இதைவிட பல்லாயிரக்கணக்கான மடங்கு துல்லியம் தேவைப்படுகிறது… சாதனை…. ??? !!!துல்லியத்திற்கான உதாரணம் –
ஒரு காணொளி கீழே…

சந்திராயன் -2 நாளை அதிகாலையில் நிலவின்
இருண்ட பக்கத்தில் இறங்கும் நிகழ்வை மிக மிக
ஆவலோடு இந்த உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

உலகர்களின் ஆவல் வேறு…
நமது ஆவல் வேறு…

நமது ஆவலில், நமது விஞ்ஞானிகளின்
கடுமையான திட்டமிடல், துல்லியமான முயற்சிகள் –
வெற்றி பெற வேண்டும் என்கிற பிரார்த்த்தனையும்
சேர்ந்து கலந்திருக்கிறது…

முயற்சி செய்வது தான் நம் கரங்களில் இருக்கிறது.
அதன் பலனை, முடிவை – தீர்மானிப்பது நாமல்ல.
எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெற,
இறையருளும் தேவைப்படுகிறது…

அந்த இறையை வேண்டுவோம்…
இந்தியாவின் முயற்சி வெற்றி பெற வேண்டும்…
மனித குலத்திற்கு, நம் நாட்டின் மூலமாக பல
புதிய செய்திகளும், வளர்ச்சிக்கான வழிமுறைகளும்
கிடைக்க வேண்டுமென்று…!!!

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இதைவிட பல்லாயிரக்கணக்கான மடங்கு துல்லியம் தேவைப்படுகிறது… சாதனை…. ??? !!!

 1. Prabhu Ram சொல்கிறார்:

  நமது விஞ்ஞானிகளின் அரிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.
  ஆனால், இதையும் தன்னுடைய சாதனையென்று தம்பட்டமடிக்க
  ஒருவர் அங்கே போய் டேரா போடுகிறாரே; அது தான் எரிச்சலை தருகிறது.
  லைவ் டெலெகாஸ்டில், விஞ்ஞானிளையும், சந்திராயனையும் தவிர
  வேறு மனிதர்கள் எவரையும் முக்கியப்படுத்தக் கூடாது.

 2. D. Chandramouli சொல்கிறார்:

  Every Indian can be proud of our scientists, who with their expertise, would be landing a craft on the moon with meticulous attention to details. Amazing! We pray and keep our fingers crossed for a successful mission!

 3. sakthi சொல்கிறார்:

  35 km x 101 km தொலைவில் இருக்கும் விக்ரமின் வேகத்தை குறைப்பதில் சவால் இருக்கலாம். வெற்றியுடன் தரையிறங்க வாழ்த்துகள்.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  குழந்தை தவழ்ந்து, நிமிர்ந்து, நின்று,
  மெல்ல தத்தித்தத்தி,
  நடக்கத் துவங்கும் வரையில்,
  பலமுறை விழத்தான் செய்கிறது.
  ஆனாலும், தன் முயற்சியை
  கைவிடுவதில்லை…
  நடந்து காட்டுகிறது.. ஓடிக் காட்டுகிறது.

  சந்திரயான்-2 முயற்சி தோல்வி என்று
  யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
  வெற்றிக்கான படிகளில் இதுவும் ஒன்று…
  அவ்வளவு தான்.

  நமது விஞ்ஞானிகளின் முயற்சி
  வீண் போகவில்லை… பல புதிய விஷயங்களை
  தெரிந்துகொள்கிறோம். அவை அடுத்த
  முயற்சிக்கு உதவும்.

  இஸ்ரோ ஊழியர்கள் அனைவருக்கும்
  நமது உளமார்ந்த நன்றிகள். துணிந்து
  அடுத்த முயற்சியில் ஈடுபட வாழ்த்துகள்.

  .
  -காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.