அச்சமாக, அதிர்ச்சியாக, …… இருக்கிறது…!!!


இன்னும் ஐந்து வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது
என்று சொன்னால் எப்படி இருக்கும்…?

முன்னதாக வெவ்வேறு இடங்களில் படித்த
தகவல்கள் தான்… ஆனால் ஒட்டுமொத்தமாக
ஒரே இடத்தில் படித்துப் பார்க்கும்போது ….?

திருமதி மாலதி சந்திரசேகரன் டெக்னாலஜி வளர்ச்சி
பற்றிய பல தகவல்களை அழகாகத் தொகுத்து
ஒன்றாக ஒரே இடத்தில் தருகிறார்….

…………………..

அதிர்ச்சியூட்டும் உண்மைகள்….

2025-ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?
என்னென்ன தொழில்கள் இருக்காது??

நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு,
நாம நம்மள மாத்திக்கணும்…! 1998-ல தொடங்கின
kodak (Photo) நிறுவனம், ஒரு லட்சத்தி எழுபதாயிரம்
வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது…!

இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல…!
வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்க
முடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து
போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.
பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ,
அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த
பத்து வருஷத்துல நடக்கும்!.

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD & ISD
பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??

எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர்,
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ரேடியோ, டேப்ரெக்கார்டர்,
விசிஆர், வாக்மேன், டிவிடி பிளேயர் என
சொல்லி கொண்டே போகலாம். குண்டு பல்பும்,
டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய்,
இப்ப LED பல்பு தான்.

எதனால ? ஏன் இப்படினு கேட்டா?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence.
சிம்பிளா சொல்லனும்னா ‘Software’ என்கிற
மென்பொருள். மனுஷ மூளையைவிட திறமையா
செயல்படும் இதுங்கதான் மேலதிகமான
காரணமா இருக்கும்.!

உதாரணத்துக்கு சொல்லணும்னா…சொந்தமா ஒரு
கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம,
‘Bharat Matrimony’ வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான
கல்யாணங்களை நடத்திக் கொடுக்குது…
கமிஷனோட…! இல்லீங்களா..?

‘Uber’ங்கறது ஒரு சாதாரண மென்பொருள்,
ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம,
இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை
கம்பெனியா கொடி கட்டி பறக்குது…!

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி
நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும்?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:
உங்களுக்கு ஒரு சட்டச் சிக்கல் வருது…என்ன
பண்றதுனு தெரியலை…! என்ன செய்வீங்க?
ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க…!
சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட
பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு
அவருடைய Fees வாங்குவாரு..! இல்லையா…!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு
கொடுத்தா? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா
சில வரிகள் type பண்ணின உடனே, Section-னோட
சரியான விவரங்கள Probabilities-டன் அந்த கம்ப்யூட்டர்
கொடுத்தா? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள்
தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்…!
வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி
கம்ப்யூட்டர் தெளிவாக சொல்லுமே.

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான்
செஞ்சுகிட்டு இருக்கு. ஒரு லாயரால அதிகபட்சம்
70% தான் ஒரு சட்டச் சிக்கலுக்கு தீர்வு சொல்ல
முடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை
சில வினாடில சொல்லுது…!

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்குப்படி,
இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல
90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..!
அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு
டீ போடுவாங்க ? இது ஒரு உதாரணம்தான்!!!!

ஆடிட்டர்கள் வேலையை clear tax.in, taxman.com
போன்ற இணையதளம்!,

டாக்டர்கள் வேலையை Ada app!,

ப்ரோக்கர்கள் வேலையை magic bricks, quickr,
99acres, இணையதளம்!,

கார் விற்பனையை carwale.com,
cars24 இணையதளம் !

– என ஏற்கெனவே சேவையை இலவசமாக தருகின்றன.

UBER OLA வந்த பிறகு சொந்தகார் தேவையில்லை…!

ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணி வரை
கிடைப்பதால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்…!!!

நெட்பிளிக்ஸ் வந்தபின் மேற்கத்திய நாடுகளில்
தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை….!

இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட
UTS app மூலம் எடுத்து கொள்ளலாம்.

80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம்
இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே
பாத்துக்கும். ‘Subject Matter Experts’னு சொல்லப்படற
விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்…!

2025-ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி
கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.

2019 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள்
விற்பனைக்கு வருகிறது.

அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா…
ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட
எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்களும்
நிச்சயம் பாதிக்கப்படும்!.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்:
யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்க வேண்டிய
தேவை இருக்காது,. ‘Driving License’ என்ற ஒன்று
காணாமல் போயிருக்கும்.

பார்க்கிங் பிரச்னை என்பதே இருக்காது.
ஒரு எடத்துக்கு போகணும்னா.. உங்க செல்லில் இருந்து..
ஒரு மிஸ் கால்.. இல்ல..SMS…!

அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க முன்னாடி தானா
ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போக வேண்டிய எடத்துக்கு
சமர்த்தா கொண்டு போய் விட்டுடும். கிலோமீட்டருக்கு
இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும்.
பொருட்கள் அனுப்புறது முன்பை விட சீக்கிரமாவும்
பத்திரமாவும் இருக்கும்.

இதனால என்னவாகும்ன்னா… அடிக்கடி தேவைப்படாம
பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது.
சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு
ஒருத்தனும் இருக்க மாட்டான். சிக்னல், ட்ராபிக்ஜாம்
பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம்.

‘Accident’ ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில ‘கார்
பார்க்கிங்’காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற
17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார்
வாகனங்களின் விற்பனை 90%-க்கும் கீழ
போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான்
இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும்.

எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு
நிறுவனம்தான். இப்போதே கூகுளுக்கு நீங்கள்
எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும்.
உங்கள் சிந்தனையை, நீங்கள் எடுக்கும் முடிவுகளை
தீர்மானம் செய்வது கூகுள்தான்.

எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல
7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய
மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல்
மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு
நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க…
இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட
எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு
வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்..
குறிப்பா சீனா & இந்தியா.

ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா
கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.
15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள்
5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க.
இனிமே விடுவாங்களா??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள்
பாதிப்புக்கு உள்ளாகும் ?

வேண்டாமே….
அத்தனை அதிர்ச்சிகளையும் ஒரே சமயத்தில்
தாங்க வேண்டுமா…?

மீதியை – மதியம் – அடுத்த பகுதியில் பார்ப்போமே….

.
————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அச்சமாக, அதிர்ச்சியாக, …… இருக்கிறது…!!!

  1. கிரி சொல்கிறார்:

    சார் இதில் கூறப்பட்டுள்ள அனைத்தும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன ஆனால், எவ்வளவு சீக்கிரம் எந்த நாட்டில் நடக்கும் என்பதற்கான கால அளவு வித்தியாசப்படும்.

    அதோடு சில இன்னும் தாமதமாகவும், சில எதிர்பார்த்ததை விட முன்பே நடக்கவும் வாய்ப்புள்ளது.

    இணையம் அனைத்துக்கும் முதன்மை காரணியாக இருக்கும்.

    இழப்புகள் என்பது கசப்பான உண்மை என்றாலும், அதனால் துவக்கத்தில் பல சிரமங்கள் ஏற்படலாம் ஆனால், உலக மாற்றத்துக்கு ஏற்ப மக்கள் தங்களை மாற்றிக்கொள்வார்கள், வருமானம் வரும் வழியை மாற்றிக்கொள்வார்கள்.

    கோடாக் நிறுவனம் தற்போது இல்லையென்றாலும், அதை நடத்தியவர்கள், பணி புரிந்தவர்கள் அப்படியே காணாமல் போய் விடவில்லை.

    வேறு பணியோ துறையோ மாறி தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு தான் உள்ளார்கள்.

    இதைப்போல சிரமங்கள் இருந்தாலும், மக்கள் கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களை மாற்றி பயணித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

    இதுவும் கடந்து போகும்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      உண்மை தான் கிரி.

      இந்த வளர்ச்சிகள், மாற்றங்கள் எல்லாம்
      தவிர்க்க முடியாதவை தான்.
      இருந்தாலும், சில வளர்ச்சிகள் – மிரட்சியை
      தருவதாக இருக்கின்றன.

      டெக்னாலஜியின் சில கட்டங்கள் நம்மை
      பெரும் பாதிப்புக்குள் கொண்டு
      செலுத்தி விடுகின்றன.
      உதாரணத்திற்கு,
      செல்போன்-வாட்சப்,
      ஃபேஸ்புக் போதை….

