வேலியில் போகிற ஓணானை ….!!!


எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் கூட –
சிலர் எங்கே, எதை… எப்படிப் பேசுவது
என்பதை எத்தனை வயதானாலும் உணர மாட்டார்கள்.
பக்குவமின்றி உளறிக் கொட்டி, சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்…

டாக்டர் சு.சுவாமி, காஷ்மீர் ஆளுநர் மாலிக் ஆகியோர்
இத்தகையோரின் வரிசையில் இருப்பவர்கள்…
சிலர் முதலில் மாட்டிக்கொண்டாலும், பின்னர்
சாமர்த்தியமாக வெளியே வந்து விடுவார்கள். அதில்
சு.சுவாமி கெட்டிக்காரர்.

சிலர் மாட்டிக் கொண்டு விழிப்பார்கள்….
வெளியே வர முடியாமல் திணறுவார்கள்…
இரண்டாமவர் இப்போது அத்தகைய நிலையில் இருக்கிறார்.

காஷ்மீர் நிலவரம் குறித்து ராகுல்காந்தி செய்த
விமரிசனத்தை பொறுக்க முடியாமல் திருவாளர் மாலிக்
எதையோ சொல்லப்போக, இப்போது ரெண்டுங்கெட்டான்
நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்….

கீழேயுள்ள செய்தியை படித்தால் சங்கதி முழுவதுமாக
புரிய வரும்….

———————————————
தமிழ் இந்து செய்தித்தளத்தில் வந்துள்ள – பிடிஐ செய்தி இது –
https://www.hindutamil.in/news/india/511310-rahul-says-will-visit-j-k-don-t-need-guv-s-aircraft-2.html

————–

காஷ்மீர் வருகிறேன்; விமானம் தேவையில்லை:
ஆளுநர் அழைப்பை ஏற்றார் ராகுல் காந்திடெல்லி –

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த
சிறப்பு அந்தஸ்தை மத்தியஅரசு ரத்து செய்து,
அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவை திரும்பப்
பெற்றது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி
கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு
தலைவர்களும் மத்திய அரசின் முடிவை விமர்சித்து
வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக்,
ராகுல் காந்தியை காஷ்மீருக்கு வரவேண்டும் என்று அழைப்பு
விடுத்திருந்தார்.

அவர் நேற்று ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில்
கூறுகையில், ”ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு
வருகின்றன. இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பக்ரீத்
பண்டிகைக்காக கடந்த சில நாட்களாக பொதுமக்கள்
சந்தைகளில் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

காஷ்மீர் முழுவதும் திங்கள்கிழமை பக்ரீத் மிகவும்
அமைதியாக கொண்டாடப்பட்டது. காஷ்மீர் குறித்து
வெளிநாட்டு ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு
வருகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
எதிர்மறையான கருத்துகளைக் கூறியுள்ளார்.

ராகுலுக்காக நாங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பத்
தயாராக உள்ளோம். அந்த விமானத்தில் அவர் காஷ்மீருக்கு
வந்து நிலைமையை நேரில் பார்வையிடலாம்.
மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் பேசலாம்.
காஷ்மீரில் சிறு அசம்பாவிதங்கள் கூட நடைபெறவில்லை.
ஒருவர் கூட காயமடையவில்லை. காஷ்மீர் வருவதற்கு
ராகுல் தயாரா? ” எனக் கேட்டிருந்தார்.

ஆளுநர் சத்யபால் மாலிக்கின் அழைப்பை ஏற்று
ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “அன்புள்ள ஆளுநர் மாலிக்,
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சிலரை
நான் அழைத்துக்கொண்டு, உங்களின் அன்பான வரவேற்பை
ஏற்று நான் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிக்கு
வருவேன்.

எங்களுக்கு எந்தவிதமான விமான சேவையும்
தேவைப்படாது. ஆனால், நாங்கள் சுதந்திரமாகப் பயணிக்க,
மக்களைச் சந்திக்க, மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சித்

தலைவர்களையும், நமது வீரர்களையும் சந்திக்கத்
தடை இல்லாத சூழலை உறுதி செய்ய வேண்டும்” எனத்
தெரிவித்துள்ளார்.

——————-

பின் குறிப்பு – ஏற்கெனவே ஸ்ரீநகர் வந்த எதிர்க்கட்சித்
தலைவர்கள் குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி
ஆகியோரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி,
திருப்பி அனுப்பி வைத்தது திருவாளர் மாலிக் தானே…
அவர் இப்போது எந்த உத்தேசத்தில் ராகுலை அழைக்கிறார்…?
காஷ்மீர் நிலவரம் – ராகுல் காந்தி குழுவினரை சுற்றுலா
அழைத்துப் போகும் விதத்திலா இருக்கிறது….?

வேலியில் போகிற ஓணானை….. 🙂 🙂 🙂
———————————–

என் குறிப்பு – காஷ்மீர் நிலைமை காமெடி செய்யும்
விதத்தில் இல்லை… ஆனால், விமரிசனம் செய்யும்
நிலையிலும் நாம் இல்லை என்னும்போது – வேறு வழி…?
வள்ளுவர் வழி தான்….
“இடுக்கண் வருங்கால் நகுக”

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to வேலியில் போகிற ஓணானை ….!!!

 1. Subramanian சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  அடுத்த கட்ட செய்தியான இதை, பார்ட்-2 -ஆக வைத்துக் கொள்ளலாமா ?

  https://www.hindutamil.in/news/india/511418-no-conditions-when-can-i-come-rahul-gandhis-comeback-to-j-k-governor-1.html

  ராகுல் காந்தி எதிர்க்கட்சி பிரதிநிகள் குழுவினரை அழைத்துவருவதாகக் கூறி இங்கே அமைதியின்மையை ஏற்படுத்த முயல்கிறார் என சத்யபால் மாலிக் பேசியிருந்தார்.

  இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிலடி கொடுத்துள்ள ராகுல் காந்தி, “அன்புள்ள மாலிக் அவர்களே, எனது ட்வீட்டுக்கு தங்களது பலமற்ற பதிலைப் பார்த்தேன். உங்களது அழைப்பை ஏற்று நான் ஜம்மு காஷ்மீருக்கு வரத் தயாராக இருக்கிறேன். அங்குள்ள மக்களை எந்த நிபந்தனைகளுமின்றி சந்திக்க விரும்புகிறேன். எப்போது நான் வரலாம்?” எனப் பதிவிட்டுள்ளார்.

  இனி அடுத்த கட்டத்தை ஆவலுடன் எதிர்னோக்கலாமா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.