth; 1-D is a line, 2-D is a square, and 3-D is a cube. ) மட்டும் தற்போது உண்டு. எல்லா இடங்களிலும் 3D உடன் அரங்கில் சில மாற்றங்கள் செய்கிறார்கள். படம் காட்டப்படாத நேரம் 4D/4DX திரைஅரங்கு சென்றால்,எல்லா இடங்களிலும் (CCTV/moving chair /wind /water /smell /bubble / rain/ lightning) போன்று கருவிகள் மறைபொருளாக இருக்கும்.

    படம் ஓடும் போது காற்று வரும் நேரம் காற்று வீசையும்,மழை வரும்போது நீர் துளிகளை முகத்தில் தெளித்தும்,மலர்கள் வரும் போது வாசனையை வெளியிட்டும்,மின்னல் வரும்போது மின் விளக்குகள் மூலம் மின்னலை ஏற்படுத்தியும் நம்மை அந்த இயற்கை நிலைக்கு கொண்டு போவார்கள். அத்துடன் இருக்கைகள் எல்லா பக்கமும் நகரக் கூடியதாக இருக்கும்.விபத்து சமயம் இருக்கை வேகமாக நகர்ந்து நாமே விபத்தில் சிக்கியது போன்ற நிலை எற்பட செய்வார்கள்.

    இதுவே 4 D/4DX என எல்லா dimension இலும் செய்வார்கள்.3D + கருவிகள் பொருட்கள் கொண்டு நம்மை அந்த சினிமாக் காட்சியில் இருக்கும் நிலைக்கு அழைத்து செல்வார்கள்.கூடவே அதிக பணமும் அறவிடுவார்கள்.
    (இந்த தளத்தில் ஏற்கனவே வந்த துபாய் செய்தியையும் படிக்கலாம்.)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.