திருமா – நிஜமா…?


திரு. தொல்.திருமாவளவன் ஒரு புத்தக வெளியீடு
சம்பந்தமாக லண்டன் சென்றது தெரியும். அங்கே நடந்த
சம்பவங்களைப்பற்றி, சில அதிர்ச்சியான தகவல்கள்
வெளியாகி இருக்கின்றன.

கிடைத்த செய்திகளை கீழே தந்திருக்கிறேன்.
இவை அதிர்ச்சி தருவன மட்டுமல்லாமல், திரு.திருமாவளவனின்
இமேஜை பாதிப்பதாகவும் இருக்கின்றன…

திமுக மற்றும் காங்கிரசுடன் – தான் கூட்டு வைத்துக் கொண்டதற்கு
அவர் கூறும் காரணங்கள் நம்பத்தகுந்ததாக இல்லை…
என்பதோடு, மிகவும் செயற்கையாகவும் இருக்கின்றன.

லண்டன் செய்திகள் உண்மையாக இருந்தால், திருமாவளவனின்
மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அவரது
அரசியல் செல்வாக்கிற்கும் பலத்த பாதிப்பு இருக்கும்.

எது உண்மை… எவ்வளவு உண்மை…
ஏன் இப்படி…? – என்பதையெல்லாம் திருமாவளவன்
தான் விளக்க வேண்டும்.

முதலில் ஒரு காணொளி …
பிறகு பத்திரிகைச் செய்தி ….

—————————————————–
.
———————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to திருமா – நிஜமா…?

 1. புதியவன் சொல்கிறார்:

  இதை முன்னமேயே படித்தேன்… காணொளி ஒன்றும் பார்த்தேன்.

  நீங்கதான் திருமாவளவனுக்கு ஒரு இமேஜ் இருக்கறதாச் சொல்றீங்க (என்ன இமேஜ் என்று நீங்களும் சொல்லலை). அவர் விடுதலைப் புலிகளிடம் தன் இயக்கத்துக்கு காசு கேட்டார், அவங்க போனதும் ராஜபக்‌ஷேவிடம் காசு கேட்டார், அப்புறம் ஈழத் தமிழர்களிடம் காசு கேட்கிறார். திருமாவளவன்லாம் நம்பிக்கைக்குரியவரே கிடையாது. அவர் எந்தக் கட்சிக்கும் எந்தக் காலத்திலும் விசுவாசமாக இருந்தது கிடையாது. ஈழத் தமிழர்களிடம் ஒன்றும், இஸ்லாமியர்களிடம் ஒன்றும், தன் இன மக்களிடம் ஒன்றும் என்று பார்க்கும் இடமெல்லாம் கூசாமல் பொய் சொல்லி காசு தேத்தக்கூடியவர் ‘கட்டப்பஞ்சாயத்து’க்குப் பெயர் பெற்ற திருமாவளவன்.

  இந்திய அரசியலுக்கு ஈழத் தமிழர்களிடம் பிச்சை கேட்க திருமாவளவனுக்கு வெட்கமாயில்லை?

  எனக்குப் பெயர் வரணும், ஓசி மேடையில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஸ்டாலின் கட் அண்ட் ரைட்டாகச் சொல்லியிருப்பார். அதனால்தான் திருமா காஷ்மீருக்கே போகவில்லை. பாருங்கள்… அடுத்த தேர்தலின்போது ஸ்டாலின், திருமாவை உதயநிதியிடம் சீட் சம்பந்தமாகப் பேசுங்கள் என்று சொல்வார், அல்லது உதயநிதியையும் சீட் குழுவில் அமரச் செய்து திருமாவை அசிங்கப்படுத்துவார்.

 2. sakthi சொல்கிறார்:

  காணொளியின் உண்மைத்தன்மையை சோதனையிட்டேன்.எல்லாமே உண்மைதான். தாங்கள் தந்த செய்திகள் அனைத்துமே உண்மை.ஆனால் காணொளியில் பணம் வீசப்பட்டதாக தெரியவில்லை. அழைப்பிதழை கிழித்து எறிந்திருப்பதுதான் தெரிகிறது.
  .
  முழு இரண்டு மணி நேர காணொலியை பார்க்கும் போது, நிகழ்வு தொடங்கு முன்னரே பிரச்சனை தொடங்கி விட்டது.திருமா சொன்னதை அவர்கள் முழுதாக கேட்கு முன்னரே எதிர்ப்பு தெரிவித்து சென்று விட்டார்கள்.சொன்னதை ,சொன்ன பொய்களை கேட்டிருந்தால் மிகப் பெரிதாக பிரச்சனை ஏற்பட்டிருக்கும்.

  சொந்த நலனுக்காக இப்படி அரசியல் செய்யும் துரோகிகளை இன்னும் நம் மக்கள் நம்புகிறார்களே என்பது வருத்தமாக உள்ளது.யாரும் சாட்சி சொல்ல வரமாட்டார்கள் என்ற தைரியமும்,கூஜா தூக்க இருக்கும் தொண்டர்களும் தான் இப்படி பொய் சொல்ல வைக்கிறது.பத்திரிகைகளின் ஆர்ச்சிவ்,காணொளிக் காட்சிகள் இணையத்தில் சேமிக்கப்படுகிறது என்பது தெரிந்தும் பொய் சொல்ல எப்படி முடிகிறது?

  அங்கே மீண்டும் தமிழர்களை அழித்தவர்கள் தேர்தலில் போட்டியிடப் போகிறார்கள்.அடுத்த அழிவுக்கு ஆரம்பம் இப்போதே புலிகள் பெயரை சொல்லி கைதுகள் தொடங்கி விட்டன.

 3. புவியரசு சொல்கிறார்:

  இங்கே தமிழ்நாட்டில், திருமா நேர்மையாகவும்,
  வெளிப்படையாகவும், பொருளாசை இல்லாதவர்
  போலவும், உலகத்தமிழர்களின் நலனுக்காக
  உழைப்பவர் போலவும் ஒரு தோற்றத்தை
  உருவாக்க தீவிரமாக முயன்று செயல்படுகிறார்.

  ஆனால், இப்போது வெளிவந்திருக்கும் செய்திகள்
  அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது.
  தமிழக அரசியல்வாதிகள் சிலர் விடுதலைப்புலிகளுக்கு
  ஆதரவாகச் செயல்பட்டு, ஆனால் தனிப்பட்ட முறையில்
  அவர்களிடமிருந்து பெரிய அளவில் ஆதாயம்
  பெற்றுக் கொள்கிறார்கள் என்று கூறப்பட்டு வந்த
  குற்றச்சாட்டை மேற்படி செய்தி உண்மையாக்குகிறது.

  தமிழகத்தில் தங்கள் கட்சியை வளர்க்க, வெளிநாடுகளில்
  வாழும் ஈழத்தமிழர்களிடம் பண உதவி கேட்க அவருக்கு
  வெட்கமாக இல்லையா ? மனசாட்சி இல்லையா ?
  நினைக்கவே மனம் கூசியிருக்க வேண்டாமா ?
  பணம் திரட்டுவதற்காகவே இவர் லண்டன்
  போன மாதிரித்தான் தெரிகிறது. இவரது வெளிநாட்டு
  பயணத்திற்கான செலவுகளைக்கூட அவர்களிடம் தான்
  பெற்றிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

  இவர் உள்நாட்டில் இன்னும் யார் யாரிடமெல்லாம்
  பணம் வாங்கி இருப்பாரோ என்கிற சந்தேகமும் இயல்பாகவே
  எழுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.