ஐஸ்லாந்து அற்புதம்…. Northern Lights in Reykjavík – (இன்றைய சுவாரஸ்யம்…)ஐஸ்லாந்தின் –
தமிழ்த் திரையுலகம் இன்னும்
பயன்படுத்திக்கொள்ளாத – அற்புதமான சில இடங்கள்…

நாம் யாரும் (அநேகமாக …!!! ) நேரில் பார்க்க
வாய்ப்பில்லாத ஒரு இடத்தைப் பற்றிய
ஒரு காணொளியும், சில சுவாரஸ்யமான
தகவல்களும்…..

வடக்கு அட்லாண்டிக்’கில் அமைந்துள்ள ஐஸ்லாந்து பற்றி
எப்போதாவது அபூர்வமாக கேள்விப்பட்டிருப்போம்.

வட துருவத்திற்கு அருகாமையில் இருப்பதால்,
குளிர் நிறைந்த பகுதி. கூடவே, எரிமலையும்.

9-ஆம் நூற்றாண்டு வரை இங்கு மனிதர் யாரும்
குடியிருந்ததில்லை. அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்,
நார்வேயிலிருந்து முதல் குடிப்பெயர்ச்சி இங்கு
நடந்திருக்கிறது…

கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு
இருந்தாலும் கூட, இதன் மொத்த மக்கள் தொகையே
சுமார் 3,60,000 பேர் தான்.

ஐஸ்லாந்து, உலக டூரிஸ்டுகளின் கவனத்தை
கவர்ந்துள்ள ஒரு இடம்… ஐஸ்லாந்தில்,
முக்கியமாக அதன் தலைநகரமான Reykjavík -ல் –
சில சமயங்களில் ஆகாயத்தில் ஏற்படும்
வண்ணச்சிதறல்கள் அதற்கு முக்கியமான காரணம்.

ஏன், எப்படி இங்கே பச்சை வண்ண ஒளிச்சிதறல்கள்
ஏற்படுகின்றன…? இந்த பனி பூமியில் எப்படி எரிமலை…?
யாரால் விளக்க முடியும் – இயற்கையின் கோலத்தை…?
நாமெல்லாம் இதை எங்கே நேரில் காணப்போகிறோம்…?

மிக அற்புதமான இந்த அனுபவத்தை காணொளியில்
அழகாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார் ஒருவர்.

எனவே, அற்புதமான அந்த காணொளியை, நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன். இது 2016-ஆம் ஆண்டு
அக்டோபர்/நவம்பர் மாதங்களில் எடுக்கப்பட்டது….

…………

…………

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ஐஸ்லாந்து அற்புதம்…. Northern Lights in Reykjavík – (இன்றைய சுவாரஸ்யம்…)

  1. Subramanian சொல்கிறார்:

    Simply beautiful.
    Thanks for the information and sharing of video.

  2. D. Chandramouli சொல்கிறார்:

    Nothing to beat such natural wonders. Wow!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.