“மூன்றாவது” கண் – third eye…!!!


தமிழ்நாட்டைத் தவிர உத்திரப் பிரதேசம்,
மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற
வேறு மாநிலங்களிலும் நான் பணியாற்றி இருக்கிறேன்.
வருடக்கணக்கில் அங்கெல்லாம் வசித்திருக்கிறேன்.
டெல்லியிலும் இருந்திருக்கிறேன்.

இந்தியாவின் முக்கியமான, பெரிய நகரங்கள்
பலவற்றிற்கும் பல தடவைகள் போயிருக்கிறேன்…
( தமிழ்நாட்டிற்கு வெளியே என்று எடுத்துக்கொண்டால்-
டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பங்களூரு,
கொச்சி, திருவனந்தபுரம், பூனா, மைசூரு, சண்டிகர், ஜபல்பூர்,
நாக்பூர் – போன்றவற்றைச் சொல்லலாம் ….)

என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன் – இந்தியாவிற்குள்,
சென்னையை விட பாதுகாப்பான நகரம் வேறு எதுவும் இல்லை
என்று உறுதியாகச் சொல்ல முடியும். முக்கியமாக
பெண்களைப் பொறுத்தவரை இங்கிருக்கும் பாதுகாப்பும்,
சுதந்திரமும் வேறு எந்த பெருநகரங்களிலும் இல்லை…

கடந்த 15 வருடங்களாக நான் சென்னையில் தான்
தங்கியிருக்கிறேன்.

பல திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு
சம்பவங்கள் தமிழகத்திலும் நிகழத்தான் செய்கின்றன..
ஆனால், comparison (ஒப்பீடு) என்று வந்தால் –
நிச்சயம் இந்தியாவிலேயே –
சென்னை தான் குற்றங்கள் குறைந்த – மிகவும்
பாதுகாப்பான நகரம் என்று உறுதியாகச் சொல்லலாம்.

அதுவும் கடந்த ஒன்றிரண்டு வருடங்களாக, கொஞ்சம்
கொஞ்சமாக குற்றச் செயல்கள் குறைந்துகொண்டே
வருவது கண்கூடாகத் தெரிகிறது … ( தனிப்பட்ட பகை,
கள்ள உறவுகள் காரணமாக நடக்கும் குற்றங்களை
இதில் சேர்க்காமல் பார்த்தால்…)

செயின் பறித்தல், செல்போன் பறிப்பு – போன்ற சம்பவங்கள்
மிகவும் குறைந்து விட்டன. வாகனங்கள் திருட்டு கூட
ஓரளவு குறைந்து விட்டது.

இதற்கெல்லாம் மூல காரணமாக – 2017, மே மாதம்
முதல் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக
பொறுப்பேற்று செயல்பட்டு வரும் –
திரு.ஏ.கே. விஸ்வநாதன் அவர்கள் எடுத்துக் கொண்ட
பெருமுயற்சிகளைத் தான் கூற வேண்டும்….

அரசு இலாகாக்கள் மட்டுமின்றி – பெரிய பெரிய
தனியார் நிறுவனங்கள், அடுக்குமாடி வீடுகள், கடைகள்,
பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என்று
பலதரப்பட்ட வகையினரையும் ஒன்றிணைத்து,

சிசிடிவி கேமரா நிறுவப்பட வேண்டியதன்
அவசியத்தை அவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை
மனமுவந்து ஏற்றுக் கொள்ளச் செய்த அவரது முயற்சிகள்
பாராட்டப்பட வேண்டியவை…

இந்த முயற்சிகளின் விளைவாக, இன்று சென்னை மாநகரில்
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள்
பொறுத்தப்பட்டுள்ளன என்று தெரிய வருகிறது.
ஒரு மிகச்சிறந்த பாதுகாப்பு வலை (safety network)
உருவாக்கப்பட்டு விட்டது.

இது – குற்றச் செயல்கள் நிகழ்வதை குறைப்பதோடு,
நடந்து விட்ட குற்றங்களில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை
சீக்கிரமாக அடையாளம் கண்டு, அவர்களை சட்டத்தின்
பிடிக்குள் கொண்டு வரவும் பெரிய அளவில் உதவுகிறது.
இதற்காக –

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்
திரு.ஏ.கே. விஸ்வநாதன் அவர்களுக்கு –

இந்த விமரிசனம் வலைத்தளத்தின் மூலம் –
நமது வலைத்தள வாசக நண்பர்கள் அனைவரின் சார்பாகவும்,
உளமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும்
தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

குற்ற சம்பவங்களற்ற சென்னையை உருவாக்க
அவர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென்று
நாமும் மனதார வேண்டுவோம்…வாழ்த்துவோம்.

.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to “மூன்றாவது” கண் – third eye…!!!

