எம்.எஸ்.வி’யின் கொட்டாங்குச்சி ம்யூசிக்…..!!!


ஒரு பழைய நிகழ்ச்சியை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது.
ஜெயா டிவியில் வந்திருக்கிறது… ஆனால் நான் இதற்கு
முன்னால் இதை பார்க்கவில்லை… எப்படியோ தவற
விட்டிருக்கிறேன்….

விழாவில் அந்நாளைய முதல்வர் ஜெயலலிதா அவர்களை
பார்க்கும்போது, மனதை என்னவோ செய்கிறது..

ஆனாலும், நான் இந்த இடத்தில் இதற்கு மேல் –
இதைப்பற்றி எதுவும் எழுத விரும்பவில்லை.

– நான் சொல்ல வந்தது வேறு விஷயம் –

“அன்பே வா” திரைப்படத்தில்,
“ராஜாவின் பார்வை-ராணியின் பக்கம்”
பாடலின் அற்புதமான ஆர்கெஸ்டிராவை கேட்டு –

நான் பலமுறை யோசித்தது உண்டு….
இதை எம்.எஸ்.வி. எப்படி இயக்கி இருப்பாரென்று…
இதற்கான விடை கற்பனையில் கிடைக்கவே இல்லை.

இந்த நிகழ்ச்சியில் நேரடியாக அதைக் காண முடிந்தது..
அடடா – என்ன கற்பனை வளம்…
எதையெதை எல்லாம் இசைக்கருவிகளாக,
எப்படியெல்லாம் சேர்த்திருக்கிறார்…!!!

அந்த மனிதர் கையில், கொட்டாங்குச்சி
படுத்தும் பாட்டைப்பாருங்களேன்…!!!

எம்.எஸ்.வி. –
மறக்க முடியாத ஒரு அற்புத இசைச்சிற்பி…

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to எம்.எஸ்.வி’யின் கொட்டாங்குச்சி ம்யூசிக்…..!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  இந்த நிகழ்ச்சில முதல்ல மேடைல வரும்போது ஜெ. அவர்களின் மெஜெஸ்டிக் லுக், எப்படி அவர் எல்லோரையும் வணங்குகிறார் என்றெல்லாம் பார்த்திருப்பீங்க. மனதை மிகவும் வருத்தியது எனக்கு.

  அதிருக்கட்டும்…இந்த நிகழ்ச்சியில் வாணி ஜெயராம் பாடிய பாடல் (ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்) – இரண்டாவது பகுதியில் இருக்கும், கேட்டீர்களா? புல்லரிக்கவைத்துவிட்டது. என்ன டேலண்ட் இந்த வயதில்.

  எம்.எஸ்.வி. அவர்களின் ஹ்யுமிலிட்டி…. எப்படிப்பட்ட ஜாம்பவான் அவர்… ஓ கிரேட்

 2. புதியவன் சொல்கிறார்:

  இளையராஜா ஒரு படத்தில் பாடலின் (நெஞ்ச்த்தைக் கிள்ளாதே படம்.. பருவமே புதிய பாடல் பாடல்) பின்னணி இசைக்காக ‘தட் தட் தட்’ என்ற இசை கொடுத்திருப்பார். கேட்டுப்பாருங்கள். அந்த இசைக்காக அவர், மைக் அருகில் ஒருவரை உட்காரவைத்து அவரது கையை அவரது தொடையில் தட்டவைத்து இந்த சவுண்டைப் பெற்றிருப்பார். ஒரு நிகழ்ச்சியில் அவர் (தொடையில் தட்டியவரோ அல்லது அந்த மியூசிக்கில் பங்குபெற்றவரோ) சொன்னார், பாடல் பதிவு முடியும்போது தொடையிலும் கையிலும் தாங்க இயலாத அளவு வலி என்று. எனக்கு அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது, இந்தக் கொட்டாங்கச்சி சவுண்டை நினைத்து. (உண்மையில் கொட்டாங்கச்சியை முழுவதுமாக தேங்காய் மாதிரி வைத்து அதனுள் மணிகள் வைத்து ஒரு இசைக்கருவி உண்டு)

 3. D. Chandramouli சொல்கிறார்:

  Quite amazing to see the live performance with full orchestra. This is one of MSV-VR pair’s best songs. More so for TMS-PS combination as well. You are right, when we look at Jayalalitha madam, it disturbs us. With her total control of government and administration, she could have created wonders and could have taken to TN to great heights. Unfortunately, this didn’t happen. Similarly, Rajiv Gandhi at the center with 2/3rd majority in Parliament lost a golden chance to give a lasting legacy that he could have left behind. Wasted opportunities!.

 4. cvenkatasubramanian சொல்கிறார்:

  Arumai Arumai

 5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  இந்த பாடலில் மொத்தம் மூன்றே இசைக்கருவிகள்தான் .
  அதில் ஒன்று பாதி தண்ணீர் உள்ள ஒரு சொம்பு !

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   மெய்ப்பொருள்,

   சிறப்பான இன்னொரு இசையமைப்பை –
   சரியான இடத்தில் நினைவுறுத்தினீர்கள்.
   நன்றி நண்பரே.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.