டாக்டர் தமிழிசை – உயர்வும், நகர்வும் … ஓளிந்திருந்தே பார்க்கும் உண்மை என்ன….?முதலில் வாழ்த்து… பின்னர் அரசியல்.

தமிழகத்தைச் சேர்ந்த, தகுதியுள்ள ஒரு பெண்மணிக்கு உயர்
constitutional post – ஆன -ஆளுநர் பதவி கிடைத்திருக்கிறது…
திருமதி தமிழிசை சௌந்திரராஜன் அவர்களுக்கு நமது உளமார்ந்த
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

ஆனால், இதன் பின்னணியில் உள்ள சில விஷயங்கள்
யோசிக்க வைக்கின்றன. திருமதி தமிழிசை – திறமையானவர்,
நல்ல பேச்சாளர், சுறுசுறுப்பாக இயங்குபவர், தொண்டர்களுடன்
இணைந்திருப்பவர், தலைமைக்கு விசுவாசமானவர்….
சரியோ – தவறோ, தயங்காமல், எந்த விஷயமானாலும்,
டாண் டாண் என்று உடனடியாக, அதிரடியாக கருத்து
கூறக்கூடியவர். நமக்குத் தெரிந்து அவர் கட்சித் தலைமையுடன்
நல்ல உறவில் இருப்பவர்.

சாதாரணமாக அரசியலிலிருந்து ஓய்வு பெறும் நிலையில்
இருப்பவர்கள், வயதான அரசியல்வாதிகள் ஆகியோருக்குத் தான்
கவர்னர் பதவி கொடுப்பது வழக்கம்…

கவர்னர் பதவியை பொறுத்தவரையில், திருமதி தமிழிசை
மிகவும் இளையவர். 58 வயது தான் ஆகிறது. துடிதுடிப்பாக
இன்னும் பல வருடங்கள் தீவிர அரசியலில் செயல்படக்கூடிய
நிலையில் இருப்பவர். இன்னும் உயர்ந்த நிலைகளுக்குப் போகும்
வாய்ப்புகள் உள்ளவர்.

இப்போதே அவர் கவர்னர் பதவியில் நியமிக்கப்படுவது அவருக்கு
அரசியலில் “கட்டாய ஓய்வு” கொடுப்பதற்கு சமம்.

அவருக்கு ஏன் இந்த தண்டனை…?
இந்த வயதில் கவர்னர் பதவி…?

தமிழக பாஜகவுக்கு அடுத்த தலைவரை அறிவிக்க வேண்டிய
நேரம் இது. பாஜக தலைமை, திருமதி தமிழிசைக்கும்,
அவரது ஆதரவாளர்களுக்கும் மன வருத்தம் ஏதும் இல்லாமல்,
மாற்று தலைவரை நியமிக்க நினைத்தால், வெகு சுலபமாக
அவரை ஒரு மத்திய இணை அல்லது துணை அமைச்சராக
நியமித்து விட்டால், அவர் தொடர்ந்து தீவிர அரசியலில்
இருப்பதற்கு வசதியாக இருக்கும்.

ஆனால் கவர்னராக நியமிக்கப்பட்ட பிறகு,
அவர் தமிழக அரசியலில் தொடர்ந்து ஈடுபட வாய்ப்பு
சிறிதும் இல்லை.

இந்த காரணத்திற்காகவே, அதாவது அவரை
தமிழக அரசியலிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்
என்பதற்காகவே இந்த நியமனம் இருக்குமோ
என்று தோன்றுகிறது.

பாஜக தலைமை அவரை அமைச்சராக்காமல்
கவர்னராக்கி, தீவிர அரசியலில் இருந்து
இப்படி ஒதுங்க வைப்பது ஏன்…?

ஒருவேளை அடுத்து தமிழக அரசியலில் பாஜக தலைமை
எடுக்கவிருக்கும் முடிவுக்கு, திருமதி தமிழிசை தீவிர தமிழக
அரசியலில் இருப்பது, தடங்கலாக இருக்கும் என்று பாஜக
தலைமைக்கு தோன்றி இருக்குமோ…?

இருக்கலாமென்று தோன்றுகிறது…!!!

அப்படியென்ன தமிழகத்திற்கான அதிரடி முடிவை
பாஜக தலைமை எடுக்கும்…?

யார் வருவதற்காக இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்…?

