அஞ்சு ரூபா பிஸ்கட் …


ஒரு அஞ்சு ரூபா பிஸ்கட் பாக்கெட்டால்
என்ன சங்கதி சொல்லி விட முடியும்…?

சொல்கிறதே….!!!

———

நாட்டின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான
பார்லே செவ்வாய் அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்
இப்போதுள்ள நுகர்வு நிலை தொடர்ந்தால் 8000
முதல் 10000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்யும் நிலை
உருவாகும் என்று தெரிவித்துள்ளது.

1929ஆம் ஆண்டு மும்பையில் சௌகான் குடும்பத்தாரால்
தொடங்கப்பட்டது பார்லே நிறுவனம். 1939ஆம்
ஆண்டிலிருந்து பிஸ்கட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள
பார்லே நிறுவனம் இந்தியா சுதந்திரமடைந்த பின் பிரிட்டிஷ்
நிறுவங்களுக்கு மாற்றாக குளுக்கோஸ் பிஸ்கட்டுகளை
பிரபலப்படுத்தியது.

தற்போது 1000 கோடி ரூபாய் விற்பனையுடன் பார்லே
நிறுவனம் பார்லே -ஜி, மொனாகோ, மேரி பிராண்ட்
பிஸ்கட்ஸ் தயாரிப்புகளை வைத்துள்ளது. ஒரு லட்சம்
ஊழியர்களுடன் சொந்தமாக 10 தொழிற்கூடங்களைக்
கொண்டுள்ளது, மேலும் 125 மூன்றாம் தரப்பு தயாரிப்பு
வசதிகளையும் பெற்றுள்ளது. பாதிக்கும் அதிகமான
பார்லே நிறுவன தயாரிப்புகள் கிராமப்புற சந்தைகளில்
விற்பனையாகிறது.

“ஒரு கிலோ 100 ரூபாய் – அல்லது
அதற்கும் குறைவான பேக்குகளின் ஜிஎஸ்டியை
குறைக்கச் சொல்லி கேட்டுள்ளோம்.

அவை 5ரூ அல்லது அதற்கும் குறைவாக விற்கப்படும்
பிஸ்கட்டுகள் ஆகும். அரசு அதை செய்ய மறுக்கின்றது,

ஏற்கெனவே விற்பனை குறைவு எங்களைக் கடுமையாக
பாதிக்கின்ற நிலையில் 8000 முதல் 10,000 உழியர்களை
பணிநீக்கம் செய்வதை விடுத்து வேறு வழி இல்லை”என்று
பார்லே தயாரிப்புகளின் தலைவர் மயங்க் ஷா
தெரிவித்துள்ளார்.

ரூ 100 மற்றும் அதற்கு குறைவான
பிஸ்கட் பேக்குகளுக்கு ஜிஎஸ்டி வருவதற்கு
முன்பாக 12 % வரி விதிக்கப்பட்டிருந்தது.

பிஸ்கட் நிறுவனங்கள் அதிக விலையுள்ள
பிஸ்கட்டுகளுக்கு 12% ஜிஎஸ்டியும், குறைந்த விலையுள்ள
பிஸ்கட்டுகளுக்கு 5% ஜிஎஸ்டியும் நிர்ணயிக்கப்படும் என
எதிர்பார்த்திருந்தன.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசு அனைத்து
பிஸ்கட்டுகளுக்கும் 18% ஜிஎஸ்டியை நிர்ணயித்தது.
( அதாவது 5 ரூபா பிஸ்கட்டுக்கு 90 பைசா ஜிஎஸ்டி வரி…)

இதனால் நிறுவனங்கள் விலையை உயர்த்த வேண்டிய சூழல்
ஏற்பட்டது அதன் விளைவாக விற்பனை குறைந்துள்ளது.
பார்லே நிறுவனமும் 5% விலையை உயர்த்த அது விற்பனைக்
குறைவுக்கு காரணமாக அமைந்ததாக ஷா தெரிவித்துள்ளார்.