      சமுதாயம் அதிலிருந்து
      மீளும் வழி தெரியாமல்,
      இளைஞர்களை
      மீட்கும் வழி தெரியாமல்
      திகைத்துக் கொண்டிருக்கிறது.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. புதியவன் சொல்கிறார்:

    இது பொதுவாக வளர்ச்சி (என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பதை) நோக்கிச் செல்லும்போது ஏற்படும் மாற்றங்கள், அச்சங்கள்தாம்.

    88களில், 2000ம்தான் கணிணி நிபுணர்களுக்கான சம்பளம். அப்போ என்னிடம் டீல் செய்த கன்சல்டண்டண்ட்ஸ், பொதுவா, கணிணி நிபுணர்னா, கையில் ஃபாரின் விஸ்கியுடன், கலந்து ஆலோசனை, புரோகிராம் எழுதுவது என்ற லைஃப் ஸ்டைல் சில இடங்களில் இருந்தது. அப்புறம் புற்றீசல்மாதிரி கணிணி வேலை வாய்ப்புகள் பெருக, சமுதாயத்தின் பேலன்ஸ் குறிப்பிடத்தக்க அளவு மாறிவிட்டது. சம்பளங்கள் 15 ஆயிரத்திலிருந்து வேக வேகமாக 50 ஆயிரம் நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் இவர்களைப் பார்த்து மற்றவர்களின் சம்பளமும் அதிகமாகி, விலைவாசியெல்லாம் மிகவும் உயர்ந்துவிட்டன. இதெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். (98ல் என்னிடம் பெங்களூரில் ஒருவர் சொன்னார்..நான் அந்தக் காலத்தில் மெரிட்டில் எஞ்சினீயரிங் முடித்து தொடர்ந்து வேலை பார்த்து இப்போ 8900 சம்பளம் வாங்கறேன்-அவருக்கு 20 வருட அனுபவம் வேலையில். இப்போ வெறும் டிப்ளமா படித்துவிட்டு, இல்லை பி.எஸ்.ஸி படித்துவிட்டு 20,000 சம்பளம் வாங்கறாங்க. பார்க்க அநியாயமாத் தெரியுது என்றார்.

    புதிது புதிதாக வேலை வாய்ப்புகள் வரும். அதற்கு மாறத் தெரிந்தவர்கள் மாறிக்கொண்டு சமுதாயத்தில் வாழ்வார்கள். மற்றவர்கள் வாழ்க்கயில் துன்பப்படுவார்கள். எப்போதுமே survival of the fittest என்பதை நோக்கித்தான் சமுதாயம் செல்லும்.

    //செல்போன்-வாட்சப், ஃபேஸ்புக் போதை…. சமுதாயம் அதிலிருந்து மீளும் வழி தெரியாமல்,// – எல்லாம் ஒரு வட்டம்தான். பொதுவா ஒரு பொருளை உபயோகிக்க மிகுந்த திறமை வேண்டும். எதற்கு எவ்வளவு நேரம் செலவழிக்கணும், எதைச் செய்யணும் என்றெல்லாம். அது பொதுவா நமக்குக் கிடையாது. நீங்களும் நானும் எப்படி தொலைபேசி இல்லாமல், ஷவர் இல்லாமல், ஷூக்கள் இல்லாமல், பிரியாணி/பரோத்தா போன்றவை இல்லாமல் வாழ்ந்தோம்? இப்போது அனேகமா தினமும் இவை இல்லாத வாழ்க்கை இருக்கா? கணிணி சம்பந்தமாக நான் எழுதமுடியும்..ஆனால் நீளமாகிவிடும். சுருக்கமாக,

    1. கிராமியக் கூத்துகள், நாடகங்கள் பார்த்து, கேட்டு வளர்ந்தோம். அந்தக் கலைஞர்கள், தொலைக்காட்சி வந்ததும் புறக்கணிக்கப்பட்டனர்.
    2. குதிரை வண்டி, தயிர்/மோர்க்காரி, உப்பு விற்பவர், என்று வாழ்க்கையை ஓட்டினோம். இப்போ இவை அனேகமாக வழக்கொழிந்துவிட்டன. அவங்க எப்படி அவங்க வாழ்க்கையை ஓட்டியிருப்பார்கள்?
    3. பத்திரிகைகள், புத்தகங்கள் பொழுது போகஅபூர்வமாகப் படித்தோம். மிகுந்த நேரத்தில் வேலை இருந்தது. இப்போ எல்லாம் சுலபமாகக் கிடைக்குது. அதனால் பொழுது போகவில்லை. வெட்டியாக உபயோகிக்கிறோம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.