காஷ்மீர் பயணத்தின்போது ராணுவத்தினருடன் ஒரு அனுபவம்….. …..


திரும்பவும் காஷ்மீரில் பிரச்சினை….
அரசியலுக்கும் இவர்களுக்கும்
எந்தவித ஒட்டுமில்லை.. உறவுமில்லை.
ஆனால், பிரச்சினைகள் வரும்போதெல்லாம் –
இவர்கள் படும் வேதனைகளுக்கு அளவே இல்லை….

எல்லையில் எதிரிகளை சந்திப்பது கூட இவர்களுக்கு
பிரச்சினை இல்லை. ஆனால், உள்நாட்டில்,
சிவிலியன்களை சந்திக்க வேண்டிய வேதனையை –
அரசியல்வாதிகள் தான் இவர்களுக்கு ஏற்படுத்துகிறார்கள்.

மூன்று-நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நான்
காஷ்மீர் சென்று வந்தபோது எழுதிய இடுகை
ஒன்றிலிருந்து சில பகுதிகள் கீழே …

உண்மையில் ஜம்மு காஷ்மீரில் பணியில் ஈடுபட்டிருக்கும்
இந்திய ராணுவத்தினர் படும் சங்கடங்களை நேரில் பார்ப்பவர்கள்,
நிச்சயமாக நமது ராணுவத்தினரின் மீது அளவற்ற பாசம்
கொள்ளத்தான் செய்வார்கள்.

கொடுமையான பருவநிலை ஒருபக்கம்.
வசதிகள் மிகவும் குறைவான பணிச்சூழ்நிலை இன்னொரு பக்கம்.

யார் நல்லவர், யார் கெட்டவர் என்று லேசில் கண்டுபிடிக்க
முடியாத ஒரு மக்கள் கூட்டத்தினூடே 24 மணி நேரமும் பணி….

நான் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் காத்திருந்தபோது,
ஒரு ஏர் இந்தியா விமானம் வந்திறங்கியது. சுமார்
150 ராணுவத்தினர் வந்து இறங்கினர். ஸ்ரீநகரின் பல்வேறு
பகுதியில் ஈடுபடுத்தப்பட வேண்டியவர்கள் அவர்கள்.
அந்த விமானம் மீண்டும் பதான் கோட் கிளம்பியபோது,
சாதாரண பயணிகளுடன் 20 ராணுவத்தினரையும் சுமந்துகொண்டு
சென்றது.

இப்படி எல்லைப்புறத்தில், சிவில் விமானங்களில் சில சமயம்
ராணுவத்தினரும் பயணம் செய்ய வேண்டிய அவசியம்
ஏற்படுகிறது….

இத்தகைய சூழ்நிலையில் – எனக்கு முன்பு வந்திருந்த
forward mail ஒன்று நினைவிற்கு வந்தது.
இன்று எனக்கேற்படும் அனுபவம் அந்த நண்பருக்கும்
அன்று ஏற்பட்டிருக்கிறது….
அவரது உணர்வுகளை கொட்டி இருக்கிறார்.
அதனை கீழே வடித்திருக்கிறேன்.
எனக்கும், அவருக்கும் ஏற்பட்ட உணர்வுகள் இதனை
படிப்பவர்களுக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன்.

————————————————————-———-

நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத்
தேடி அமர்ந்தேன்.. விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு
ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை
சுற்றி அமர்ந்தார்கள்.. நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க
ஆரம்பித்தேன்..

எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..?
ஆக்ராவுக்கு ..அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு
எல்லையில் பாதுகாப்பு பணி …

ஒரு மணி நேரம் சென்றிருக்கும்.. அப்பொழுது ஒரு அறிவிப்பு..
மதிய உணவு தயார்..
சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க…பின்னால்

ராணுவ வீரர்களின் பேச்சை கேட்டேன்..

நீ சாப்பாடு வாங்கலையா?
இல்லை ..விலை அதிகம்..என்னால் அவ்வளவு காசு செலவழிக்க

முடியாது.. மூன்று மணி நேரம் போனால் டெல்லி..அங்கு
இறங்கி உண்ணலாம் ..விலை குறைவு..
ஆமாம்..உண்மை..