மக்கள் 5ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டுகளைக்கூட வாங்க
தயக்கம் காட்டுகின்ற நிலையில் மற்றொரு முன்னணி
பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியாவின்
நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி இது குறித்து
பேசியுள்ளார்.

“இது பொருளாதாரத்தில் மிக மோசமான பிரச்சினை”
என்று எக்னாமிக்ஸ் டைம்ஸ் ஊடகத்துக்கு அவர்
அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரு காலாண்டுகளில் நுகர்வோர்களின் தரம்
மிகவும் குறைந்துள்ளதாகவும், சில்லறை வணிகம்
பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பார்லே நிறுவன தலைவர்
ஷா கூறியுள்ளார்.

“ஜிஎஸ்டி உயர்வாலும் அரசின் போதுமான ஒத்துழைப்பு
இல்லாததாலுமே நுகர்வோர்களின் தேவையில் சுணக்கம்
ஏற்பட்டுள்ளது. எங்களது பல்வேறு பிஸ்கட் பிராண்டுகளை
நடுத்தர மற்றும் ஏழை மக்களே வாங்குகிறார்கள்.
இந்த பிரச்சினையை ஜிஎஸ்டியை திரும்பப்பெறுவதன் மூலம்
அரசால் சரி செய்ய முடியும்…” என்று தெரிவித்துள்ளார்.

– மேலே இருப்பது நேற்று வெளியான ஒரு செய்தி மட்டுமே….!

இது கார்கள், பைக்குகள் என விலை அதிகமான மோட்டார்
வாகனங்களின் விற்பனை சரிந்ததைப் பற்றிய செய்தி அல்ல –

ரியல் எஸ்டேட் துறை பாதாளத்தில் வீழ்ந்தது பற்றிய
செய்தியும் அல்ல –

– வெறும் ஐந்து ரூபாய் பிஸ்கட் விற்பனை
சம்பந்தப்பட்ட செய்தியே.

சில செய்திகளுக்கு விமரிசனம் தேவைப்படாது.
அவற்றில் இதுவும் ஒன்று….

.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to அஞ்சு ரூபா பிஸ்கட் …

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஒரு இலட்சம் ஊழியர்களை கொண்ட ஒரு நிறுவனம் ஏன் ஐந்து ரூபாய் பிஸ்கெட்டை தயாரித்து நஷ்டமடைய வேண்டும்.
  ஐம்பது ரூபாய்க்கு தயாரிக்க வேண்டியதுதானே என்று அரசிடமிருந்து பதில் வரப்போகிறது பாருங்க!
  மேக் இன் இண்டியா!

 2. புவியரசு சொல்கிறார்:

  https://www.bbc.com/tamil/india-49430332

  Parle பிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: “ஆட்டோமொபைல் தொடங்கி சில்லறை வணிகம் வரை சரியும் இந்தியப் பொருளாதாரம்”

  பிஸ்கட்டுகளுக்கான வரி 12 சதவீதம் இருந்த நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பின்னர் 18 சதவீதமாக அதிகரித்ததே இதற்குக் காரணம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான இந்தியா சமீப காலமாக ஆட்டோமொபைல் தொடங்கி சில்லறை வணிகம் வரை பல துறைகளில் மந்தநிலையை சந்தித்துள்ளது. இதனால் நிறைய தொழில் நிறுவனங்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வருகிறது. புதிதாக வேலை வாய்ப்புகளும் வழங்கபடுவதில்லை. ஆட்டோமொபைல் துறையோ சரிவிலிருந்து மீள மத்திய அரசு சிறப்பு நிதியை அளிக்க வேண்டும் எனக் கோருகிறது.

  பார்லே மட்டுமல்ல இந்த மாத தொடக்கத்தில் ப்ரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடடின் நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “மக்கள் ஐந்து ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கவும் இருமுறை யோசிக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 3. புவியரசு சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இது தொடர்பான இன்னொரு செய்தி ;

  https://www.hindutamil.in/news/opinion/columns/512408-leaves-in-motor-companies.html

  மோட்டார் வாகனத் துறையில் அபூர்வ விடுமுறைகள்

  மோட்டார் வாகனத் துறையில் உற்பத்தி அதிகம், விற்பனையில் மந்தம் என்ற நிலை காரணமாகச் சில பெரிய நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் ஊதியத்துடன் கூடிய கூடுதல் விடுமுறையை அளித்தன.