ஆண்டவனுக்கும், தற்போது பாஜகவை
ஆள்கிறவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் அது.

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…
கட்டாயம் இதன் பின்னர் ஒரு பொருத்தமான காரணம் இருக்கும்.

அடுத்த தபாஜக தலைவர் நியமிக்கப்படும்போது ஒருவேளை –
கொஞ்சம் வெளிச்சம் விழலாம்.

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to டாக்டர் தமிழிசை – உயர்வும், நகர்வும் … ஓளிந்திருந்தே பார்க்கும் உண்மை என்ன….?

 1. புதியவன் சொல்கிறார்:

  ஜாதியைக் குறிப்பிட வேண்டிய தருணம்னு நினைக்கறேன்.

  பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க வாக்கு வருவதற்கு இரண்டு ஜாதிகள்தான் காரணம்னு என் அனுமானம். இரண்டு ஜாதிகளில் ஒன்றினால்தான் பாஜக தமிழகத்தில் வளர்ச்சி அடைய முடியும். பாஜக வளர்ச்சிக்காக வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவரைக் கொண்டுவரும்போது, அது தமிழிசை சாதியைச் சேர்ந்தவர்களை டிஸ்கரேஜ் செய்யக்கூடாது என்பதற்காக தமிழிசைக்கு உயர் பதவி கிடைத்திருக்கிறது என்பது என் அனுமானம். தமிழக பாஜக தலைவர் வரும்போது இது வெட்டவெளிச்சமாகிவிடும்.

  தமிழிசை அவர்களை கவர்னர் ஆக்குவதற்கு வேறு முகாந்திரம் இல்லை. பழம் தின்று கொட்டை போட்ட இல. கணேசனுக்கே அது இன்னும் கொடுக்கப்படவில்லை. தமிழிசை அவர்கள் இல கணேசன் போல் அனுபவம் உள்ளவர் (ஆரம்ப காலத்திலிருந்து) இல்லை என நினைக்கிறேன்.

 2. venkat சொல்கிறார்:

  BJP needs a firebrand leader in TN to lead. They need some one who can polarize voters without mincing words. H raja is the best in that category. This is what they have done in Bengal. Depending on dravidian parties are not going to help. Swamy has been advocating this for a while. Obviosuly she has been elevated to give way. Given the recent role played by TN governor think BJP wants active governor to keep an eye on non bjp states. So it’s all part of clear strategy.

 3. புவியரசு சொல்கிறார்:

  ராஜா ஒரு மத வெறியர்.

  அவரைத் தலைவர் ஆக்கினால், அமைதியான தமிழகம்
  கலக பூமியாகும். மதவெறியர்கள் அரசியல் தலைவர்களாக
  உருவெடுப்பது நமது துர்பாக்கியம்.

  அவரை தலைவராக்க விரும்பும் உங்களின் தீயநோக்கம்
  இங்கு வெளிப்படுகிறது.

  • புதியவன் சொல்கிறார்:

   புவியரசு… உங்க பாயிண்ட் ஹெச். ராஜாவைப் பொறுத்தவரைல சரிதான்.

   ஆனால் பயங்கரவாதிகள் வீரமணி, வீரபாண்டியன், ஸ்டாலின் போன்றோர் மீது உங்கள் கருத்து என்ன? இந்து மதத்தை மட்டும் குறை சொல்லி, எள்ளி நகையாடிப் பேசும் இவர்களால் தமிழகம் அமைதியாக இருக்கிறது என்று நீங்களே நம்பிக்கொள்கிறீர்கள்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    புதியவன்,

    மீண்டும் மீண்டும் உங்கள் திசை திருப்பும் சாமர்த்தியத்தை
    வெளிப்படுத்துகிறீர்கள்… 🙂 🙂

    ராஜா வெஜிடேரியனா அல்லது கசாப்புக்கடையா என்பதில்
    உங்கள் கருத்தைச் சொல்லி விட்டு போயிருக்கலாமல்லவா…?

    ராமசாமியைப் பற்றி பேசும்போது சுப்புசாமி ஏன் குறுக்கே வருகிறார்…?

    புதிய பாஜக தலைவராக ஆகப்போவது யாரென்று பேசும்போது,
    வீரமணி, வீரபாண்டியன் பற்றியெல்லாம் இங்கு பேச்செதற்கு …?