 1. Prabhu Ram சொல்கிறார்:

  Yes Sir. I also join with you in supporting this movement.
  CCTV Camera is very essential and useful in controlling
  and detection of Crimes. The Police Commissioner
  deserves all appreciation and support.

 2. புதியவன் சொல்கிறார்:

  நீங பந்தாவான சிசிடிவி கேமரா படம் போட்டிருக்கீங்க (வெளிநாட்டுல இருக்கற மாதிரி). கல்ஃப் தேசங்களிலும் எல்லா இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

  நம்ம ஊர்ல என்னன்னா இது ரொம்ப செலவு பிடிக்கும் வேலை. அதனால சுமார் கேமராக்களை உபயோகப்படுத்தியிருக்காங்க. (இருக்கற பட்ஜெட்டுக்குள்ள). நம்ம கமிஷனரை மனதாரப் பாராட்டணும்.

  முதல்ல மனசளவுள தைரியத்தைக் கொடுத்திருக்கார். குற்றச் செயல்கள் நடக்கும்போது இதனை வைத்து பிடிக்கறாங்க.

  மக்களும் தங்கள் பில்டிங்ல கேமராக்களை வைக்கும் பழக்கம் வந்துவிட்டது.

  பாராட்டுகள் கமிஷனர் சார் மற்றும் காவல்துறை நண்பர்கள்…

 3. புதியவன் சொல்கிறார்:

  முப்படைகளுக்கும் ஒரே தளபதி – மோடி அவர்களின் திட்டம்

  இது இந்தியாவுக்கு நல்லதில்லையே. இதைப்பற்றி நீங்க இன்னும் எழுதலையே. முன்னால (மன்மோகன்சிங் காலத்துல), ஒரு தளபதி, பிரதமர் உத்தரவு இல்லாமல் படைகளை நகர்த்தினார், தில்லி நோக்கி சில பட்டாலியன்கள் வந்தனர் என்றெல்லாம் படித்து, பிறகு அப்படி நடக்கவில்லை என்பதுபோல பூசி மெழுகினார்களே.. நினைவிருக்கிறதா? (தளபதி முகம் நினைவுக்கு வருது, பேர் ஞாபகத்துல வரமாட்டேங்குது). ஒற்றைத் தலமை எப்போதும் ஆபத்தல்லவா ஜனநாயகத்துக்கு.

  • Prabhu Ram சொல்கிறார்:

   //ஒற்றைத் தலமை எப்போதும்
   ஆபத்தல்லவா ஜனநாயகத்துக்கு.//

   ippo mattum yenna vaazhuthaam ?

   • புதியவன் சொல்கிறார்:

    இது மக்கள் காங்கிசை, ராகுலை விரும்பவில்லை. காங்கிரஸ் இந்த ஜம்மு காஷ்மீர் விஷயத்திலேயே தவறான நிலை எடுத்து இன்னும் தன் இருப்பைக் கேள்விக்குரியாக்கிக்கொள்கிறது. ஜனநாயகம். நாளையே நல்ல தலைமை வந்தால் மாறலாம்.

    ஆனால் ஒற்றை தளபதி என்பது மத்திய அரசின் முடிவு. அதுதான் நல்லதல்ல என்பது என் எண்ணம்.

    • Prabhu Ram சொல்கிறார்:

     இதை மோடி யோசித்திருக்க மாட்டாரா ?
     தனக்கே தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு முடிவை அவர் எடுப்பாரா ?

 4. Kani சொல்கிறார்:

  Kudos to the Commissioner.

 5. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  சார், மேலை நாடுகளில் நூறு மீட்டர்களுக்கு இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டிருப்பதாக நண்பரின் வாய்வழித் தகவலாக தெரிந்துகொண்டேன் அடுத்ததாக துபாய் அரசும் இதே இலக்கை நோக்கி பயணிக்கிறார்கள், நமது சென்னை கிட்டத்தட்ட இலக்கை நெருங்கி விட்டார்கள் என்று தான் நினைக்கிறேன், ஆனாலும் சிறிய நகரங்கள் அந்த அளவிற்கான வீச்சை பெறவில்லை என்பது நிதர்சணம், சமீக கால குற்றங்களை கண்டுபிடிப்பதில் கண்காணிப்பு கேமரா மற்றும் சைபர் கிரைம் இரண்டும் மிக முக்கிய பங்காற்றுகின்றன. கூடவே ஒரு சினிமா பற்றிய தகவலையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் COLD EYES எனும் கொரிய திரைப்படம் ஒன்று இருக்கிறது, கண்காணிப்பு கேமரா மற்றும் அந்த டீமின் ஓர்க் எப்படி என்பதை நேர்த்தியாக விறுவிறுப்பாக எடுத்திருப்பார்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.