அந்த 1,76,000 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான சில விளக்கங்கள்…


இரண்டு-மூன்று நாட்களுக்கு முன்னர், ரிசர்வ் வங்கியிலிருந்து
1,76,000 (ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் ) கோடி ரூபாயை

(எப்படி கரெக்டாக அதே 2 ஜி ஆ.ராஜா கணக்கு…!!!)

– மத்திய அரசு எடுத்துக் கொண்டது என்று சில பேரும்
பிடுங்கிக்கொண்டது என்று வேறு சிலரும் கூறினார்கள்.

எடுத்துக் கொண்டாலும் சரி, பிடுங்கிக் கொண்டாலும் சரி –
அது என்ன பணம், அது ரிசர்வ் வங்கியிடம் வந்துசேர்ந்த விதம்
எப்படி போன்ற விவரங்கள் சாதாரண பொதுமக்களுக்கு
புரியவில்லை என்பது புரிந்தது.

அதை, எனக்குத் புரிந்தவரையில் சுமாராகவாவது –
நான் விளக்கலாமா என்று நினைத்த சமயத்தில் பொருளாதார
நிபுணர் ஜெயரஞ்சன் இது குறித்து ஒரு விவரமான பேட்டி
கொடுத்திருப்பதை யூ-ட்யூபில் பார்த்தேன்.

இந்த விஷயத்தை ஓரளவு புரிந்துகொள்ள நண்பர்களுக்கு
இது உதவும் என்பதால், அதை அப்படியே கீழே பதிகிறேன்.
சின்ன பேட்டி தான்… முழுவதும் பார்க்கலாம்…

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அந்த 1,76,000 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான சில விளக்கங்கள்…

 1. Jksmraja சொல்கிறார்:

  KM சார்

  உங்களிடம் ஒரு வேண்டுகோள். பொருளாதாரம் அது- இது என்று சொல்லிவிட்டு, எல்லோரும் fitnes India வை மறந்துவிட்டார்கள். அதை பற்றி ஒரு இடுக்கை போடுங்கள் சார். அப்பவாவது டிவி நிகழ்ச்சியாளர்கள் விழித்துக்கொண்டு அந்த தலைப்பில் விவாத நிகழ்ச்சியை ஆரம்பிப்பார்கள். அதில் கலந்து கொள்ளும் வலதுசாரி சிந்தனையார்கள் எப்படி fitnes India வால் தங்கள் குடும்பத்தில் உள்ள பிறவிக்குருடனுக்கு கண்பார்வை கிடைத்தது என்பதையும் தாங்கள் எப்படி கேன்சரில் இருந்து விடுபட்டோம் என்பதையும் விளக்குவதை கேட்க ஆவலாக இருக்கிறது சார். அதன் மூலம் ஏகப்பட்ட கேன்சர் நோயாளிகள் பயனடைய வாய்ப்பு இருக்கிறது சார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Jksmraja,

   உங்கள் ஆசையை ( 🙂 🙂 )
   நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்கு –
   மன்னிக்க வேண்டுகிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Selvarajan சொல்கிறார்:

  மக்களால் மறக்கமுடியாத ..மன்னிக்க முடியாத ..நீண்ட நெடிய நாட்களை விசாரணைக்காகவும்…பல வித மனிதர்களின் உள் விவகாரங்களையும் .. பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்களையும் காெண்டு பாரம்பரிய கட்சிகளை மண்ணைக் கவ்வ வைத்த … சாெகுகளை மட்டுமே அனுபவித்து வந்தவர்களை திகாரை அறிய அவர்களுக்கு பரிச்சியமாக்கிய … அதிகமாக ஊடகஙகளில் விவாதிக்க வைத்து அவர்களின் டி.ஆர்.பி .ரேட்டை உச்சமாக்கிய ….அதே

  மிகவும் ராசியான ” 1,76,000 ” காேடி என்கிற எண் தற்பாேது …இவர்களுக்கு …. ! இறைவனின் சித்தம் எப்படியாே …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.