    அதை தனி ஆவர்த்தனமாக வைத்துக் கொள்ளலாம் அல்லவா…?

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   இதுல தேசவிரோதிகள் வை.கோ, திருமா, மதவாதிகள் சீமான் போன்றோரையும் குறிப்பிட விட்டுப்போய்விட்டது.

 4. புவியரசு சொல்கிறார்:

  புதியவன், venkat-க்கு அடுத்த மேக்கப் போட்டுக்கொண்ட மதவாதி நீங்கள்.
  அடிக்கடி உங்கள் மறுமொழிகளின் மூலம் அதை வெளிப்படுத்திக் கொண்டெ இருக்கிறீர்கள். நாத்திகவாதிகளுக்கும் மதவெறியர்களுக்கும் நிறைய
  வேறுபாடு இருப்பது உங்களுக்கு தெரியாதா ?

 5. Thiruvengadamthirumalachar சொல்கிறார்:

  Elections to the Assembly is due next year and BJP requires a strong coalition to open its accounts in Tamilnadu.The leader will be one who is acceptable to all and will be in apposition to work out a profitable political alignments and sell some acceptable formula and may even attempt a faction less AIADMK to help in thisIt is perplexing time.Thiruvengadam

 6. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  தமிழகத்தில் யாரை தலைவராக போட்டாலும் அந்தக் கட்சி
  டெபாசிட் கூட தேறாது – இன்று அப்படித்தான் பா ஜ க இருக்கிறது .

  பொய்ப் பிரச்சாரம் இன்னும் கொஞ்சம் கூட செய்ய வேண்டும் .
  ஒன்றுமே இல்லாத “சாமியார்கள் ” என்னமாக கல்லா கட்டுகிறார்கள் .

  அவர்களை பார்த்தாவது திருந்தட்டும் !

  • venkat சொல்கிறார்:

   Please reread my post. I wrote what bjp might do given what they have done in the past. It is not my wish. For the record, I hate religious polarization, which is very bad for national integrity. I don’t endorse the same…
   But unfortunately that is the only thing that is getting them votes….example Bengal and kerala.

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  திருமதி தமிழிசை அவர்களை அமைச்சராக ஆக்காமல்,
  இப்படி இளம் வயதிலேயே கவர்னர் ஆக்கி,
  அவரை அரசியலிலிருந்து ரிடையர் ஆக்குவது ஏன்…
  இது நியாயமா…? இதன் பின்னாலுள்ள மர்மம் என்ன என்று
  நாம் மட்டும் தான் கேட்டிருந்தோம்.

  ஆனால், தமிழகத்தின் எந்த அரசியல் தலைவரும் இந்த கேள்வியை
  எழுப்பவே இல்லை… தமிழிசை தமிழக அரசியலிலிருந்து
  அகற்றப்பட்டதில் அவர்களுக்கு அவ்வளவு நிம்மதி- சந்தோஷம்….
  அமைச்சராக்கி இருந்தால், இந்த அளவிற்கு வாழ்த்துகள் வந்திருக்காது…!
  அவரால் தொல்லைகள் தொடருமே ..!!!

  எதிர்க்கட்சிகள் தான் இப்படி என்றால்,
  அவரது சொந்தகட்சியில் கூட அவரது போட்டியாளர்களுக்கு
  படுகுஷி. போட்டியிலிருந்து ஒருவர் அகற்றப்பட்டு விட்டாரல்லவா…?
  அவர் பாவம் இந்த கட்டாய ஓய்வு குறித்து வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தன் துயரத்தை தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு வெளியே சிரித்துக்கொண்டிருக்கிறார்…!!!

  நல்ல அரசியல்…!!!

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 8. Jksmraja சொல்கிறார்:

  நயினார் நாகேந்திரன் தமிழக பி ஜே பியின் தலைவராக வருவதற்கு 75 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது.

 9. venkat சொல்கிறார்:

  athepadi…. tamilizhai ku ehtu pidikum ethu pidikathu entru KM sir ku mattum theriyum?
  unga kita vandhu sonnagala sir??? romba over sir!!

  before appointing someone as governor, leadership would have consulted her.. At least she would have been given rights to say NO! Loosing state leader role and not being in any powerfu role is worse than being a governor. I think she would be mighty happier.

  Like i said before in this government, governor posts are not “dummy”. They play an active role in keeping an eye on state government. In that regard, she could do a good service to the party and the country.

