சிறப்பான நிர்வாகம் …..!!!ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள,
ஆண்டறிக்கையில்
கூறப்பட்டுள்ள விவரங்களிலிருந்து சில –

வங்கிகளில் மோசடி கடந்த ஆண்டை விட
இந்த ஆண்டு (2018-19) 73.8 % உயர்ந்துள்ளது.

– முந்தைய நிதியாண்டான, 2017 – -18- ல்,
5,916 முறைகேடுகள் மூலம், நடைபெற்ற
முறைகேடுகளின் மொத்த மதிப்பு,
41 ஆயிரத்து, 167 கோடி ரூபாய்

– அதுவே, கடந்த நிதியாண்டான 2018-19-ல்
மொத்த முறைகேடுகளின் எண்ணிக்கை,
6,801 ஆகவும்,

வங்கி முறைகேடுகளின் மொத்த மதிப்பு –
71 ஆயிரத்து, 543 கோடி ரூபாய் என்கிற அளவிற்கும்
வளர்ச்சி அடைந்துள்ளது….!!!

– நடப்பு அறிக்கையாண்டில்-( 2019-20-ல் ) , இதுவரை –
மொத்தம், 3,766 முறைகேடுகள் நடைபெற்றுள்ளன;
இதன் மதிப்பு, 64 ஆயிரத்து, 509 கோடி ரூபாய்.

வங்கி முறைகேடுகள், பொதுத் துறை வங்கிகளில் அதிகமாகவும்,
அடுத்த அளவில் தனியார் துறை வங்கிகளிலும், அதற்கடுத்து,
வெளிநாட்டு வங்கிகளிலும் நடைபெற்று உள்ளது.

* நாட்டில் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தின் மதிப்பு,
மார்ச் மாத நிலவரப்படி, 17 சதவீதம் உயர்ந்து,
21.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது…!!!

பொதுவாக, கள்ளநோட்டுகளைப் பொருத்தவரை –
கண்டுபிடிக்கப்பட்ட நோட்டுகளின் எண்ணிக்கை
கடந்த ஆண்டைவிட குறைந்திருக்கிறது.

2017-18 – 5,22,783
2018-19 – 3,17,384

ஆனால் – இதில் விசேஷம் என்னவென்றால்-
புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் இவற்றின்
எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது…

கண்டுபிடிக்கப்பட்ட கள்ள 2000 ரூபாய் நோட்டுகள் –
2017-18- ல் 17,929
2018-19 -ல் 21,847

—————————————

கடைசியாக –


—————————————————————————-…

பின் சேர்க்கை…..!!!

ஒரு வாசக நண்பரின் விருப்பப்படி, மேற்படி சாதனைகளுக்கு
காரணமானவர்களுக்கு பூங்கொத்து அளிக்கப்படுகிறது….!!!


தாமரை மலர் பூங்கொத்து….

.
—————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to சிறப்பான நிர்வாகம் …..!!!

 1. Prabhu Ram சொல்கிறார்:

  Vottu pottavargalukku uraikkumaa ?

 2. புவியரசு சொல்கிறார்:

  ” வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
  புத்திசாலி இல்லை “

 3. புவியரசு சொல்கிறார்:

  இங்கே “புத்திசாலி” = நேர்மையாளர்

 4. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்…. இடுகை, ‘பூங்கொத்து’ படம் இல்லாம முழுமையா இல்லை. நல்ல பெரிய பூங்கொத்து ஒண்ணு சேர்த்துடுங்க.

  அப்புறம் டிமானிடைசேஷனை ஆரம்பத்திலிருந்து ஆதரித்த எங்களுக்கு, கடைசிப் படமா, ஒரு துண்டோடு (towel) படத்தையும் சேர்த்துட்டீங்கன்னா, நாங்க எடுத்துக்கிட்டு எங்க தலையில் போட்டுக்க சரியா இருக்கும்.

  கள்ளநோட்டு அதிகமாயிருக்கறதை நீங்க பார்க்கணும்.

