அதுக்குள்ளேயா … இவ்வளவு பணமா…?


திமுக இளைஞரணியின் அமைப்பாளர்கள் கூட்டம்
சென்னை கிண்டியிலுள்ள ஹில்டன் ஹோட்டலில்
இன்று (ஆகஸ்ட் 25) நடைபெற்றது.

இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள்,
மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்
என சுமார் 474 பேர் கலந்துகொண்டனர்.

இளைஞரணியில் உறுப்பினராகச் சேர்வதற்காக வயது வரம்பு
15-30ல் இருந்து 18-35 என மாற்றப்பட்டு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, “ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் என
ஒட்டுமொத்தமாக 30 லட்சம் உறுப்பினர்களைச்
சேர்க்கவேண்டும்” என வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

( https://minnambalam.com/k/2019/08/25/29 )

———————————————————————————

பட்டத்து இளவரசர், இளைஞர் அணித் தலைவராக
பொறுப்பேற்ற பின் நடத்தும் கூட்டம் இது.

கூட்டத்தில் 474 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
கூட்டம் நடைபெற்ற இடம் –

சென்னையின் புகழ்பெற்ற 5 நட்சத்திர –
ஹோட்டல் ஹில்டன்.

Hilton Chennai – Hotel Exterior

Terrace at Hilton Chennai


இங்கு ஒரு அறையின் வாடகை –
ஒரு நாளைக்கு – 10,000 + ரூபாய்…

இவர்கள் கூட்டம் நடந்தது
இந்த ஹோட்டலின் – business centre -ல்.

பிசினஸ் செண்டர் வாடகை எவ்வளவு
என்று தெரியவில்லை …!!!

கூட்டத்தில் கலந்துகொண்ட 474 பேருக்கும் விருந்தும் உண்டு.
5 நட்சத்திர ஹோட்டலில் விருந்து என்றால் –
எப்படியும் தலைக்கு 4000 ரூபாய்க்கு குறைவாக இருக்காது.

474 x 4000 + ப்ளஸ் பிசினஸ் செண்டர் வாடகை
மற்றும் மற்றைய ஏற்பாடுகளுக்கான செலவுகள்…

எத்தனை லட்சமோ…?
இது கட்சிப்பணமா…? யாராவது ஸ்பான்சர் அன்பளிப்பா…?

இளைஞர் அணித்தலைவராக வேறு யார் இருந்தாலும்
கட்சியிலிருந்து இவ்வளவு பணம் தரப்பட்டிருக்குமா…?

பட்டத்து இளவரசருக்கு அண்ணா அறிவாலயத்திலும்,
கலைஞர் கூடத்திலும் இல்லாத இடமா…?
பிறகு எதற்காக நட்சத்திர ஹோட்டலில் கூட்டம்…?

ஒருவேளை இது இளவரசரின் சொந்தப்பணமாக இருக்குமோ…?
இருக்கும் இருக்கும் – கேட்பவர் லூசாக இருந்தால்…!!!

சாதாரணமாக அரசியல் கட்சிகளின் கூட்டங்கள்
எதாவது ஏ.சி. திருமண மண்டபங்களில் தான் நடக்கும்….

பின் இது மட்டும் ஏன் 5 நட்சத்திர ஓட்டலில்…?
எங்கள் கூட வந்தால், எந்த மாதிரி treatment எல்லாம்
கிடைக்கும் என்று காட்டவா…?

பிசினஸ் செண்டர் என்றால் –
ஒரு வேளை இது Sales Promotion கூட்டமோ…?
இந்தச் செலவு- பின்னால் கிடைக்கப்போகும்
வருமானத்திற்கான அட்வான்ஸ் முதலீடோ….?

ஆமாம் – இப்படியெல்லாம் இவ்வளவு செலவழித்து,
இவர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகிறார்களே…
மக்களுக்கு சேவை செய்யத்தானே….?
அடடா… மக்கள் மீது எவ்வளவு அக்கறை, கரிசனம், பாசம் …!!!

எதிர்க்கட்சியில் இருக்கும்போதே –
இவ்வளவு செலவழிக்க முடிகிறதே..?
அடுத்தபடியாக, ஆட்சிக்கு வந்தால்…?

10 நட்சத்திர ஹோட்டல் என்று எதாவது
சென்னையில் இருக்குதாங்க ….?

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அதுக்குள்ளேயா … இவ்வளவு பணமா…?