  ஹீரோ மோட்டார் கார்ப். நிறுவனம், ஆகஸ்ட் 15 முதல் 18 வரையில் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவித்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஜாம்ஷெட்பூர் ஆலையில் சில பிரிவுகளுக்கு மட்டும் ஆகஸ்ட் 15 உடன் 16, 17 ஆகிய இரு நாட்களுக்குக் கூடுதல் விடுமுறை அளித்தது.

  சென்னையைச் சேர்ந்த சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் நிறுவனமும் ஆகஸ்ட் 15 உடன் 16, 17 ஆகிய இரு நாட்களுக்கு விடுமுறை அறிவித்தது. மோட்டார் வாகனத் துறையில் இப்படித் தொடர்ச்சியான விடுமுறைகள் அபூர்வம், துறையில் நடக்கும் வீழ்ச்சியே விடுமுறையாக வெளிப்படுகிறது என்கிறார்கள்.

 4. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  Neither this government nor its supporters would accept/entertain/encourage any such news like above. Because this government’s poor are below who earn Rs.8 lakhs and below…. What I understand is, the government is asking people to believe the numbers it provides…. If I say these are the recurring effects of demonetization, gst implementation and reckless economic policies(during the last term), my friends are saying — 1. Country is under strong leadership — 2. Pak is afraid of us — 3. Country is fully secured(what will the thief steal when the house is empty) — 5. NaMo is not corrupt — 6. Cleaning process is going on(for six years??) …… We, readers of this website shall also say all above and we shall say “hail NaMo” raising our right hand in front of us !!!

  PS: Have I missed no.4…. Yes…. 4. British Herald praised NaMo as most famous leader above other bigwigs….. When I tried to surf about this magazine, I got to know this magazine was started by a person who was running Cochin Herald. I was in Cochin for a brief period and have not heard of Cochin Herald….. But you know British Herald is a most famous UK magazine….I believe that and so you too believe that…..If you dont believe that, then you are anti-national….

 5. புதியவன் சொல்கிறார்:

  நம் பொருளாதாரத்தில் பிரச்சனை இருக்கிறது. இது டிமானிடைசேஷனுக்கு அப்புறம் மெதுவாக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. பாஜக அரசு இதில் சுத்தமாகக் கவனம் செலுத்தவில்லை. மக்களுக்கு முதல் தேவை ‘உணவு’. அதுக்கு அப்புறம் உடை, இருப்பிடம். மதமோ, செக்யூரிட்டியோ அதற்கு அப்புறம்தான் என்பதை மோடி அரசு நினைவில் கொள்ளவேண்டும்.

  பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பில் எந்த ஒரு முன்னேற்றமும் நான் டிமானிடைசேஷனுக்கு அப்புறம் பார்க்கவில்லை. பொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசுதான் பதில் சொல்லவேண்டும். வேலைவாய்ப்பு கடந்த ஐந்து வருடங்களாகக் குறைந்துகொண்டே வருகிறது.

  இரு நாட்களுக்கு முன்பு பக்கத்திலுள்ள நாடார் கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்தேன். அவர் சொல்லுகிறார், நிலைமை ரொம்ப மோசமாப் போகுது, இன்னும் மூணு மாசத்துல 1 வாங்கினா 1 இலவசம்னு சொன்னாக்கூடா ஆட்கள் வாங்க பணம் இல்லைம்பாங்க..பார்த்துக்கிட்டே இருந்த எத்தனை தொழில் முனைவோர்கள் தற்கொலை பண்ணிக்கப்போறாங்க என்று எனச் சொன்னார்.