  அப்புறம் bank fraud க்கு எனக்குத் தெரிந்தவர், வங்கியில் இருந்தவர் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு காரணம் சொன்னார். இந்த 6000 கோடி, 3000 கோடி ஏய்த்துவிட்டு நாட்டைவிட்டுக் கிளம்புபவன்மீது நடவடிக்கை இல்லை. (இன்னும் ஒரு காரணமும் சொன்னார்) அதுனால பணத்தைக் கட்டுபவனும் இப்போ கட்டுறதில்லை. இது வாராக்கடன்களை கடுமையா அதிகரிக்கப்போகுது. அதுவும் தவிர ரிசர்வ் வங்கிலேர்ந்து (அவர் சொன்னது 6 மாதங்கள் முன்பு) பணத்தை எடுப்பது என்பது தற்கொலைக்குச் சமம். இவங்களுடைய (பாஜக) நிதி, பொருளாதாரம், பேங்கிங் செக்டார் இவற்றை ஹேண்டில் பண்ணும் விதம் படு மோசம் என்றார். இன்னும் என்ன என்ன பிரச்சனைகள் நம் நாட்டுக்கு வரப்போகுதோ. நீங்க எழுதின மாதிரி, சுப்ரமண்யம் சுவாமிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும் (வயசாயிடுச்சுன்னு நினைச்சாங்கன்னா, ஆலோசகர் என்ற பதவியில் வைத்து அவர் சொல்வதை 2 வருஷத்துக்குக் கேட்கணும்).

  • sakthi சொல்கிறார்:

   நல்ல யோசனை. வயதானவர்களை ஒதுக்குவதன் விளைவை குடும்பங்களில் இருந்து (கூட்டுக் குடும்பம் மாறியதில் இருந்து) நாடு வரை அனுபவித்து வருகிறோம்.
   ஆலோசகராக வைத்துக் கொள்ளலாம். அவரின் பல விதண்டா வாதங்களை ஒதுக்கி விடலாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   // கா.மை. சார்…. இடுகை, ‘பூங்கொத்து’ படம்
   இல்லாம முழுமையா இல்லை. நல்ல பெரிய
   பூங்கொத்து ஒண்ணு சேர்த்துடுங்க.//

   தங்கள் சித்தம் என் பாக்கியம்…!!!

   இவ்வளவு சாதனைகள் செய்திருக்கிறார்கள்.
   நாம் இது கூட செய்ய மாட்டோமா என்ன…?

   —————–

   மேலே இடுகையை பாருங்கள்… 🙂 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புவியரசு சொல்கிறார்:

    நல்ல டேஸ்ட் சார் உங்களுக்கு.
    மலரை கரெக்டாக தேர்ந்தெடுத்திருக்கிறீர்களே !

 5. Jksmraja சொல்கிறார்:

  புதியவன் சார்

  இப்பொழுது எல்லாம் டிவி விவாத நிகழ்ச்சி பார்ப்பதற்கு உங்களுக்கு நேரம் இல்லை என்று நினைக்கிறேன். மனம் தளர்ந்து விட்டீர்களே சார். 27.08.2019 அன்று நடைபெற்ற news 18 டிவியின் காலத்தின் குரல் நிகழ்ச்சியை யு டியூபில் பாருங்கள். அந்த நிகழ்ச்சியில், இரண்டு வலதுசாரி சிந்தனையாளர்கள், எதிர் தரப்பில் பங்கேற்ற 1. ஜெய ரஞ்சன் 2. சுமன் சி ராமன் 3. ரவிக்குமார் ஆகியோர் வாதமே புரிய முடியாத அளவிற்கு மோடியின் சாதனைகளை பேசி பொருளாதாரத்தை செங்குத்தாக தூக்கி நிறுத்தி இருப்பார்கள். ஆகையால் பொருளாதாரம் செங்குத்தாகத்தான் போய் கொண்டிருக்கிறது. அவதார புருஷர் மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் வீறு நடை போடுகிறது. மனம் தளர வேண்டாம் .