இதை கேட்ட பொழுது…. மனம் வலித்தது..
விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமான
பணிப்பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை
கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்க சொன்னேன்..
அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள்..
அவள் கண்களில் கண்ணீர்.. இது கார்க்கிலில் இருக்கும்
என் சகோதரனுக்கும் சேர்த்து என்றாள்..

நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன்..
அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி,
நீங்கள் செய்தததை நான் பார்த்தேன்.. இந்தாருங்கள்..என் பங்கு
ரூபாய் 500 என்று என்னிடம் கொடுத்தார்..
நான் என் இருக்கைக்கு திரும்பினேன்..

சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து ,
என் கைகளை பிடித்து குலுக்கி, நான் முன்பு ஏர் போர்ஸ்
பைலட்டாக இருந்தேன்..ஒரு நாள் எனக்கும் ஒருவர் உணவு
வாங்கி கொடுத்தார். இது ஒரு கருணை செயல்..
மிக்க சந்தோஷம்.. உங்களை போன்றவர்களை தாங்கி
இந்த விமானம் பயணிப்பது..என்று சொல்லி சென்றார்.
ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை..

முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம்
கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான்..

விமானம் வந்து நின்றது..நான் இறங்கினேன்..
இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டை பையில் சில
நோட்டுக்கற்றைகளை திணித்தார்…

இறங்கி நடந்தேன்.. அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள்..அவர்கள் அருகில் சென்றேன்.. நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்..

ஒரு தூண்டுதல்..பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்..
அனைத்து பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன்..
போகும் வழியில் நன்றாக சாப்படுங்கள்.. கடவுள் உங்கள்
எல்லாருக்கும் துணை இருக்கட்டும்..

காரில் ஏறி அமர்ந்தேன்.. ஒரு ஆத்ம திருப்தி..

இவர்கள் எல்லைகளை பாதுகாத்துக்கொண்டு..
உயிரினை துச்சமாக மதித்து எப்படி நம்மை காக்கிறார்கள்..
இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை…
இதை புரியாத ஒரு பெரும் கூட்டம் இன்னமும் வாழ்ந்து
கொண்டுதான் இருக்கிறது.

வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர்
நடிகைகளை மிகவும் போற்றி கொண்டாடி, கோடி கணக்கில்
பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம்,

ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்
மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கோடி கணக்கில்
பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம்,

இந்த இராணுவ வீரர்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லையே
என்ற வேதனை என்னை தாக்கியது ….

————————————————————————–

…..

.
அனைவருக்கும் இனிய சுதந்திர நாள் நல் வாழ்த்துகள்….!!!

.
—————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to காஷ்மீர் பயணத்தின்போது ராணுவத்தினருடன் ஒரு அனுபவம்….. …..

 1. புவியரசு சொல்கிறார்:

  உணர்வுபூர்வமான ஒரு அனுபவம்.
  மிகவும் நெகிழ்வாக இருக்கிறது.

  நமது ராணுவ வீரர்களுக்கு ஒரு சல்யூட்.
  அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.

 2. புதியவன் சொல்கிறார்:

  ரொம்பவும் நெகிழவைத்த பதிவு (வாட்சப் மெசேஜை முன்பே படித்திருந்தாலும், அப்போ அதை நம்பாமலிருந்தாலும்..இதேபோல இரயில் பயணத்தில் என்று வந்திருந்தது).

  நாம, நாட்டுக்காக, சமூகத்துக்காக, எளியமக்களுக்காக உழைப்பவர்களைப் பற்றி ஒரு வார்த்தை புகழ்ந்துபேசாமல், குற்றங்களையே சொல்லிவிட்டுக் கடந்துவிடுகிறோமே, அதனால் indirectஆக, நல்லவர்கள் பெருகவிடாமல் செய்துவிடுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி மனதில் வந்துபோனது. நம் ராணுவ வீரர்கள், அதிலும் களத்தில் இருப்பவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். ஜெய் ஹிந்த்.

  அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகள். சுதந்திரத்தை நாம் உணரும்படிச் செய்யும் நம் ராணுவத்தினருக்கு ஸ்பெஷன் வாழ்த்துகள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.