  Don’t over read into situation

 10. tamilmani சொல்கிறார்:

  தமிழ்நாட்டில் திமுக இருக்கிற வரைக்கும் பிஜேபி நிச்சயமாக காலூன்றமுடியாது.
  காரணம் மோடியை எதிர்த்து பலமான பொய் பிரச்சாரம், காசுக்காக பொய் பிரச்சாரம்
  செய்யும் தொலைக்காட்சி ஊடகங்கள். கலவரத்தை தூண்ட பியூஸ் மனுஷ், வீரமணி ,
  திருமுருகன் காந்தி ,வேல்முருகன்,ஓட்டை பிரிக்க சீமான், மக்கள்நீதி மய்யம் .
  தினகரன் போன்றவர்கள். இவர்களால்தான் திமுக அணி 38 எம் பி (கார்த்தி சிதம்பரம், கனிமொழி
  ராசா ,தயாநிதி ,பாலு போன்ற ஊழல் பேர்வழிகள் உள்பட ) பெற முடிந்தது. இப்படிருக்கையில்
  2021 சட்ட மன்ற தேர்தலில் பிஜேபி தனது கணக்கை துவக்க ஒரு நல்ல சக்தி வாய்ந்த
  தலைமை தேவைப்படுகிறது. அதிமுக பிஜேபி கூடவே ரஜினியும் சேர்ந்தால் மட்டுமே
  திமுகவை வீழ்த்துவது சாத்தியம். இல்லாவிட்டால் பிஜேபி தலைவர்கள் வேறேதாவது
  மாநில ஆளுநர் பதவிக்கு முயற்சிக்கலாம்.

 11. Jksmraja சொல்கிறார்:

  தமிழ்மணி அவர்களே,

  தி மு க வின் பொய் பிரச்சாரம் ஒருபுறம் இருக்கட்டும். பி ஜே பி தமிழ் நாட்டிற்கு என்னவெல்லாம் செய்தது, ஒரு பட்டியல் போடுங்களேன், அதற்க்கு வோட்டு போடுவதற்கு. தமிழ் நாட்டை விட்டு தள்ளுங்கள். திரு மோடி அவர்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு என்னவெல்லாம் செய்தார், கொஞ்சம் சொல்லுங்களேன். வலதுசாரி சிந்தனையாளர்கள் மாதிரி போட்டோ ஷாப்பை தூக்கிக்கொண்டு வரக்கூடாது. தமிழ் நாடு மட்டும் அல்ல, இந்தியாவிலிருந்தே தூக்கி எறியப்படக்கூடிய கட்சி பி ஜே பி .

 12. Jksmraja சொல்கிறார்:

  தி மு க ஆதரவாக போடும் ஒவ்வொரு போஸ்ட்க்கும் ரூபாய் 200 தான் கொடுக்கிறது. ஆனால் பி ஜே பி ரூபாய் 500 கொடுக்கிறது. இதற்காக மரிய தாஸ் சொன்ன செய்தி வலைத்தளங்களில் சுற்றி வந்ததே பார்க்கவில்லையா. ஏன் சார், நாட்டிற்ற்க்காக சேவை செய்பவர்கள் அவர்கள் செய்ததை சொல்லவேண்டியது தானே. அதை விட்டு விட்டு எதற்க்காக போஸ்ட்க்கு பணம் கொடுக்கவேண்டும்.

 13. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  தமிழகத்தில் தி மு க இருக்கும் வரை பா ஜ க காலூன்ற முடியாது
  என்ற கருத்து சொல்லப்பட்டது – உண்மை அதுவல்ல .

  இந்தி ஆதரிப்பை கைவிட்டால்தான் இங்கு அந்த கட்சி வரமுடியும் .

  67க்கு அப்புறம் காங்கிரஸ் வர முடியாத ஒரே காரணம் .
  காங்கிரஸ் தமிழ்நாட்டில் இந்தியை கையில் தொடாது .
  வடக்கே வேற கதை !

 14. D. Chandramouli சொல்கிறார்:

  Ms Soundarrajan deserves to be promoted and our congratulations to her. I totally agree with your take on her being taken out of Tamil Nadu scene in a larger scheme of things for BJP. i wonder if Ms Vanathi Srinivasan would be considered to take up BJP leadership role in Tamil Nadu.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.