  • புதியவன் சொல்கிறார்:

   பொருளாதாரத்தைப் பற்றி என் இன்றைய ஒபினியனை எழுதியிருக்கிறேன். சுமந்த் சி ராமன், ரவிக்குமார், ஜெய ரஞ்சன் – இவங்கள்லாம் ஜால்ரா கூட்டம். அதனால் நேரத்தை வீணாக்குவதில்லை. இப்போ தொலைக்காட்சி விவாதத்துல (எல்லாத் தொலைக்காட்சியிலும்) எனக்குத் தெரிஞ்சு உருப்படியா யாரும் பேசுவதில்லை. அதை நடத்துபவர்களும் (சேவியர் போன்ற பலர்), அவங்க அவங்க தொலைக்காட்சி எண்ணத்துக்கேற்றபடிதான் நடத்துவாங்க. கலந்துக்கறவங்க, அவங்க அவங்க கட்சி சார்பா ஏதேனும் பேசுவாங்க (பாஜக உட்பட). அதனால அதையெல்லாம் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை. பாஜக பற்றித் தெரிந்துகொள்ள தமிழக தொலைக்காட்சி எதையும் பார்ப்பதில்லை. அவங்கள்ல அனேகமா எல்லோரும் திமுகவின் பிரச்சார பீரங்கிகள் அல்லது பாஜக எதிர்ப்பாளர்கள் (மறைமுக வருமானம், இல்லை தங்கள் நிதிக்குக் காரணகர்த்தாக்கள் சொல்படி நடப்பது என்ற காரணத்தால்).

   சாமான்ய மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு, விலைவாசி, பொதுவா அரசு எப்படி நடக்குது, தங்கள் வாழ்க்கை என்னவாயிருக்கு இதில்தான் மிகுந்த அக்கறை. ப.சி. அவர் பையன், வாத்ரா, திமுக வின் கனிமொழி, ராசா, தயாளு, கேடி பிரதர்ஸ், டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன் என்ற இன்னும் நீளும் பெரிய லிஸ்ட்படி எல்லோரையும் ஆயுளுக்கும் உள்ள வைச்சால் ஊழலுக்கு எதிராக இந்த அரசு நிச்சயம் செயல்படுதுன்னு நினைத்து கூடுதல் சந்தோஷம் அடையலாம். ஆனா அதை பாஜக செய்யவில்லை.

 6. Jksmraja சொல்கிறார்:

  பாங்கில் பிராடு , அது -இது, என்று பேசுவது எல்லாம், மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும், என்பதற்க்காக ரிசர்வ் பாங்கில் புகுந்து விட்ட சில கருப்பு ஆடுகளின் வேலை. அது எல்லாம் கட்சிக்கு நிதி கொடுத்தவர்களுக்கு செய்யப்படட கைமாறு.

 7. Jksmraja சொல்கிறார்:

  புதியவன் சார்

  அப்பா —- இப்பதான் சார் நிம்மதி. எங்கே மனது மாறிவிட்டீர்களோ, என்று நினைத்தேன். திறமையில் ப சி க்கு கொஞ்சமும் குறைவில்லாத அருண் ஜெட்லீயோ, கருணாநிதிக்கு கொஞ்சமும் குறைவில்லாத எடியூரப்பவோ, உங்கள் நினைவிற்கு வரவில்லை பார்த்தீர்களா. அங்கதான் சார் நீங்க நிற்கிறீர்கள். நம்ம சேகர் ரெட்டி ரெம்ப புனிதர் தெரியுமா. இதை தாமதமாக புரிந்து கொண்ட CBI கேஸை வாபஸ் வாங்கிவிட்டது தெரியுமா உங்களுக்கு.

  • புதியவன் சொல்கிறார்:

   Sorry.. Dont mistake me. நீங்க சொன்னவர்கள் (அருண் ஜெட்லி பத்தி தெரியலை) எல்லோரும், அப்புறம் சே.ரெ. வுடன் படம் எடுட்துக்கொண்டவர்கள் எல்லாரையும், அப்புறம் திருச்சில 2000 நோட்டு பண்டல்களோடு பிடிபட்டவங்க…எதையும் நான் மிஸ் பண்ண விரும்பலை. எல்லோருக்கும். (தவறு செய்த எல்லோருக்கும்…)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.