  1. அரசு, அரசு வேலை கொடுத்து இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியாது. தொழில் முனைவோர்களால்தான், அதுவும் சொந்தத் தொழில் முனைவோர்களால் (படிக்காத சாதாரணர்கள் வைத்திருக்கும் பட்டறை, மளிகை கடை போன்றவை) அது இயலும்
  2. ஆன்லைன், போன்றவை மக்களுக்கு தொழில் வழங்காது.
  3. இந்தியாவுக்கு சாதாரண ரீடெயில், மற்ற கடைகள், விவசாயம் சார்பானவை போன்றதுதான் நிறைய வேலைவாய்ப்புகளை வழங்கும்.
  4. எலெக்டிரிக் வாகனங்களை ப்ரொமோட் செய்ய அரசு முனைவது (குறிப்பிட்ட காலம் கொடுத்து) நம்ம நாட்டுக்கு நல்லது அல்ல. இங்கு வாகனங்கள் சார்பாக வேலை செய்பவர்கள் பல லட்ச சாதாரணர்கள் உண்டு (ரிப்பேர் போன்றவை). எலெக்டிரிக் வாகனங்கள் நம் பணம் வெளிநாட்டுக்குச் செல்வதைத்தான் ஊக்குவிக்கும்.

  அரசு கடந்த ஐந்து வருடங்களாகச் செல்லும் பாதை சரியானது அல்ல. பேசும் அளவு செயலில் இதுவரை நான் காணவில்லை. வெறும்ன ‘நம் சர்க்கார்’ என்று பேசினால் உபயோகம் இல்லை. வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் பாஜக பூஜ்ஜியத்துக்குப் பக்கத்தில்தான் மதிப்பெண் பெறுகிறது.

 6. புதியவன் சொல்கிறார்:

  //ஒரு கிலோ 100 ரூபாய் – அல்லது அதற்கும் குறைவான பேக்குகளின் ஜிஎஸ்டியை
  குறைக்கச் சொல்லி கேட்டுள்ளோம் // – ஜிஎஸ்டி வரிவிதிப்பை அரசு ஆய்வு செய்து, குடிசைத் தொழில்களுக்கான ஜி.எஸ்.டி, அது என்ன பொருட்களை உற்பத்தி செய்தாலும், என்ன சர்வீஸ் கொடுத்தாலும், அதனை மிக மிகக் குறைவான அளவு போடவேண்டும். அதே சர்வீஸை ஆர்கனைஸ்ட் கம்பெனி செய்யும்போது அதற்கு வேறுமாதிரியான ஜி.எஸ்.டி இருக்கவேண்டும். அதுபோல, Essential commodities அனைத்துக்கும் ஜி.எஸ்.டி குறைவாகவும், மற்ற, சொகுது பொருட்கள், சர்வீஸுக்கு மிக அதிகமாகவும் இருக்கவேண்டும். உதாரணமா, டாஸ்மாக்கில் ஜி.எஸ்.டி 600% இருந்தாலும் அது யாரையும் பாதிக்காது. சிகரெட்டுக்கு 150% போடலாம். இதுபோல non essential items must have very high GST.

  இதைச் செய்யாமல், எந்தக் கம்பெனி, யார் என்று பார்த்து ஜி.எஸ்.டி. மாறுதலுக்கு உள்ளாக்கினால், எத்தனை ஜெட்லி வந்தாலும் அதைச் சரிசெய்ய முடியாது.

 7. venkat சொல்கிறார்:

  i don’t understand this… will help if somebody will educate me…

  prior to GST, a packet was sold at Rs.5 and there was 12% tax on it. Prior to GST, the tax manufacturers paid for their raw materials was part of their cost. For example if the cost of raw material is Rs.3 ( for that Rs.5 packet biscuit ), manufacturer would have paid x% tax on that Rs.3. Let us assume that it was 10%. Then total cost of manufacturer will be Rs.3.30.
  After GST, the tax that manufacturer pay for the raw material is NOT considered a cost. They will take credit for the tax they paid from the GST consumer pays. In other words, manufacturers should not sell biscuit packet at Rs.5, they should rather sell at Rs.4.70. Consumer will now pay 18% instead of 12%. But this 18% is on the lowered MRP!!!!