 1. tamilmani சொல்கிறார்:

  DMK is a privated limited company engaged in politics and earning money by all means .They have so many benami properties with them and income from them is spent like these in 5 star hotels
  just like a company ‘s Annual general body meeting. Where as crores of people in Tamilnadu
  does not even have one square meal a day these people spend lavishly in star hotels like Hilton
  where only foreigners touring India stay. .ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று சொல்லி ஊரை ஏமாற்றி
  கொள்ளை அடித்தபணத்தை இது போன்ற நட்சத்திர விடுதியில் உல்லாசமாக
  செலவழித்த பின்னும் இன்னும் அவர்களிடத்தில் பணம் கோடிக்கணக்கில்
  இருக்கிறது. சிதம்பரத்துக்கு அடுத்து அமித் ஷாவின் பார்வை இந்த கொள்ளை கூட்டம்
  பக்கம் திரும்பவேண்டும்.

  • புதியவன் சொல்கிறார்:

   @தமிழ்மணி – //They have so many benami properties with them and income from them is spent like these// – முதல் வரி உண்மை. இது ப.சிக்கும் மற்றவ அரசியல்வாதிக்குமே பொருந்தும். லாயக்கில்லாத பொன்முடி, துரைமுருகன், ஆங்கிலம் பேசத் தெரியாத டி.ஆர். பாலு இவங்களுக்கே வெளிநாட்டில் கோடிக்கணக்கா சொத்து இருக்கும்போது….. திரையுலகில், எவ்வளவு நல்ல பணம், எவ்வளவு கருப்பு, என்ன சம்பாத்யம் என்று ஒன்றுமே கணக்கில் சரியாக வராத இடத்தை உபயோகித்து எவ்வளவு பணத்தை வெள்ளையாகக் காட்டியிருக்கிறார்களோ.

   இரண்டாவது வரி – அந்தக் குடும்பம் எச்சில் கையால் காக்கை ஓட்டாத குடும்பம். இதுக்கு செலவழிக்க ஏதானும் இளிச்சவாயன்கள் கிடைத்திருப்பாங்க.

 2. Subramanian சொல்கிறார்:

  இளவரசர் “சென்னை மேயர் ” பதவியில்
  அமரப் போகிறார். அதற்கான Ground Breaking Ceremony –
  அதாவது துவக்க பூஜை இது.

 3. புதியவன் சொல்கிறார்:

  //இருக்கும் இருக்கும் – கேட்பவர் லூசாக இருந்தால்…!//

  //இந்தச் செலவு- பின்னால் கிடைக்கப்போகும் வருமானத்திற்கான அட்வான்ஸ் முதலீடோ…//

  //மக்கள் மீது எவ்வளவு அக்கறை, கரிசனம், பாசம் …//

  //10 நட்சத்திர ஹோட்டல் என்று எதாவது சென்னையில் இருக்குதாங்க ….//

  நல்ல நகைச்சுவையா எழுதியிருக்கீங்க. இதுல சோகம், இவை எல்லாம் உண்மை என்பதுதான். அடுத்தவர் சொத்தை ஆட்டையைப் போட்ட உதயநிதியிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? எவனாவது ஏமாளி(கள்) அகப்பட்டிருப்பாங்க, கட்சில. அவங்களை பின்னால் வரப்போகும் பரிசுக்காக இப்போ செலவழிக்கச் சொல்லியிருப்பாங்க. இல்லைனா, செலவுக்கணக்கு எழுத இந்த முறையைக் கடைபிடிச்சிருப்பாங்க. இப்பவே, thatstamilல், ஸ்டாலினை மிஞ்சி உழைக்கும் இளைஞர் அணித் தலைவர், மக்களின் மனம் கவர்ந்தார் என்றெல்லாம் எழுதி திமுகவிடம் காசு பிச்சை எடுக்கிறாங்க. இணையத்துல அவங்களைப் பாராட்டி எழுதற ஒவ்வொரு கட்டுரைக்கும் 200-250 ரூ பிச்சை போடறாங்க.

 4. bandhu சொல்கிறார்:

  இதில் ஏமாளி அந்த கூட்டத்துக்கு ஒட்டு போடுபவர்கள்தான்! இவர்களுக்கு செலவு செய்பவர்கள் அதை எத்தனை மடங்கு திருப்பி எடுக்க முடியும் என்று தெரியாமலா செலவு செய்திருப்பார்கள்?

  கா மை சார். மாரிதாஸ் வீடியோக்களை பார்த்தீர்களா? பிரித்து மேய்ந்திருக்கிறார்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.