  Reality is that most of the manufacturers have not reduced their price due to which consumers are suffering. This price adjustment will happen over a period of them due to market dynamics.

  Can some one tell me if I am wrong in my understanding?

  That said, economy is doing bad that sales numbers are down across various industry segments. Business is expecting some sort of relief from government, But if government offer some relief to business then KM sir will raise red flag saying government is for ambani and adani!!!!

  • புவியரசு சொல்கிறார்:

   venkat அவர்களே

   // Can some one tell me
   if I am wrong in my understanding?//

   பாஜகவுக்கு கண்மூடித்தன ஆதரவு என்கிற
   அடிமைத்தனம் கண்களை மறைத்து,
   மண்டைக்குள் ஏறி உட்கார்ந்துகொண்டிருக்கும்
   வரையில், வேறு எதுவும் உங்கள் தலையில் ஏறாது.

   பிஸ்கட் கம்பெனிக்காரன் மடையனா ?
   நாடார் கடை நாடார் மடையரா ?
   நாட்டில் நடப்பதை பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
   சொல்வதெல்லாம் மடத்தனமா ?
   தூங்குபவர்கலைத்தான் எழுப்ப முடியும்.
   கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போல்
   நடிப்பவர்களை யாராலும் எழுப்ப முடியாது.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புவியரசு,

    உங்கள் டென்ஷனில் –
    இன்னும் கொஞ்சம் பெயர்களை விட்டு விட்டீர்களே .. ?

    ஹீரோ மோட்டார் கார்ப். நிறுவனம்,
    ஜாம்ஷெட்பூர் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்,
    சென்னையைச் சேர்ந்த சுந்தரம் கிளேட்டன் லிமிடெட்,
    பார்லே தயாரிப்புகளின் தலைவர் மயங்க் ஷா,
    ப்ரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடடின்
    நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி,
    கருத்து சொன்ன நண்பர்கள் –
    Sanmath AK,
    புதியவன்,
    புவியரசு,
    கட்டுரை எழுதிய காவிரிமைந்தன் –

    இத்தனை பேரையும், வெங்கட்’கின்
    மடையர்கள் லிஸ்டில்
    சேர்க்க வேண்டாமா…?

    ——————–
    கடைசியாக போட்டார் பாருங்கள் ஒரு போடு –
    காவிரிமைந்தன் குறை சொல்வாரே என்று தான்
    பாஜக அரசு வரித்தள்ளுபடி கொடுக்கவில்லையென்று…

    சூப்பர்… 🙂 🙂 🙂

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   இதை ஜி.எஸ்.டின்னு பார்க்காதீங்க வெங்கட் சார். Over all there is some problem in our economics after demonitization. வாங்கும் சக்தி குறைஞ்சிருக்கு சில செக்டார்ல.

   நமக்கு சிறு குறு தொழில்லதான் focus வேணும். நாம ஜியோ இல்லாம வாழ்க்கையை ஓட்டலாம். ஆனா சிறு குறு தொழில்தான் வேலை வாய்ப்புகளைப் பெருக்கும். உதாரணமா ஆட்டோ மொபைல் இண்டஸ்டிரி நசிந்தால், அதை வைத்துப் பிழைக்கும் லட்சக்கணக்கான படிப்பறிவற்ற ஆனால் டெக்னீஷியன் வாழ்க்கை போயிடும்.

   இது 40 பைசா ஜி.எஸ்.டி 5 ரூ பிஸ்கெட் பாக்கெட்டுக்கு அதிகம் என்ற வாதம் இல்லை. எப்படி மக்களை என்ன செஞ்சு வாங்க வைக்கலாம் என்ற எண்ணம்.

   பிஸ்கட் பாக்கெட்டுக்கு பொதுவா என் ஆதரவு கிடையாது. Anything that has too much sugar, maida etc. brings indirect health hazards. ஆனா இங்க தொழில்கள் நசிந்துகொண்டு வருகிறது. அதுதான் பிரச்சனை. நீங்க இதை observer பண்ணலையா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.